ஏப்ரிலியா ஸ்கூட்டருக்கு போட்டியாக புதிய பியாகியோ வெஸ்பா எலிகண்ட் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்..!

பியாகியோ நிறுவனம் புதிய வெஸ்பா எலிகண்ட்150 சிசி ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. அது குறித்த தகவல்களை காணலாம்.

Written By:

உலகின் பழமையான ஸ்கூட்டர் பிராண்டுகளில் ஒன்றானது 'வெஸ்பா'. இத்தாலிய நிறுவனமான பியாகியோ நிறுவனத்தின் தயாரிப்பான வெஸ்பா 1946ஆம் ஆண்டு முதல் தயாரிப்பில் உள்ளது.

இந்தியாவில் பிரபலமாக விளங்கிய செடக் ஸ்கூட்டரின் மூத்த சகோதரனான வெஸ்பா, 1960களில் இருந்து இந்தியாவில் விற்பனையில் இருந்தது. இவை உலகம் முழுவதும் வரவேற்பை பெற்ற பிராண்டாகவும் விளங்குகிறது.

1960களில் பியாகியோ மற்றும் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் கூட்டணியில் வெஸ்பா ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனையில் இருந்து வந்தது.

பின்னர் எல்எம்எல் நிறுவனத்துடனான கூட்டணியிலும் முறிவு ஏற்பட்டதால் வெஸ்பா ஸ்கூட்டர் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டது.

பின்னர் அந்த கூட்டணியில் முறிவு ஏற்பட்டதால் எல்எம்எல் நிறுவனத்துடன் கூட்டணி வைத்த பியாகியோ வெஸ்பா ஸ்கூட்டரை 1983 முதல் 1999 வரையில் இந்தியாவில் விற்பனை செய்தது.

2012ஆம் ஆண்டில் எந்த நிறுவனத்துடனும் கூட்டணி வைக்காமல் மீண்டும் இந்தியாவில் தனித்தே கால் பதித்த பியாகியோ நிறுவனம் தற்போது இந்த வெஸ்பா ஸ்கூட்டர் பிராண்டை வெறிகரமாக சந்தைப்படுத்தி வருகிறது.

பிரீமியம் ஸ்கூட்டர் செக்மெண்டில் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்தியுள்ள வெஸ்பா ஸ்கூட்டர், ஸ்டைலிங் மற்றும் ஆற்றல் இரண்டிலும் சிறந்து விளங்குகிறது.

எழில்மிகு இத்தாலிய டிசைனுடன் கூடிய வெஸ்பா ஸ்கூட்டர் தற்போது எலிகண்ட் என்ற ஸ்பெஷல் எடிஷனில் ஆடம்பர தோற்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய வெஸ்பா எலிகண்ட் ஸ்கூட்டரில் ட்யூப்லெஸ் டயர்கள் கொண்ட 12 இஞ்ச் அலாய் வீல்களும், விண்ட் வைசர், டூயல் டோன் லெதர் சீட்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய எலிகண்ட் ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டரில் ஒற்றை சிலிண்டர் கொண்ட 150சிசி இஞ்சின் உள்ளது.

இந்த இஞ்சின் அதிகபட்சமாக 7,000 ஆர்பிஎம்-ல் 11.4 பிஹச்பி ஆற்றலையும், 5,500 ஆர்பிஎம்-ல் 11.5 என்எம் டார்க்கையும் வழங்குகிறது.

வெஸ்பா எஸ்எக்ஸ்எல் மற்றும் வெஸ்பா விஎக்ஸ்எல் என்ற இரண்டு வேரியண்ட்களிலும் புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடல் கிடைக்கும் என்று தெரிகிறது.

வெஸ்பா எலிகண்ட் 150சிசி ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டர் பீய்ஜ் யுனிகோ (Beige unico) மற்றும் பேர்ல் ஒயிட் (Pearl White) என்ற இரண்டு புதிய வண்ணங்களில் கிடைக்கிறது.

புதிய வெஸ்பா எலிகண்ட் ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டர் ரூ.97,077 (எக்ஸ்ஷோரூம், புனே) என்ற விலையில் கிடைக்கும்.

வெஸ்பா எலிகண்ட் ஸ்கூட்டருக்கான முன்பதிவு ஏற்கெனவே தொடங்கியுள்ளது. இவை வெஸ்பா மற்றும் ஏப்ரிலியா ஷோரூம்களில் விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிகிறது. மேலும் அமேசான் ஆன்லைன் தளத்திலும் வெஸ்பா விற்பனைக்கு கிடைக்கிறது.

பிரீமியம் ஸ்கூட்டர் செக்மெண்டில் சிறந்து விளங்கும் வெஸ்பா மாதம் ஒன்றிற்கு 2000 என்ற எண்ணிக்கையில் விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசிக்கப்படும் இதர செய்திகள்...

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Read in Tamil about piaggio's new vespa elgante scooter launch in india.
Please Wait while comments are loading...

Latest Photos

LIKE US ON FACEBOOK