ஜூப்பிட்டர் மற்றும் வீகோ ஸ்கூட்டர் பிரேக்குகளில் டி.வி.எஸ் செய்த புதுமை: காரணம் என்ன?

Written By:

ஒரே நேரத்தில் முன் மற்றும் பின் சக்கரங்களின் பிரேக்குகள் செயல்படக்கூடிய ஒருங்கிணைந்த பிரேக் அமைப்பிற்கு 'சிங்க் பிரேக் சிஸ்டம்' என்று பெயர்.

ஆங்கிலத்தில் எஸ்.பி.எஸ் என்று அழைக்கப்படும் இந்த தொழில்நுட்பத்தை டிவிஎஸ் நிறுவனம் ஜூப்பிட்டர் மற்றும் வீகோ ஸ்கூட்டரில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த இரு ஸ்கூட்டர்களின் அனைத்து மாடல்களிலுமே எஸ்.பி.எஸ் தொழில்நுட்பத்தை டி.வி.எஸ் பொருத்தியுள்ளது.

இந்தியாவில் எஸ்.பி.எஸ். தொழில்நுட்பத்தை ஏற்கனவே ஹோண்டாவின் மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்களில் உள்ளன.

ஹோண்டாவிற்கு பிறகு எஸ்.பி.எஸ். அமைப்பு டி.வி.எஸ் தயாரிப்புகளில் இடம்பெறுகிறது. ஆனால் ஹோண்டா நிறுவனம் இதை சி.பி.எஸ் என்ற பெயர் சுருக்கத்தில் குறிப்பிடுகிறது. 

அதன் விரிவாக்கம் காம்பி-பிரேக் சிஸ்டம். எஸ்.பி.எஸ் மற்றும் சி.பி.எஸிற்கு ஒரே அர்த்தம் தான் என்றாலும் இந்திய ஆட்டோமொபைல் உலகம் சி.பி.எஸ் என்றால் சட்டென புரிந்துக்கொள்ளும்.

ஹோண்டா இந்த புதிய பிரேக் அமைப்பை மேலும் ஒரு பெயரில் குறிப்பிடுக்கிறது. அதாவது ஹோண்டா இதை ஐ.பி.எஸ் ( Integrated Braking System) எனவும் சொல்கிறது. 

சிங்க்(Sync) , காம்பி(Combi), இண்டேகிரேடட் (Integrated) போன்ற ஆங்கில வார்த்தைகளுக்கு தமிழில் ஒருங்கிணைந்த என்ற பொருள் வரக்கூடிய ஒரே அர்த்தன் தான். 

தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெறும் நேரத்தில் டெக் உலகம் சில தேவைகளைக் கருதி இப்படிப்பட்ட பெயர்களை உருவாக்கி விடுகிறது.

எஸ்.பி.எஸ் அமைப்பு என்பது நீங்கள் முன் பிரேக்கை அழுத்து போது, அது முன் பகுதி மற்றும் பின் பகுதி என வாகனத்தில் தனித்தனியே இயங்காமல், இரு பகுதிகளுக்கும் ஒருங்கே இயங்கும். 

இதன் காரணமாக அதிக டிராஃபிக்கில் பயணம், அவசர கால நேர டிரைவிங் மற்றும் கட்டுப்பாடான டிரைவிங் போன்ற சூழ்நிலைகளில் நீங்கள் இருந்தால் அதில் எந்த சிரமமுமின்றி எஸ்.பி.எஸ் மீது பாரத்தை   போட்டு வண்டி ஓட்டலாம்.

இரு சக்கரத்திற்கான பிரேக்குகளில் எதாவது ஒன்றை ஓட்டுநர் அழுத்தினாலும், பைக்கின் மீது இருக்கும் விசையை எஸ்.பிஎஸ் குறைத்துவிடும் என்கிறது டி.வி.எஸ்.

டிவிஎஸ் நிறுவனம் சிங்க் பிரேக் அமைப்பை முதலில் வீகோ ஸ்கூட்டரில் மட்டுமே பொருத்தி இருந்தது. தற்போது ஜூப்பிட்டர் இசட்.எக்ஸிற்கு வரவேற்பு குவியவே அதிலும் எஸ்.பி.எஸை பொருத்தி உள்ளது.

தற்போது இந்த இரு மாடல்களுக்குமான ஸ்கூட்டர்களில் எஸ்.பி.எஸ் பொருத்தப்பட்டு இருப்பதால் அதனுடைய விலையில் ஏதேனும் மாற்றம் இருக்குமா என்று தெரியவில்லை.

தற்போது ஜூப்பிட்டர் ஸ்கூட்டரின் விலை அடிப்படையில் ரூ.49,966 ஆக உள்ளது. இதே இசட்.எக்ஸ் ட்ரீம் மாடலின் விலை என்றால் அது ரூ.51,989-க்கு விற்கப்படுகிறது.

முன்பகுதி டிஸ்க் பிரேக் கொண்ட   ஜூப்பிட்டர் ஸ்கூட்டர் மாடல் என்றால் அதனுடைய விலை ரூ.53,966-ஆக உள்ளது.

டிவிஎஸ் நிறுவனம் தயாரித்த ஸ்கூட்டர்களில் ஹிட் மாடலாக உள்ள வீகோ மாடல் டெல்லி-எக்ஸ் ஷோரூம் விலையில் ரூ.50,934க்கு விற்கப்படுகிறது.

மேலும்... #டிவிஎஸ் #tvs
English summary
TVS Changes its Jupiter and Wego Scotters' Beak with Sync Brake System. Click for Details...
Please Wait while comments are loading...

Latest Photos