ஆற்றல், திறன், வடிவம் மற்றும் புதுமையுடன் இந்தியாவில் களமிறங்கும் புதிய மாடல் ஸ்கூட்டர்கள்

பிரபல வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எதிர்காலத்தை நினைவில் வைத்து தயாரித்து வரும் புதிய மாடல் ஸ்கூட்டர்களை குறித்து பார்க்கலாம்.

By Azhagar

இந்தியாவில் பைக்குகளை விட ஸ்கூட்டருக்கான விற்பனை விண்ணை எட்டி வருகிறது. அதற்கு காரணம் பெண்கள் தான்.

இந்தியாவில் விற்பனைக்கு வரும் புதிய டாப் 6 ஸ்கூட்டர்கள்

ஆண்களுக்கு பைக், மோட்டார் சைக்கிள் என்றால், பெண்கள் பலரும் விரும்புவது ஸ்கூட்டர்கள் தான். தற்போது கார்கள் கூட பெண்களுக்கு இரண்டாம் பட்சமாக மாறிவிட்டன.

இந்தியாவில் விற்பனைக்கு வரும் புதிய டாப் 6 ஸ்கூட்டர்கள்

ஸ்கூட்டர் சவாரி மீது பெண்களுக்கு அதிகரித்துள்ள இந்த மோகம், இந்தியாவில் ஸ்கூட்டர்களுக்கான மார்கெட்டை எங்கோ கொண்டு சென்று விட்டது.

இந்தியாவில் விற்பனைக்கு வரும் புதிய டாப் 6 ஸ்கூட்டர்கள்

டிராஃபிக், சாலை அமைப்புகளை காரணம் வைத்து தற்போது இளைஞர்கள், நடுத்தர வயது ஆண்கள் பலரும் ஸ்கூட்டரை பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.

இந்தியாவில் விற்பனைக்கு வரும் புதிய டாப் 6 ஸ்கூட்டர்கள்

இந்தியா போன்ற நாடுகளில் ஸ்கூட்டருக்கு உருவாகியுள்ள இந்த வரவேற்பை பயன்படுத்திக்கொண்டு, பிரபல நிறுவனங்களும் ஸ்கூட்டர் தயாரிப்பில் போட்டி போட்டுக்கொண்டு வருகின்றன.

இந்தியாவில் விற்பனைக்கு வரும் புதிய டாப் 6 ஸ்கூட்டர்கள்

அவ்வாறு விரைவில் இந்திய சந்தையில் கால்பதிக்கவுள்ள புதிய ஸ்கூட்டர் தயாரிப்புகளை குறித்த பட்டியலை பார்க்கலாம்.

ஏதேர் எஸ்340

ஏதேர் எஸ்340

இனி எதிர்காலத்தில் மின்சாரம் தான் வாகனங்களுக்கான முதன்மையான ஆற்றலை வழங்கும் என்பதால், அந்த எதிர்காலத்தை மனதில் வைத்து, ஆட்டோமொபைல் துறையில் கால்பதிக்க வருகிறது ஏதேர் எஸ்340

இந்தியாவில் விற்பனைக்கு வரும் புதிய டாப் 6 ஸ்கூட்டர்கள்

2013ம் ஆண்டில் சென்னை ஐஐடி கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் உருவாக்கிய இந்த ஸ்கூட்டர் பல்வேறு மாறுதலுக்கு பிறகு தற்போது இறுதி வடிவம் பெற்றுள்ளது.

இந்தியாவில் விற்பனைக்கு வரும் புதிய டாப் 6 ஸ்கூட்டர்கள்

கடந்தாண்டில் இந்த மின்சார ஸ்கூட்டருக்கு ஏதேர் எஸ்340 என்று பெயர் சூட்டப்பட்டது. முற்றிலும் இந்தியாவில் தயாரான இதில் 90 சதவீத பொருட்கள் மறுசுழற்சி முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனைக்கு வரும் புதிய டாப் 6 ஸ்கூட்டர்கள்

ஏதேர் எஸ்340 ஸ்கூட்டருக்கான மின்சார ஆற்றலை வழங்கும் லித்தியம்-ஐயன் பேட்டரி மற்றும் வெளிநாட்டில் இருந்து பெறப்பட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனைக்கு வரும் புதிய டாப் 6 ஸ்கூட்டர்கள்

எக்னாமி மற்றும் ஸ்போர்ட் என இரண்டு மோடுகளில் இந்த ஸ்கூட்டரை நீங்கள் இயக்கலாம்.

தேர்வுகளுக்கு ஏற்றவாறு ஏதேர் எஸ் 340 ஸ்கூட்டர் 3 கிலோ வாட் முதல் 5 கிலோ வாட் மின்சாரத்தை வழங்கும்.

