டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டருடன் புத்தாண்டு கொண்டாடிய டிரைவ்ஸ்பார்க்!

Written By:

புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியிருந்த பெங்களூர் நகரை டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டரில் சென்று பதிவு செய்திருந்தோம். இந்த நிலையில், 2016ம் ஆண்டுக்கு விடை கொடுத்து 2017ம் ஆண்டை வரவேற்பதற்கு பெங்களூர் தயாராகிக் கொண்டிருந்த டிசம்பர் 31ந் தேதி மீண்டும் டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டரில் புறப்பட்டோம்.

ஆண்டுதோறும் புத்தாண்டு கொண்டாட்டங்களை கண்டு ரசிக்க காரில் பயணிக்கும் எமக்கு இந்த முறை டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டரில் சென்று கண்டு ரசிக்கும் அரிய வாயப்பு கிட்டியது. அலுவலகப் பணிகளை விரைந்து முடித்துக் கொண்டு டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டரை தட்டி விட்டோம்.

நேராக ஸ்மாலிஸ் ரெஸ்ட்டாரண்ட்டுக்கு சென்றோம். இந்தியாவின் மிகவும் பிரபலமான சங்கிலி தொடர் உணவகம்தான் ஸ்மாலிஸ். பெயருக்கு தக்கவாறு சிறியதாக இருந்தாலும், சுவையிலும், சுகாதாரத்திலும் நிறைவை தந்தது. வயிறும், மனதும் புத்துணர்ச்சி பெற்ற கையோடு புத்தாண்டு கொண்டாட்டங்களை பதிவு செய்ய டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டரில் கிளம்பினோம்.

குளிர் பற்றிக் கொண்ட மாலை வேளையில் டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டரில் புத்தாண்டு கொண்டாட்டத்தை நோக்கிய பயணம் துவங்கியது. எமது வயிறும் மனதும் நிரப்பிவிட்ட நிலையில், டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டரின் தாகத்தை தணிப்பதற்காக வழியில் இருந்த பெட்ரோல் நிலையத்தில் டேங்கை ஃபுல் செய்து கொண்டோம். டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டரில் பெட்ரோல் மூடி இருக்கைக்கு வெளியில் அமைக்கப்பட்டு இருப்பதால், மிகச் சிறப்பான வசதியாக இருந்தது. பிற ஸ்கூட்டர்களில் இருக்கையை திறந்து கொண்டுதான் பெட்ரோல் நிரப்ப முடியும்.

அடுத்து நகரின் முக்கிய வீதிகளில் உலா வந்தோம். பல இடங்களில் புத்தாண்டை நண்பர்களுடன் புத்தாண்டு கொண்டாடும் முனைப்பில் இளைஞர்களும், யுவதிகளும் பப்புகளிலும், ரெஸ்ட்டாரண்ட்டுகளிலும் குழுமியிருந்தனர். பலர் குடும்பத்தினருடன் தேவாலயங்களில் பிரார்த்தனைக்காக குவிந்த வண்ணம் இருந்தனர்.

அடுத்து சர்ச் ஸ்ட்ரீட் பகுதியில் நுழைந்தோம். அந்த குறுகலான சாலையானது மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. அந்த கூட்டத்தை தங்கு தடையில்லாமல் எளிதாக கடக்க உதவியது டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர்.

டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டரின் சிறப்பான வீல்பேஸ் அமைப்பும் ஓட்டுதலுக்கு மிகுந்த உற்சாகத்தையும், சிறந்த கையாளுமை உணர்வையும் தந்தது. இந்த செக்மென்ட்டில் மிக உறுதியான சேஸி அமைப்பையும் டிவிஎஸ் வீகோ கொண்டுள்ளது.

புத்தாண்டு பிறப்பதற்கு ஒரு சில மணி நேரமே இருந்த நிலையில், அடுத்து பெங்களூரின் இதயப் பகுதியாக கருதப்படும் இந்திரா நகருக்கு டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டரில் விசிட் அடித்தோம். அங்கும் சாலைகள் எங்கும் வாகனங்களாலும், வண்ண விளக்குகளாலும் ஆக்கிரமித்திருந்தன.

மக்கள் புத்தாண்டை வரவேற்க பட்டாசுகளுடன் துறுதுறுப்புடன் காத்திருந்தனர். மேலும், நண்பர்களுக்கு அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துகள் வாசக பரிமாற்றங்களும், ஹேப்பி நியூ இயர் வாழ்த்துகளும் சொல்வதில் மக்கள் ஆர்வமாக இருந்தனர். தெரிந்தவர்கள் மட்டுமின்றி, தெரியாதவர்களுக்கும் ஹேப்பி நியூ இயர் வாழ்த்துகளை பரிமாறி புத்தாண்டை வரவேற்றுக் கொண்டிருந்தனர்.

இந்த ஆண்டு ஒரு நொடி தாமதமாக 2017 பிறந்த நிலையில், அனைவருக்கும் டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டரில் சென்றவாறே புத்தாண்டு வாழ்த்துகளை அனைவருக்கும் பரிமாறியபடி சென்றோம். இந்த புத்தாண்டு எல்லோருக்கும் வளமையும், ஆரோக்கியமும் நிறைந்ததாக இருக்க வேண்டும் என்ற பிரார்த்தனைகளுடன் டிவிஎஸ் வீகோ புத்தாண்டு கொண்டாட்டத்தை நிறைவு செய்கிறோம்.

அடுத்து நம்ம சென்னைதான். ஆம், டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டருடன் தமிழர் திருநாள் பண்டிகையை சென்னையில் கொண்டாட இருக்கிறோம் என்ற மகிழ்ச்சியான தகவலோடு விடை பெறுகிறோம்.

English summary
Exploring the charms and delights of Bangalore as we countdown the final moments of the year and welcome 2017 on a TVS Wego
Please Wait while comments are loading...

Latest Photos