தமிழகத்தில் யமஹா, ஹீரோ, டிவிஎஸ் வாகனங்களுக்கான பதிவு நிறுத்திவைப்பு; காரணம் என்ன?

பி.எஸ்.4 எஞ்சின் கொண்ட வாகனங்களுக்கான முறையாக ஆவணங்களை சமர்பிக்காததால்,சில முன்னணி நிறுவனங்களின் இருச்சக்கர வாகனங்களுகான பதிவு தமிழகளவில் நிறுத்தி வைக்கபட்டுள்ளன.

Written By:

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் யமஹா, ஹீரோ, டிவிஎஸ் நிறுவனங்களின் இருச்சக்கர வாகனங்களுக்கான பதிவிடும் பணி கடந்த 17ம் தேதி முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

பி.எஸ்.4 எஞ்சின் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கே இனி அனுமதி வழங்கப்படும் என்ற மத்தியரசின் உத்தரவை அடுத்து, தற்போது நாட்டிலுள்ள வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்தும் பி.எஸ்.4 எஞ்சின் கொண்ட வாகனங்களை உற்பத்தி செய்து வருகின்றன.

பி.எஸ்.3 வாகனங்களுக்கான தடை உத்தரவை உச்சநீதிமன்றம் அறிவித்ததை அடுத்து, கடந்த 1ம் தேதி முதல் தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களின் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பி.எஸ்.4 எஞ்சின் கொண்ட வாகனங்கள் மட்டுமே பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 17ம் தேதி முதல் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் யமஹா, டி.வி.எஸ், ஹீரோ ஆகிய நிறுவனங்களின் இருச்சக்கர வாகனங்களை பதிவு செய்யும் பணி தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதற்கான காரணத்தை ஆராய்ந்து போது, ஆர்.டி.ஓ அலுவலகங்களுக்கு யமஹா, ஹீரோ, டிவிஎஸ் நிறுவனங்கள் பி.எஸ்.4 எஞ்சின் பொருத்தப்பட்ட தங்களது வாகனங்களை குறித்த ஆவணங்களை சரியாக சமர்பிக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனாலேயே அந்நிறுவனங்களின் இருச்சக்கர வாகன பதிவுகளை தமிழகளவில் தற்காலிமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

யமஹா, ஹீரோ மற்றும் டி.வி.எஸ் நிறுவனங்களின் பி.எஸ்.4 மற்றும் பி.எஸ்.3 எஞ்சின் கொண்ட வாகனங்கள் என்ன? அதை வேறுபடுத்தி காட்டுவதற்கான நடைமுறைகள் என்ன? என்பன போன்ற தகவல்கள் எதுவும் இதுவரை ஆர்.டி.ஓ அலுவலகங்களுக்கு கொடுக்கப்படவில்லை.

உச்சநீதி மன்றம் கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் பி.எஸ்.3 எஞ்சின் கொண்ட வாகனங்களுக்கு தடை விதித்ததை அடுத்து, மார்ச் 31ம் தேதி வரை தமிழகத்திலுள்ள அனைத்து ஆர்.டி.ஓ அலுவலகங்களிலும் பி.எஸ்.3 மற்றும் பி.எஸ் 4 எஞ்சின் கொண்ட அனைத்து ரக வாகனங்களும் பதிவு செய்யப்பட்டன.

ஆனால் உத்தரவு வெளியாகியும், சில ஆவணங்களை முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்கள் ஆர்.டி.ஓ அலுவலகங்களில் சமர்பிக்காததால் தமிழகளவில் குறிப்பிட்ட அந்த நிறுவனங்களின் இருச்சக்கர வாகனங்களை பதிவு செய்யும் பணியினை எந்தவித முன்னறிவிப்புமின்றி அதிகாரிகள் நிறுத்தி வைத்துள்ளனர்.

வாகனப் பதிவுகள் நிறுத்தி வைத்ததை அடுத்து, யமஹா நிறுவனம் முறையான ஆவணங்களை ஆர்.டி.ஓ அலுவலகங்களுக்கு அளிக்க போக்குவரத்து துறை அமைச்சரை அனுகியுள்ளது.

ஆனால் பஜாஜ் மற்றும் ஹோண்டா நிறுவனங்கள் முன்னரே தங்களது பி.எஸ்.4 எஞ்சின் பொருத்தப்பட்ட வாகனங்களின் செயல்பாடுகளுக்கான ஆவணங்களை முறையாக அளித்ததை அடுத்து அந்நிறுவனங்கள் வாகனப் பதிவு தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

 

இருப்பினும் மதுரை, கோயமுத்தூர் போன்ற பகுதிகளின் ஆர்.டி.ஓ அலுவலகங்களில் அனைத்து இருச்சக்கர வாகனங்களுக்குமான பதிவு செய்யும் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக பி.எஸ்.4 எஞ்சின் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் உத்தரவு வெளியான பின்னர், சென்னை மாநகரத்தில் இதுவரை யமஹா, டி.வி.எஸ், ஹீரோ நிறுவனங்களின் ஒரு வாகனம் கூட பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்.டி.ஓ அதிகாரிகளிடம் ஏற்பட்டுள்ள இந்த குழப்பத்தை களைய யமஹா தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. விரைவில் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் தகவல் மற்றும் உத்தரவாதங்கள் விளக்கப்பட்டு யமஹா நிறுவனத்தின் பைக்குகள், ஸ்கூட்டர்களுக்கான பதிவு செய்யும் பணி இன்னும் 2 நாட்களில் தொடங்கும் என அந்நிறுவனத்தின் விற்பனை மற்றும் மார்கெட்டிங் பிரிவுத் தலைவர் ராய் குரியன் தெரிவித்துள்ளார்.

 

Via ET Auto

அதிகம் வாசிக்கப்படும் இதர செய்திகள்...

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

Story first published: Friday, April 21, 2017, 13:47 [IST]
English summary
Tamil Nadu RTOs have stopped registering two-wheelers manufactured by Yamaha, Hero and TVS. As per reports the RTOs are seeking more clarity on the new BS-IV regulations.
Please Wait while comments are loading...

Latest Photos

LIKE US ON FACEBOOK