யமஹா ஆர்-3 பைக்குகளில் கோளாறு - இந்தியாவில் 1155 பைக்குகள் திரும்பப்பெறப்படுகிறது

ஸ்போர்ட்ஸ் மாடலான யமஹா ஒய்இசட்எஃப் ஆர்-3 பைக்கில் கண்டறியப்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, உலகலவில் அவற்றை திருப்பப்பெறுகிறது யமஹா நிறுவனம். இது குறித்த தகவல்களை காணலாம்.

Written By:

321 சிசி லிக்விட் கூல்டு இன்ஜின் கொண்ட யமஹா ஆர்-3, மாடலில் எரிபொருள் டேங்க் மற்றும் மெயின் ஸ்விட்ச் ஆகியவற்றில் சில கோளாறுகள் கண்டறியப்பட்டுளதை அடுத்து, உலகளவில் விற்பனையாகியுள்ள ஆர்-3 மாடல்களை பழுதுநீக்கித் தர முடிவு செய்துள்ளது யமஹா. இந்தியாவில் மட்டும் 1155 பைக்குகள் திரும்பப்பெறப்படும்.

எதில் கோளாறு?

எரி பொருள் டேங்கை இறுக்கிப்பிடிக்கும் பிராக்கெட்டுகள் எனப்படும் பிடிமான உதிரிபாகத்தில் குறைபாடு இருப்பது தெரிய வந்துள்ளது. எஞ்சினில் ஏற்படும் அதிர்வுகள் காரணமாக இந்த பிரெக்கெட்டுகளின் பிடிப்பு தளர்ந்து, பெட்ரோல் டேங்கில் உராய்வு மற்றும் விரிசல் ஏற்படும் வாய்ப்புள்ளது. இது எரிபொருள் கசிவுக்கும் வழிகோலும் என்பதால், பெட்ரோல் டேங்க் பிராக்கெட்டுகளை மாற்றித் தர யமஹா முடிவு செய்துள்ளது.

பெட்ரோல் டேங்க் பிராக்கெட் கோளாறு மட்டுமின்றி, யமஹா ஆர்3 பைக்கின் மெயின் ஸ்விட்ச் மழையாலும், பனியாலும் துருப்பிடிக்கும் வகையில் உள்ளது. இந்த இரண்டு கோளாறுகளை இலவசமாக சரிசெய்து தருவதாக யமஹா நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் ஆர்-3 பைக் உரிமையாளர்களுக்கு, அருகில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட யமஹா டீலர்கள் மூலமாக இந்த கோளாறுகள் இலவசமாக சரி செய்து தரப்படும்.

இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட யமஹா, வாடிக்கையாளர்களின் பாதுகாப்பும், திருப்தியும் தான் தாரக மந்திரம் என தெரிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த ஆண்டில் கிளட்ச் ப்ளேட் மற்றும் ஆயில் பம்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, இதே போன்று 902 யமஹா ஆர்-3 பைக்குகள் திரும்பப்பெறப்பட்டது நினைவிருக்கலாம்.

யமஹா ஒய்இசட்எஃப் ஆர்-3 பைக்கின் படங்கள்:

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

Story first published: Friday, February 17, 2017, 14:34 [IST]
English summary
Yamaha is set to issue a recall for its YZF R3 sports bike having determined that the R3 has defects that would see it affect motor vehicle safety norms.
Please Wait while comments are loading...

Latest Photos