மேம்படுத்தப்பட்ட புதிய டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்

Written By:

சென்னையைச் சேர்ந்த டிவிஎஸ் நிறுவனம், இந்தியாவின் மூன்றாவது பெரிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக விளங்குகிறது. மக்களின் நன்மதிப்பை அதிகம் பெற்றுள்ள டிவிஎஸ் பைக்குகள் இந்தியாவில் மட்டுமல்லாது 60க்கும் மேற்பட்ட வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது. விற்பனையில் சக்கை போடு போட்ட 'ஸ்கூட்டி'யை போலவே ஜூபிடர் ஸ்கூட்டரும் இந்தியாவில் நன்றாக விற்பனையாகி வருகிறது.

2013ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட டிவிஎஸ் ஜூபிடர் பைக்குகள் தற்போது புதிய பாரத் ஸ்டேஜ்-4 தர இஞ்சின் மற்றும் ஆட்டோமேடிக் ஹெட்லைட் உடன் மேம்படுத்தப்பட்டு விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல் புதிய டிவிஎஸ் ஜுபிடர் ஸ்கூட்டர் ஜேட் க்ரீன் மற்றும் மிஸ்டிக் கோல்டு என இரண்டு புதிய வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் மூலம் 10 வண்ணங்களில் இனி ஜூபிடர் பைக்குகள் கிடைக்கும்.

புதிய ஜூபிடரில் குறிப்பிடத்தக்க அம்சமாக ‘சிங்க் பிரேக்கிங் சிஸ்டம்' தரப்பட்டுள்ளது. சிங்க் பிரேக்கிங் எனப்படுவது இரண்டு பிரேக்குகளும் ஒருங்கிணைக்கப்பட்ட சிஸ்டமாகும். பின்டயரின் பிரேக்கை அழுத்தினால் முன்பக்க டயரும் பிரேக் பிடிக்கும் வகையில் ஒருங்கினைப்பு பெற்ற முறை இதுவாகும். முன்னதாக இசட்எக்ஸ் வேரியண்டில் மட்டுமே கிடைத்து வந்த இந்த அம்சம் தற்போது பேஸ் வேரியண்டிலும் தரப்படுகிறது.

முற்றிலும் மெட்டல் பாடி கொண்ட டிவிஎஸ் ஜூபிடரில் 4 சிலிண்டர்கள் கொண்ட ஏர் கூல்டு 110சிசி இஞ்சின் உள்ளது. டெலஸ்கோபிக் முன்பக்க சஸ்பென்ஷனும், கேஸ் சார்ஜுடு பின்பக்க சஸ்பென்ஷனும் இதில் உள்ளது.

இதில் டிவிஎஸ் நிறுவனத்தின் பிரத்யேக எகனொமீட்டர் உள்ளது, இது எகனமி மற்றும் பவர் மோடுகளில் செல்லும் போது ஓட்டுநர்களுக்கு அறிவுத்தும். பாரத் ஸ்டேஜ்-4 மாசு உமிழ்வு சான்று பெற்றாலும் புதிய ஜூபிடர் பைக்குகளின் விலையில் மாற்றமில்லை. இது பழைய விலையான ரூ.49,666-ற்கே (டெல்லி எக்ஸ் ஷோரூம்) கிடைக்கிறது.

மேம்படுத்தப்பட்ட புதிய ஜூபிடரின் அறிமுகம் குறித்து டிவிஎஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் அனிருதா ஹல்தர் கூறுகையில், "வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை அதிகம் பெற்றுள்ள ஜூபிடர் பைக்கின் புதிய மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் இதன் புகழை மேலும் வளமையாக்கும், இராண்டு புதிய வண்ணங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், ஜூபிடர் இனி மொத்தம் 10 வண்ணங்களில் கிடைக்கும்" என்றார்.

இதன் பெட்ரோல் டேங்க் கொள்ளளவு 5.3 லிட்டர், ( ரிசர்வ் நிலையில் ஒரு லிட்டர் ), ஜூபிடர் பைக்கின் மொத்த எடை 104 கிலோவாகும். வீல் பேஸ் 1,275மிமீ ஆகும். நீளம் 72.2 இஞ்ச் ஆகவும், உயரம் 43.9 இஞ்சாகவும் உள்ளது.

டிவிஎஸ் நிறுவனம் இதுவரையில் 15 லட்சம் ஜூபிடர் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் டிவிஎஸ் நிறுவனத்தின் ஸ்கூட்டர் விற்பனை 2.9 சதவீதம் உயர்ந்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் 69,020 ஸ்கூட்டர்கள் விற்பனை ஆகியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்களுக்கு கடும் போட்டியளித்து வரும் டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளதால், அது ஹோண்டா நிறுவனத்திற்கு தலைவலியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

புதிய பஜாஜ் டோமினார்400 பைக்கின் படங்கள்: 

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
TVS Jupiter Gets BS-IV Engine, AHO And 2 new Colours; Prices Remain Unchanged
Please Wait while comments are loading...

Latest Photos