மேம்படுத்தப்பட்ட 2017 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 180, ஆர்டிஆர் 160 பைக்குகள் அறிமுகம்!

டிவிஎஸ் நிறுவனம் பிஎஸ்-4 தரத்தில் மேம்படுத்தப்பட்ட அப்பாச்சி ஆர்டிஆர் 160 மற்றும் ஆர்டிஆர் 180 பைக்குகளை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. அது குறித்த தகவல்களை காணலாம்.

By Arun

டிவிஎஸ் நிறுவனத்தின் பெர்ஃபார்மன்ஸ் பைக் பிரிவான அப்பாச்சி சீரீஸை பிஎஸ்-4 தரத்தில் முற்றிலும் மேம்படுத்தியுள்ளது டிவிஎஸ் நிறுவனம்.

மேம்படுத்தப்பட்ட டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் பைக்குகள் அறிமுகம்!

தமிழகத்தை சேர்ந்த டிவிஎஸ் நிறுவனம், இருசக்கர வாகன தயரிப்பில், இந்திய அளவில் முக்கிய இடம் வகிக்கிறது. மக்களின் நம்பகத்தன்மையை பெற்ற இந்நிறுவனம், தனது மேம்படுத்தப்பட்ட புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 மற்றும் ஆர்டிஆர் 180 பைக்குகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

மேம்படுத்தப்பட்ட டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் பைக்குகள் அறிமுகம்!

150 - 200சிசி பைக் பிரிவில் அப்பாச்சி பைக்குகள் நிலையான இடத்தை பிடித்துள்ளன. நேர்த்தியான ஸ்டைலிங் அம்சங்களுடன் சிறப்பான பெர்ஃபாமென்ஸ் தரவல்ல அப்பாச்சி பைக்களில் பாரத் ஸ்டேஜ்-4 இஞ்சின் மற்றும் ஆட்டோமேடிக் ஹெட்லைட் ஆகியவை புதிய அம்சங்களாக சேர்க்கப்பட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் பைக்குகள் அறிமுகம்!

பழைய பைக்குகளுடன் ஒப்பிடும்போது, பைக்கின் தோற்றம் மற்றும் மெக்கானிக்கல் அம்சங்களில் எவ்வித மாற்றங்களும் இல்லை, ஆனால் பாரத் ஸ்டேஜ்-4 தரத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளதால் முன்பைவிட விலையில் ஏற்றம் கண்டிருக்கிறது. முதலில் பைக்கின் சிறப்புகள் குறித்து காணலாம்.

மேம்படுத்தப்பட்ட டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் பைக்குகள் அறிமுகம்!

புதிய அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக்கில் ஒற்றை சிலிண்டர் கொண்ட 159.7சிசி பிஎஸ்-4 தர இஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 15 பிஹச்பி ஆற்றலையும், 13.1 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இதில் உள்ளது.

மேம்படுத்தப்பட்ட டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் பைக்குகள் அறிமுகம்!

17 இஞ்ச் அலாய் வீல்கள் கொண்ட இந்த பைக்கில் ட்யூப்லஸ் டயர்கள் கொடுக்கப்பட்டுள்ளது. 165 மிமீ கொண்ட வீல் பேஸ் மற்றும் சிறந்த ரைடிங் பொசிஷன் கொண்ட சீட் அமைப்பு, பைக்கை எளிதாக ஹேண்ட்லிங் செய்ய உதவுகிறது.

மேம்படுத்தப்பட்ட டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் பைக்குகள் அறிமுகம்!

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக் 6 வண்ணங்களில் கிடைக்கிறது. அவை கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.

  • வெள்ளை
  • கருப்பு
  • கிரே
  • சிவப்பு
  • மஞ்சள்
  • மேட் புளூ
  • மேம்படுத்தப்பட்ட டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் பைக்குகள் அறிமுகம்!

    இதே போல மேம்படுத்தப்பட்ட அப்பாச்சி ஆர்டிஆர் 180 பைக்கில் ஒற்றை சிலிண்டர் கொண்ட 177.4சிசி பிஎஸ்-4 தர இஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 17 பிஹச்பி ஆற்றலையும், 15.5 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இதில் உள்ளது.

    மேம்படுத்தப்பட்ட டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் பைக்குகள் அறிமுகம்!

    ஆர்டிஆர் 180 பைக் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொண்ட வேரியண்டில் கிடைக்கிறது. இதன் ஏபிஎஸ் வேரியண்ட் டூயல் சேனல் ஏபிஎஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேம்படுத்தப்பட்ட டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் பைக்குகள் அறிமுகம்!

    மேம்படுத்தப்பட்ட 2017 அப்பாச்சி ஆர்டிஆர் 180 பைக் 4 வண்ணங்களில் கிடைக்கிறது. அவை..

    • வெள்ளை
    • கருப்பு
    • மேட் கிரே
    • மேட் புளூ
    • விலைவிபரம்

      விலைவிபரம்

      2017 அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக் ரூ. 75,089 என்ற விலையில் கிடைக்கிறது.

      2017 அப்பாச்சி ஆர்டிஆர் 180 பைக் ரூ. 80,019 என்ற விலையில் கிடைக்கிறது.

      மேம்படுத்தப்பட்ட டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் பைக்குகள் அறிமுகம்!

      இதேபோல, ஆர்டிஆர் 180 பைக்கின் ஏபிஎஸ் வேரியண்ட் ரூ.90,757 என்ற விலையில் கிடைக்கிறது.

      முன்னதாக அறிமுகப்படுத்தப்பட்ட 2017 அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக் ரூ.92,215 என்ற விலையில் கிடைக்கிறது.

      (விலை அனைத்தும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் தரப்பட்டுள்ளது)

      மைலேஜ்

      மைலேஜ்

      அதிகபட்சமாக மணிக்கு 118 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக் லிட்டருக்கு 50 கிமீ தருவதாக டிவிஎஸ் நிறுவனம் கூறுகிறது.

      இதே போல மணிக்கு அதிகபட்சமாக 124 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய அப்பாச்சி ஆர்டிஆர் 180 பைக், லிட்டருக்கு 47 கிமீ தருவதாக அந்நிறுவனம் கூறுகிறது.

Most Read Articles
English summary
Read in Tamil about facelifted Tvs Apache RTR 160, RTR 180 bike launch in india. price, mileage, colors, specs and more.
Story first published: Thursday, April 13, 2017, 18:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X