டீசல் கேட் முறைகேடு எதிரொலி: டுகாட்டி பைக் நிறுவனத்தை விற்கும் முடிவில் ஃபோக்ஸ்வேகன்!

Written By:

டுகாட்டி மோட்டார் சைக்கிள் நிறுவனத்தை நிர்வகித்து அரும் வோக்ஸ்வேகன், விரைவில் அதை வேறு ஒரு நிறுவனத்திற்கு விற்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

1926ம் ஆண்டு இத்தாலி நாட்டில் நிறுவப்பட்ட டுகாட்டி பைக் தயாரிப்பு கம்பெனியை 1950ம் ஆண்டிலிருந்து உலகளவில் முன்னணியில் உள்ள பல்வேறு மோட்டார் சைக்கிள் நிறுவனங்கள் நிர்வகித்து வந்துள்ளன.

2012ம் ஆண்டில் டுகாட்டி மோட்டார் சைக்கிள் கம்பெனியை, ஆடி நிறுவனம் வாங்கியது. இதற்காக நடைபெற்ற ஏலத்தில் அந்நிறுவனத்தின் அனைத்து 100 சதவீத பங்குகளை கைப்பற்றி, டுகாட்டியை தன் வசமாகிக்கொண்டது ஆடி.

உலகின் டிரெண்டிங்கான கார் தயாரிப்புகளில் முன்னணியில் உள்ள ஆடி மற்றும் லம்போகர்னிய ஆகியவை, வோக்ஸ்வேகனின் துணை நிறுவனங்கள்.

டுகாட்டியின் 100 சதவீத பங்குகளை ஆடி நிறுவனம் கைப்பற்றி இருந்தாலும், டுகாட்டி பைக் தயாரிப்பு நிறுவனம் வோக்ஸ்வேகனின் மற்றொரு துணை நிறுவனமாக மாறியது.

டுகாட்டி நிறுவனத்தை சமீபத்தில் வாங்கிய வோக்ஸ்வேகன், இத்தனை சீக்கரத்தில் அதை விற்பனை செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருப்பது ஆட்டோமொபைல் உலகின் இன்று பரபரப்பு செய்தியாக மாறியுள்ளது.

உலகின் முன்னணி பைக் தயாரிப்பாக உள்ள இதை ஏன் வோக்ஸ்வேகன் விற்க முடிவு செய்திருக்கிறது என்பதை, வாசகர்கள் புரிந்துக்கொள்ள வரலாற்றை சற்று திரும்பி பார்க்கலாம்.

வோக்ஸ்வேகன், தனது கார்களில் மாசு கட்டுப்பாடு டிஜிட்டல் மீட்டர் கருவிகளில் மோசடி செய்த பிரச்சனை வெளிவந்ததை அடுத்து அந்நிறுவனம் தனது நிர்வாகத்தின் கீழ் உள்ள சில தயாரிப்புகளை விற்க முடிவுசெய்தது.

அதன்படி, தனது நிர்வாகத்தின் கீழ் ஆட்டோமொபைல் பிரிவுகளில் செயல்படும் டீசல் எஞ்சின் மெஷினரி தொடர்பான பிரிவை விற்பனை செய்ய வோக்ஸ்வேகன் ஏற்கனவே முடிவு எடுத்திருந்தது.

இந்த நிலையில் தான் கடந்த 5 ஆண்டுகளாக வோக்ஸ்வேகன் நிர்வகித்து வந்த டுகாட்டி பைக் தயாரிப்பு நிறுவனத்தை விற்பனை செய்ய முடிவு செய்திருக்கிறது.

டுகாட்டி நிறுவனத்தை விற்பனை செய்ய நேரடியாக களத்தில் இறங்காமல் அதற்காக பிரத்யேகமாக எவர்கோர் என்ற நிறுவனத்தை வோக்ஸ்வேகன் நியமித்துள்ளது.

டுகாட்டி நிறுவனம் உலகளவில் 1.5 பில்லின் யூரோக்கள் மதிப்பில் விற்பனை செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதால், ஆட்டோமொபைல் உலகின் தற்போது முன்னணியில் இருக்கும் இரண்டு பெரிய நிறுவனம் இணைந்து வாங்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

2007ம் ஆண்டில் ஆஸ்டின் மார்டின் நிறுவனத்தை சீனாவின் சில நிறுவனங்களோடு, ஹீரோ மோட்டார்கார்ப் கூட்டமைப்பாக வாங்கியதை போன்று, 1 பில்லியன் யூரோ மதிப்புடைய டுகாட்டி பைக் நிறுவனத்தையும் ஹீரோ இதே கூட்டமைப்பின் கீழ் வாங்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் ஹீரோ மோட்டார் காப் மட்டுமில்லாமல், உலகளவில் பைக் தயாரிப்பில் பிரபலமான கவாஸாகி, ஹார்லி டேவிசன், ஹோண்டா போன்ற நிறுவனங்களும் டுகாட்டியை கைப்பற்ற ஆர்வமாக உள்ளன.

இது உறுதியான தகவல்கள் இல்லை என்றாலும், டுகாட்டி விற்பனை செய்யப்படவுள்ளதை குறித்த ஜெர்மனி ஊடகங்களின் கேள்விக்கு ஆடி மற்றும் எவர்கோர் நிறுவனங்கள் பதில்கூற மறுத்துவிட்டது.

கருத்து ஏதும் கூறாமல், இதுகுறித்த கேள்விக்கு 2 நிறுவனங்களும் மறுப்பு தெரிவித்துள்ளது, விரைவில் டுகாட்டி விற்பனை செய்யப்படவுள்ளதற்கான அறிவிப்பை எதிர்நோக்க வைப்பதற்கான சூழலை உருவாக்கியுள்ளது.

 

மேலும்... #டுகாட்டி #ducati
English summary
Volkswagen considering to sale the proud Ducati Manufactures to Hero MotoCorp or Chinese brands. Click for Details...
Please Wait while comments are loading...

Latest Photos