இந்தியாவில் விற்பனைக்கு வரும் புதிய டாப் 6 ஸ்கூட்டர்கள்

தேர்வுகளுக்கு ஏற்றவாறு சாலை பயணம், உறுதியான பிரேக்கிங் அமைப்பு, மோனோ ஸாக் சஸ்பென்ஷன் போன்ற பாதுகாப்பு அம்சங்களும் இந்த ஸ்கூட்டரில் உள்ளன.

இந்தியாவில் விற்பனைக்கு வரும் புதிய டாப் 6 ஸ்கூட்டர்கள்

ஒருமணிநேரம் வரை நாம் சார்ஜ் செய்தோமானால் ஏதேர் எஸ்340 ஸ்கூட்டரில் 80 கிலோ மீட்டர் வரை தாரளமாக பயணிக்கலாம்.

சார்ஜிங்கை மேலும் அதிகரிக்க ஒரு மணி நேரம் கூடுதலாக நாம் பேட்டரிக்கு சார்ஜ் செய்யவேண்டும்.

இந்தியாவில் விற்பனைக்கு வரும் புதிய டாப் 6 ஸ்கூட்டர்கள்

ஏதேர் எஸ்340 ஸ்கூட்டர் ஒரு மணிநேரத்தில் 72 முதல் 100 கிலோ மீட்டர் வரை வேகமாக செல்லக்கூடிய திறன் பெற்றது. மேலும் இதில் 14என்.எம் டார்க் திறன் நமக்கு கிடைக்கும்.

இந்தியாவில் விற்பனைக்கு வரும் புதிய டாப் 6 ஸ்கூட்டர்கள்

2016ம் ஆண்டு நடைபெற்ற ஆட்டோமொபைல் கண்காட்சியின் போது ஹீரோ டூயட் இ ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது.

முற்றிலும் மின்சாரத்தால் இயக்கும் திறன் கொண்ட இது, ஹீரோவின் டூயட் ஸ்கூட்டரை மாடலாக வைத்து உருவாக்கப்பட்டது.

இந்தியாவில் விற்பனைக்கு வரும் புதிய டாப் 6 ஸ்கூட்டர்கள்

6.5 நொடிகளில் 0 முதல் 60 கிலோ மீட்டரை அடையும் ஆற்றல் பெற்ற இந்த டூயட் இ ஸ்கூட்டரிலுள்ள எலெக்ட்ரிக் மோட்டார் 5 கிலோ வாட் பவர் மற்றும் 14 என்.எம் டார்க் திறன் தர வல்லது.

இந்தியாவில் விற்பனைக்கு வரும் புதிய டாப் 6 ஸ்கூட்டர்கள்

மேலும் இந்த ஸ்கூட்டர் அறிமுகமானபோது, அந்த எக்ஸ்போவில் ஒருமுறை சார்ஜ் செய்தால் 65 கிலோ மீட்டர் வரை இயக்கலாம் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனைக்கு வரும் புதிய டாப் 6 ஸ்கூட்டர்கள்

தற்போதைய தொழில்நுட்பத்தின் படி டுயர் இ ஸ்கூட்டரின் மின்சார மோட்டார் மற்றும் பேட்டரி ஆகியவை இணைந்து பணிபுரியும் ஆற்றலுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனைக்கு வரும் புதிய டாப் 6 ஸ்கூட்டர்கள்

தயாரிப்பு நிலையிலே மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ள இந்த ஸ்கூட்டர் இந்திய வாடிக்கையாளர்களிடம் மிகுந்த வரவேற்பை பெறும் என ஹீரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் விற்பனைக்கு வரும் புதிய டாப் 6 ஸ்கூட்டர்கள்

மேலும் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான அனைத்து அம்சங்களுடன் இது தயாராகி வருவதால், மத்திய அரசாங்கமும் இதற்கான விற்பனை ஊக்குவிக்கும் என்பது ஹீரோவின் நிலைபாடாக உள்ளது.

டி.வி.எஸ் டார்க் 210

டி.வி.எஸ் டார்க் 210

2016ல் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் டிவிஎஸ் நிறுவனமும் தனது புதிய ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது. அதிரடியான தோற்றம் கொண்ட இந்த ஸ்கூட்டருக்கு இ.என் டார்க் 210 என பெயரிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனைக்கு வரும் புதிய டாப் 6 ஸ்கூட்டர்கள்

நமக்கு கிடைத்திருக்கும் தகவலின் படி, எதிர்காலத்திற்கான கட்டமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டருக்கான தயாரிப்பு பணிகளை, டி.வி.எஸ் உடனே தொடங்காது என தெரிகிறது.

