மேம்படுத்தப்பட்ட புதிய 2017 அப்பாச்சி ஆர்டிஆர் 4வி பைக் விற்பனைக்கு அறிமுகம்

மேம்படுத்தப்பட்ட புதிய அப்பாச்சி ஆர்டிஆர் 4வி பைக்கை டிவிஎஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அது குறித்த தகவல்களை காணலாம்.

Written By:

தமிழ்நாட்டைச் சேர்ந்த டிவிஎஸ் நிறுவனம் இருசக்கர வாகனங்கள் தயரிப்பில் இந்தியாவிலேயே முக்கிய இடத்தை வகிக்கிறது. மக்களின் நம்பகத்தன்மையை பெற்ற நிறுவனமாக விளங்கும் டிவிஎஸ் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு முதன்முறையாக அப்பாச்சி ஆர்டிஆர் 200 விடி பைக் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படது. 200 - 250 சிசி பிரிவில் நல்ல பெர்ஃபார்மன்ஸ் பைக்காக விளங்கும் இதனை தற்போது மேம்படுத்தி வெளியிட்டுள்ளனர்.

டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V என்றால் டிவிஎஸ் அப்பாச்சி Racing Throttle Response 200 4 Valve என்பதாகும் . அப்பாச்சி சீரிஸ் பைக்கில் முதன்முறையாக 4 வால்வுகளை பயன்படுத்தியுள்ளதால் 4V என்பதனை டிவிஎஸ் மோட்டார் இணைத்துள்ளது.

புதிய 2017 அப்பாச்சி ஆர்டிஆர் 200 விடி பைக்கில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்திய மோட்டார் வாகன விதிப்படி பாரத் ஸ்டேஜ்-4 மாசு உமிழ்வு தர சான்று பெற்ற இஞ்சின் மற்றும் ஆட்டோமேடிக் ஹெட்லைட் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இந்த புதிய அப்பாச்சி பைக்கில் ஏற்கெனவே பொருத்தப்பட்டிருந்த டிவிஎஸ் ரெமோரா டயர்களுக்கு பதிலாக பைரெலி டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதைத் தவிர குறிப்பிடத்தக்க மாறுதல்கள் எதுவும் இந்த பைக் பெற்றிருக்கவில்லை.

மேலும், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் பியூயல் இஞ்செக்டட் மோட்டார் கொண்ட அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கின் டாப் எண்ட் மாடல் எப்போது அறிமுகமாகும் என்ற தகவலை டிவிஎஸ் நிறுவனம் வெளியிடவில்லை.

இந்த மேம்படுத்தப்பட்ட அப்பாச்சி பைக்கில் ஒற்றை சிலிண்டர் கொண்ட 198சிசி ஆயில் கூல்டு இஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 20 பிஹச்பி ஆற்றலையும், 18 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாகும். இதில் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது.

இந்திய மோட்டார் வாகன விதிகளின் படி தயாரிக்கப்பட்ட இந்த பைக்கில் பிஎஸ்-4 சான்று பெற்ற இஞ்சின் மற்றும் ஆட்டோமேடிக் ஹெட்லைட் உள்ளது. வேறு எந்த ஸ்டைல் அப்கிரேடும் இதில் இல்லை.

புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 4வி பைக் 2,050 மிமீ நீளமும், 790 மிமீ அகலமும், 1,105 மிமீ உயரமும் கொண்டது. இதன் வீல் பேஸ் 1,353 மிமீ ஆகும்.

200-250சிசி பைக் செக்மெண்டில் சிறந்து விளங்கும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 4வி பைக் ரூ.97,800 ( மும்பை எக்ஸ் ஷோரூம்) என்ற விலையில் கிடைக்கும்.

வாசகர்கள் படித்துவரும் மேலும் சில சுவாரஸ்யமான செய்திகள்...

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் காரான புதிய ஐ8 காரின் படங்களை காணலாம்..

 

 

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
The new Apache RTR 200 4V is shod with Pirelli tyres instead of the standard TVS Remora rubber.
Please Wait while comments are loading...

Latest Photos