புதிய யமஹா எஃப்இசட்250 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்- விபரம்!

Written By:

250சிசி ரக பைக் மாடல்களுக்கு இந்தியாவில் பெரும் வரவேற்பு இருக்கிறது. இந்த செக்மென்ட்டில் இருக்கும் வர்த்தக வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில் அனைத்து முன்னணி பைக் தயாரிப்பு நிறுவனங்களும் புதிய மாடல்களை களமிறக்கி வருகின்றனர். ஆனால், இளைஞர்களின் மிக விருப்பமான பிராண்டாக விளங்கும் யமஹா மட்டும் இந்த செக்மென்ட்டில் இல்லாதது பெரும் குறையாக இருந்தது.

இந்த குறையை போக்கும் விதத்தில் புத்தம் புதிய 250சிசி பைக் மாடலை யமஹா நிறுவனம் இந்தியாவில் இன்று விற்பனைக்கு களமிறக்கி உள்ளது. இந்த புதிய யமஹா பைக் மாடலை பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாம் வண்ணமயமான நிகழ்ச்சியில் அறிமுகம் செய்தார். இந்த பைக்கை பற்றிய விரிவானத் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

யமஹா எஃப்இசட்25 [எஃப்இசட்250] என்ற பெயரில் வந்திருக்கும் இந்த புதிய பைக் மாடல் இளைஞர்களை வெகுவாக கவரும் என உறுதியாக நம்பலாம். எஃப்இசட்16 பைக் மாடலைப் போலவே ஸ்ட்ரீட் ஃபைட்டர் ரகத்தில் வந்துள்ளது. வழக்கம் போல மிக ஸ்டைலான யமஹா பைக் மாடலாக வந்துள்ளது. ஜப்பானில் விற்பனையில் உள்ள 250சிசி பைக்கின் அடிப்படையில் இந்த புதிய மாடலை உருவாக்கி இந்தியாவில் களமிறக்கி உள்ளது.

இந்த புதிய பைக்கில் எல்இடி ஹெட்லைட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. முறுக்கேறிய தோற்றத்தை தரும் பெட்ரோல் டேங்க், ஸ்பிளிட் இருக்கைகள், எல்இடி டெயில் லைட்டுகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இரண்டு ட்ரிப் மீட்டர்கள், ஓடோமீட்டர், ஸ்பீடோமீட்டர் உள்ளிட்டவை இதில் இருக்கின்றன. சராசரி மைலேஜை காட்டும் வசதியும் உண்டு.

இந்த பைக்கில் ஒற்றை சிலிண்டர் அமைப்புடன் கூடிய 249சிசி ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட இந்த பைக்கின் எஞ்சின் அதிகபட்சமாக 20.6 பிஎச்பி பவரையும், 20 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் 14 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் இருக்கிறது. லிட்டருக்கு 43 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பைக் 148 கிலோ எடை கொண்டிருப்பதுடன், 160மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டது. முன்புறத்தில் 282மிமீ விட்டமுடைய டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 220மிமீ விட்டமுடைய டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆப்ஷனலாக கூட இல்லை என்பது ஏமாற்றமே.

இந்த புதிய யமஹா பைக் நைட் பிளாக், வாரியர் ஒயிட், பேலிஸ்டிக் புளூ ஆகிய மூன்று வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும். டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்200, கேடிஎம் ட்யூக்200, பஜாஜ் பல்சர் 200 மாடல்களுக்கு கடும் நெருக்கடியை தரும். ஏனெனில், இதன் விலை அவ்வாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய யமஹா எஃப்இசட்250 பைக் ரூ.119,500 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும். யமஹா பிரியர்களுக்கு மிகச் சிறப்பான மாடலாக இது க்கும் என நம்பலாம்.

புதிய யமஹா ஆர்3 சூப்பர் பைக்கின் படங்கள்!

புதிய யமஹா ஆர்3 சூப்பர் பைக்கின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

Story first published: Tuesday, January 24, 2017, 14:00 [IST]
English summary
Yamaha FZ 25 launched in India. The launch of the new FZ 25 marks the entry of Yamaha into the 200–250cc segment.
Please Wait while comments are loading...

Latest Photos