இந்தியாவில் விற்பனைக்கு வரும் புதிய டாப் 6 ஸ்கூட்டர்கள்

முற்றிலும் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் தோற்றத்துடன் இ.என். டார்க் 210 ஸ்கூட்டரை டி.வி.எஸ் தயாரித்துள்ளது.

டியூப்லெஸ் டயர்கள் கொண்டு இதற்கான சக்கர அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் தானாக இயங்கக்கூடிய வகையில் டூயல் டிஸ்க் பிரேக் அமைப்புகள் இதில் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் விற்பனைக்கு வரும் புதிய டாப் 6 ஸ்கூட்டர்கள்

ஸ்மார்ட் ஃபோனுடன் ஒருங்கிணைத்துக்கொள்ளக் கூடிய வசதி, ஜி.பி.எஸ் வசதி போன்று ஆன்லைனுடன் ஸ்கூட்டரை இணைத்துக்கொள்ளக் கூடிய தொழில்நுட்பம் இதில் உள்ளது.

இந்தியாவில் விற்பனைக்கு வரும் புதிய டாப் 6 ஸ்கூட்டர்கள்

டி.வி.எஸ் இ.என் டார்க் 210 ஸ்கூட்டருக்கான ஆற்றலைக்குறித்து பார்த்தோமென்றால், அலுமனியத்தால் ஆன 212.5 சிசி எஞ்சின் இதில் உள்ளது.

இந்தியாவில் விற்பனைக்கு வரும் புதிய டாப் 6 ஸ்கூட்டர்கள்

மேம்பட்ட வேரியோமாடிக் டிரான்ஸ்மிஷன் கியர்பாக்ஸ் இதில் பொருத்தப்படுகிறது. 8.5 லிட்டர் எரிவாயு கொள்ளவு திறன் பெற்ற இந்த ஸ்கூட்டரில் நாம் ஒரு மணிநேரத்தில் 120 கிலோ மீட்டரை அடையலாம்.

டி.வி.எஸ் இஎன் டார்க் 125

டி.வி.எஸ் இஎன் டார்க் 125

டி.வி.எஸ் இஎன் டார்க் 210 போன்றே அதே வடிவத்தில், அதற்கான கட்டமைப்புடன் டி.வி.எஸ் நிறுவனம் தயாரித்து வரும் மற்றொரு ஸ்கூட்டர் தான் டி.வி.எஸ் இஎன் டார்க் 125.

இந்தியாவில் விற்பனைக்கு வரும் புதிய டாப் 6 ஸ்கூட்டர்கள்

இதற்கான தயாரிப்பு பணிகளை டி.வி.எஸ் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆக்டிவா, ஆக்சஸ் போன்ற ஸ்கூட்டர்களில் உள்ள 125சிசி திறன் கொண்ட எஞ்சின் தான் இஎன் டார்க் 125 ஸ்கூட்டரிலும் உள்ளது.

இந்தியாவில் விற்பனைக்கு வரும் புதிய டாப் 6 ஸ்கூட்டர்கள்

புதியதாக வெளிவரும் ஸ்கூட்டராக மட்டுமில்லாமல், 33 ஆண்டுகாலமாக ஆட்டோமொபைல் உலகில் ஆட்சி செய்து வரும் டிவிஎஸ் நிறுவனத்தில் பாரம்பரிய அடையாளமாகவும் இஎன் டார்க் 125 ஸ்கூட்டர் பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் விற்பனைக்கு வரும் புதிய டாப் 6 ஸ்கூட்டர்கள்

எதிர்கால ஆட்டோமொபைல் உலகிற்கான வரவாக தயாராகி வரும் இஎன் டார்க் 125 ஸ்கூட்டரின் எஞ்சின் முழுவதும் அலுமினியம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனைக்கு வரும் புதிய டாப் 6 ஸ்கூட்டர்கள்

சி.வி.டி தொழில்நுட்பம் கியர் பாக்ஸ் கொண்ட இதில் இ.என் டார்க் 210 ஸ்கூட்டர் போன்று 8.5 லிட்டர் கொள்ளவு கொண்டே எரிவாயுவிற்கான டாங்கும் உருவாக்கப்பட்டுள்ளது.

வெஸ்பா ஜி.டி.எஸ் 300

வெஸ்பா ஜி.டி.எஸ் 300

இத்தாலிய நிறுவனமான பியாகியோ வெளியிடும் புதிய ஸ்கூட்டர் மாடல் தான் வெஸ்பா ஜி.டி.எஸ் 300. உயர் ரக மாடலாக இருக்கும் இது பழங்கால (ரெட்ரோ) வடிவம் கொண்டு தயாராகிப்பட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனைக்கு வரும் புதிய டாப் 6 ஸ்கூட்டர்கள்

278சிசி திறன் கொண்ட எஞ்சின் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் 21 பி.எச்.பி பவர் மற்றும் 22.3 என்.எம் டார்க் திறன் கிடைக்கும்.

