ஜூலையில் விற்பனைக்கு வரும் அப்பாச்சி 310 ஆர்.டி.ஆர் பைக்கின் புகைப்படங்கள் வெளியானது

Written By:

2016ம் ஆண்டு டெல்லி ஆட்டோமொபைல் கண்காட்சியில் அகுலா 310 என்ற பெயரில் டி.வி.எஸ் நிறுவனம் வெளியிட்ட ஸ்போர்ட்ஸ் மாடல் பைக்கான அப்பாச்சி ஆர்.டி.ஆர் 310-ன் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. வரும் ஜூலை மாதம் விற்பனை வரவிருக்கும் இந்த பைக்கின் சோதனை ஓட்டம் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

டி.வி.எஸ் நிறுவனத்திற்கு சொந்தமான சர்வீஸ் மையத்திலிருந்து வெளியான இந்த புகைப்படங்கள், இணையதளங்களில் வைரலாகியுள்ளன. புதிய அப்பாச்சி ஆர்.டி.அர் 310, டிவிஎஸ் மற்றும் பிஎம்டபுள்யூ நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வரும் பிஎம்டபுள்யூ ஜி310 ஆர் பைக்கின் ஃபேரிங் ரக மாடலாகும்.

ரேஸ் பைக்குகளுக்கான சிறப்பம்சங்களுடன், கார்பன் ஃபைர் கட்டமைப்பில் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்.டி.அர் 310 பைக் உருவாக்கப்பட்டுள்ளது. 313சிசி எஞ்சினில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பைக் 34 பி.எச்.பி பவர் மற்றும் 28 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். மேலும் இதில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

அப்பாச்சி ஆர்.டி.அர் 310 பைக்கின் முகப்பில் புராஜெக்டர் விளக்குடன் கூடிய வின்ட்ஷீல்டு அமைப்பு, அவற்றுடன் எல்இடி ரன்னிங் விளக்கு ஆகியவை இடம்பெற்றுள்ளது. பின் சக்கரங்களுக்கான மோனா ஷாக் ரியர் அப்ஸபர் உள்ளது.

டி.வி.எஸ், பி.எம்.டபுள்யூ கூட்டணியில் ஓசூர் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வரும் பிஎம்டபுள்யூ ஜி310 ஆர் பைக்குடன் அதே இடத்தில் தான் அகுலா கான்சப்பட்டில் வடிவமைப்பட்டுள்ள அப்பாச்சி ஆர்.டி.ஆர் 310 மோட்டார் சைக்கிளுக்கான தயாரிப்பு பணிகளும் நடைபெற்று வருகின்றன.

2 அலகுகளில் தயாரிக்கப்பட்டுள்ள பைக்குகளில் ஒன்று மேட்டாலிக் நீல நிறத்திலும், மற்றோரு அலகு மேட்டாலிக்கான க்ரே நிறத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. வரும் ஜூலை மாதம் விற்பனைக்கு வரவுள்ள அப்பாச்சி ஆர்.டி.ஆர் 310 மோட்டார் சைக்கிளின் விலை ரூ. 1.5 லட்சத்திலிருந்து ரூ. 1.8 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Images Via Facebook

மேலும்... #டிவிஎஸ் #tvs
Story first published: Monday, April 10, 2017, 11:02 [IST]
English summary
TVS is all set to launch its first fully faired motorcycle, the Aoache RTR 310 in India. Ahead of that the motorcycle has been spied at a dealership stockyard.
Please Wait while comments are loading...

Latest Photos