20 நிமிடங்களில் நடந்து முடிந்த யமஹா ஆர்15 வி3.0 பைக் விற்பனை!

யமஹா ஆர்15 வி3.0 பைக் அறிமுகப்படுத்தப்பட்ட 20 நிமிடங்களில் அதன் விற்பனை நிகழ்ந்து முடிந்துள்ளது. அது குறித்த தகவல்களை காணலாம்.

Written By:

சூப்பர் பைக்குகளுக்கு இணையான கவர்ந்திழுக்கும் தோற்றமும், சக்திவாய்ந்த எஞ்சினும் கொண்ட யமஹா ஆர்15 வி3.0 பைக்கை தற்போது மேலும் மேம்படுத்தியுள்ளது யமஹா நிறுவனம். இந்தியாவில் விரைவில் அறிமுகமாகவுள்ள இந்த ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக் இந்தோனியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட 20 நிமிடங்களில் விற்பனையாகி அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியுள்ளது.

யமஹா ஆர்15 வெர்ஷன் 3.0 பைக்கை இந்தோனியாசியாவில் முதல் முறையாக கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி அறிமுகப்படுத்தியது யமஹா நிறுவனம்.

இந்தோனியாவில் 155 எண்ணிக்கையிலான ஆர் 15 வி3.0 பைக்கை மட்டுமே விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது யமஹா நிறுவனம். 155 என்ற எண்ணிக்கை இதன் இஞ்சின் சிசி திறனை குறிப்பதாக உள்ளது.

விற்பனைக்கு அறிமுகப்படுத்திய 20 நிமிடங்களுக்குள்ளாக 155 பைக்குகளும் விற்பனை செய்யப்பட்டுவிட்டதாக யமஹா அறிவித்துள்ளது. புக் செய்த 155 வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பு பரிசாக விஆர்46 டி-ஷர்ட் ஒன்று இலவசமாக அளிக்கப்படும் என யமஹா தெரிவித்துள்ளது.

இதன் செக்மெண்டிலேயே யமஹா ஆர்15 வி3.0 பைக் தான் அதிக விலை கொண்டதாக உள்ளது. எனினும் செயல்திறன் மற்றும் ஸ்டைல் அடிப்படையில் யமஹா ஆர்15 வி3.0 அனைவரின் கவனைத்தையும் ஈர்த்துவிடுகிறது.

மேம்படுத்தப்பட்ட புதிய யமஹா ஆர்15 வி3.0 பைக்கில் முன்புறம் இரட்டை எல்இடி ஹெட்லைட்டுகள் கொண்டதாக முகப்பு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. ஹெட்லைட்டுகளுக்கு நடுவில் அம்புகுறி கீழ்நோக்கி இருப்பது போன்ற சிறிய க்ரில் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஸ்டிக்கர் டிசைனிலும் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. மற்றபடி, பெரிய அளவிலான மாற்றங்கள் இல்லை.

புதிய யமஹா ஆர்15 வி3.0 பைக்கில் 155 சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. தற்போது இந்த எஞ்சின் 19 பிஎச்பி பவரையும், 14.7 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக கூடுதல் சக்திமிகுந்ததாக வந்துள்ளது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது.

இந்த பைக்கில் ஸ்லிப்பர் க்ளட்ச் வசதியும் சேர்க்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலமாக, அதிவேகத்தில் செல்லும்போது வேகத்தை உடனடியாக குறைக்க வாய்ப்பு கிடைக்கிறது. கியர் மாற்றுவதும் மென்மையாக உள்ளது. தற்போது விற்பனையில் இருக்கும் மாடலைவிட கூடுதல் எரிபொருள் சிக்கனம் தரும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஸ்லிப்பர் கிளட்ச் வசதி சேர்க்கப்பட்டாலும் இந்த பைக்கில் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி வழங்கப்படவில்லை. புதிய ஆர் 15 வி3.0 பைக் மேட் பிளாக், ரேசிங் புளூ மற்றும் மேட் ரெட் ஆகிய 3 வண்ணங்களில் கிடைக்கிறது.

இந்தோனியாவை அடுத்து தாய்லாந்தில் அறிமுகமாக இருக்கும் இந்த பைக் அடுத்ததாக இந்தியாவில் களம் காணும். இந்தியாவில் விற்பனைக்கு வரும்போது கேடிஎம் ஆர்சி200, ஹோண்டா சிபிஆர் 150ஆர் மற்றும் பஜாஜ் பல்சர் 200ஆர்எஸ் ஆகிய மாடல்களுடன் போட்டி இது போடும்.

புதிய யமஹா ஆர்15 வி3.0 மாடல் ரூ.1.30 லட்சம் முதல் ரூ.1.40 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது விற்பனையில் உள்ள யமஹா ஆர்15 வி2.0 பைக் ரூ.1.18 லட்சம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதிகம் வாசிக்கப்படும் இதர செய்திகள்...

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

Story first published: Sunday, April 9, 2017, 10:10 [IST]
English summary
Read in Tamil about Yamaha R15 V 3.0 bike sales, price, mileage, specs and more. R15 V 3.0 creates record sales in indonesia. next launch in india
Please Wait while comments are loading...

Latest Photos

LIKE US ON FACEBOOK