இந்தியாவில் விற்பனைக்கு வரும் புதிய டாப் 6 ஸ்கூட்டர்கள்

எல்.சி.டி டிஸ்பிளே, டுயல் சேனல் கொண்ட ஏபிஎஸ் தொழில்நுட்பம் என பல முக்கிய தொழில்நுட்பங்களுடன் கூடிய ஸ்கூட்டராக வெஸ்பா ஜி.டி.எஸ் 300 உள்ளது.

இந்தியாவில் விற்பனைக்கு வரும் புதிய டாப் 6 ஸ்கூட்டர்கள்

வெஸ்பா வரிசையில் உள்ள மற்றொரு மாடலான எம்போரியா அர்மானி ஸ்கூட்டரில் விலை இந்திய மதிப்பில் ரூ.12 லட்சம்.

இந்தியாவில் விற்பனைக்கு வரும் புதிய டாப் 6 ஸ்கூட்டர்கள்

தற்போது புதிய வெஸ்பா ஜி.டி.எஸ் 300 ஸ்கூட்டரின் விலை ரூ. 4 லட்சமாக உள்ளது. இதனாலேயே இந்திய சந்தையில் இந்த ஸ்கூட்டர் பெரிய வரவேற்பு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹீரோ இசட்.ஐ.ஆர். 150

ஹீரோ இசட்.ஐ.ஆர். 150

150சிசி உடன் கூடிய ஸ்கூட்டர் வரிசையில் ஹீரோ நிறுவனம் தயாரித்திருக்கும் புதிய மாடல் தான் ஹீரோ இசட்.ஐ.ஆர். 150.

ஹோண்டாவின் பி.சி.எக்ஸ் 150 மாடலுக்கு போட்டியாக ஹீரோ நிறுவனம் இந்த ஸ்கூட்டரை தயாரித்துள்ளது.

இந்தியாவில் விற்பனைக்கு வரும் புதிய டாப் 6 ஸ்கூட்டர்கள்

சமமான தரையிறக்கத்துடன் மற்றும் ஐரோப்பிய முறையிலான படி முறை என இரண்டு வகையான தோற்றங்களுடன் ஹீரோ இசட்.ஐ.ஆர். 150 ஸ்கூட்டரை தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனைக்கு வரும் புதிய டாப் 6 ஸ்கூட்டர்கள்

150சிசி ஆற்றலுடன் தயாரிக்கப்பட்டுள்ள இதனுடைய எஞ்சின் 13.8 பி.எச்.பி பவர் மற்றும் 12.7 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

இந்தியாவில் விற்பனைக்கு வரும் புதிய டாப் 6 ஸ்கூட்டர்கள்

இரண்டும் ஒன்றுபட்ட முகப்பு விளக்குகள், வால் பகுதியில் எல்.இ.டியில் மறைந்து எரியும் விளக்குகள் என கவனமீர்க்கும் அம்சங்களும் இதில் அற்புதமாக உள்ளன.

இந்தியாவில் விற்பனைக்கு வரும் புதிய டாப் 6 ஸ்கூட்டர்கள்

முற்றிலும் எதிர்கால சாலை அமைப்புகளை குறிவைத்து உருவாக்கபப்ட்டு வரும் இந்த ஸ்கூட்டர்களை விரைவில் சந்தைப் படுத்தும் முனைப்பில் உள்ளது ஹீரோ

இந்தியாவில் விற்பனைக்கு வரும் புதிய டாப் 6 ஸ்கூட்டர்கள்

மோட்டார் சைக்கிள்களுக்கு போட்டியாக இங்கே நாம் பார்த்த ஸ்கூட்டர்கள் தேர்ந்த கவனமீர்ப்பவையாக உள்ளன. குறிப்பாக மோட்டார் சைக்கிள்களை விட இதில் மின்சார் ஆற்றல் எளிதாக பயன்படுத்தக்கூடிய வசதி உள்ளதால், வருங்காலத்தில் பைக்குகளை விட ஸ்கூட்டரின் நகர்வு மிக அதிகமாக இருக்கும் என நிலை தற்போதே தெரிகிறது.

Most Read Articles
English summary
Upcoming scooters in India. Which includes power, specifications, technology, New inventions. Click for the detials...
Story first published: Thursday, May 4, 2017, 13:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X