புதிய 2017டிரையம்ப் ஸ்ட்ரீட் டிரிபிள் பைக்கின் இந்திய வெளியியீட்டு தேதி அறிவிப்பு

இந்தியாவில் ஸ்ட்ரீட் டிரிபிள் சூப்பர் பைக் வெளியிடப்படும் தேதியை அறிவித்துள்ளது டிரையம்ப் மோட்டார் சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம். அது குறித்த தகவல்களை காணலாம்.

Written By:

சூப்பர் பைக் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள டிரையம்ப் மோட்டார் சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம், தனது புதிய 2017டிரையம்ப் ஸ்ட்ரீட் டிரிபிள் பைக்கினை இந்தியாவில் வரும் ஜூன் - ஜூலை மாதவாக்கில் வெளியிடுகிறது. உலகளவில் பிரபலமான இந்த பைக் தற்போது இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. இதில் எஸ், ஆர் மற்றும் ஆர்எஸ் என 3 வேரியண்டுகள் உள்ளன.

இதன் ஆரம்ப நிலை வேரியண்டான டிரையம்ப் ஸ்ட்ரீட் டிரிபிள் -எஸ் முதலில் அறிமுகமாகும் என அறிவிக்கப்படுள்ளது. இந்த வேரியண்ட் பைக் அதிகபட்சமாக 111 பிஹச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன்மிக்க எஞ்சின் கொண்டதாகும்.

டிரையம்ப் ஸ்ட்ரீட் டிரிபிள் ஆர் மற்றும் ஆர்எஸ் வேரியண்டுகளில் முறையே 116 மற்றும் 121 பிஹச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் எஞ்சின் உள்ளது. இந்த 3 வேரியண்டுகளிலும் 3 சிலிண்டர்கள் கொண்ட புதிய 765சிசி எஞ்சின் உள்ளது. இவ்வகை எஞ்சின் டேடோனா 675 மாடல் எஞ்சினை அடிப்படையாகக்கொண்டது.

ஸ்ட்ரீட் டிரிபிள் பைக்கின் நடுத்தர வேரியண்டான ஆர்எஸ் பைக்கில் 310எம்எம் முன்பக்க டிஸ்க், 220 எம்எம் பின்பக்க பிரெம்போ டிஸ்க் பிரேக்குகள் உள்ளது, பின்புற மோனோஷாக் சஸ்பென்ஷன், பிரண்ட் ஃபோர்க் என புதிய பாகங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆர்எஸ் வேரியண்டில் ரைடு ஃபை வயர், ட்ராக்‌ஷன் கண்ட்ரோல், ஸ்விட்சபில் ஏபிஎஸ் பிரேக், புரோக்கிராம் செய்யும்வகையிலான டிரைவிங் மோடுகள், மற்றும் டிஎஃப்டி டிஜிட்டல் இன்ஸ்ட்ருமெண்ட் கன்சோல் என பல சிறப்புகளை கொண்டதாக உள்ளது. மேலும் பகலில் எரியும் வகையிலான எல்ஈடி முகப்பு விளக்கும் இதில் உள்ளது.

டிரையம்ப் ஸ்ட்ரீட் டிரிபிள் பைக்குகள் முதன் முதலில் 2007 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரையில் 50,000 பைக்குகள் உலகலவில் விற்பனையாகியுள்ளன. இந்தியாவில் இவ்வகை பைக்குகள் 2013ல் அறிமுகமானது, 400 பைக்குகள் விற்பனையாகியுள்ளன.

தற்போது இந்தியாவில் கிடைக்கக்கூடிய மாடலின் விலை ரூ.7.91 லட்சமாகும், புதிய மாடலின் விலையை பொருத்தவரை டிரிபிள்-எஸ் வேரியண்ட் ரூ.9.5 லட்சமாகவும், ஆர்எஸ் வேரியண்ட் ரூ. 12.5 லட்சமாகவும் இருக்கும். (அனைத்தும் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை)

புதிய 2017டிரையம்ப் ஸ்ட்ரீட் டிரிபிள் பைக்குகள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் அவை டுகாட்டி மான்ஸ்டர் 821 மற்றும் வரவிருக்கும் கவாசகி இசட்900 மாடல்களுக்கு போட்டியாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரையம்ப் போனெவில்லே பாபர் மாடல் பைக்கின் படங்கள்:

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
The 2017 Triumph Street Triple will be launched in India in June and will be available in 3 versions - S, R and RS.
Please Wait while comments are loading...

Latest Photos

LIKE US ON FACEBOOK