லிமிடேட் எடிசன் ஹயோசங் ஜிடி250ஆர் பைக் அறிமுகம் - லைவ் கவரேஜ்

லிமிடேட் எடிசன் ஹயோசங் ஜிடி250ஆர் ஸ்போர்ட்ஸ் பைக் சற்றுமுன் புனேயில் நடந்த விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. டிஎஸ்கே மோட்டோவீல்ஸ் நிறுவனத்தின் சிரிஷ் குல்கர்னி இந்த புதிய பைக்கை அறிமுகம் செய்தார்.

டிஎஸ்கே- ஹயோசங் இடையிலான கூட்டணி அமைந்து ஓர் ஆண்டு நிறைவு பெற்றுள்ளது. தவிர, ஹயோசங் பைக் உரிமையாளர் கிளப் துவங்கப்பட்டும் ஓர் ஆண்டாகிறது. இதனை கொண்டாடும் விதத்தில் இந்த புதிய லிமிடேட் எடிசன் பைக் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

சிக்னேச்சர் எடிசன் என்ற பெயரில் இந்த புதிய ஹயோசங் ஜிடி250ஆர் எல்இ பைக்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன. பெட்ரோல் டேங்கில் உரிமையாளரின் பெயர் பொறித்துத் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 50 பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்று டிஎஸ்கே மோட்டோவீல்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹூரிக்கேன் யெல்லோ என்ற மஞ்சல் நிறத்திலான இந்த பைக்கில் கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர்களும் இணைந்து கவர்ச்சியான தோற்றத்தை கொடுக்கிறது.

ரூ.2.97 லட்சம் புனே எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய பைக் விற்பனை செய்யப்பட உள்ளது. அடுத்ததாக, புதிய 125சிசி பைக்கையும் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய லிமிடேட் எடிசன் பைக்கின் கூடுதல் படங்கள், அம்சங்கள் மற்றும் தொழில்நுட்ப விபரங்களை தெரிந்து கொள்ள விரும்புவோர் ஸ்லைடருக்கு வாருங்கள்.

உரிமையாளர் பெயர்

உரிமையாளர் பெயர்

Signature Edition பைக்குகளாக விற்பனை செய்யப்பட உள்ள இந்த 50 பைக்குகளிலும் வாங்கும் உரிமையாளர் பெயர் படத்தில் இருப்பது போன்று பொறித்து தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ட்வின் ஹெட்லைட்

ட்வின் ஹெட்லைட்

இந்த பைக்கில் ட்வின் புரொஜெக்டர் ஹெட்லைட் பொருத்தப்பட்டுள்ளன.

எஞ்சின்

எஞ்சின்

இந்த பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் வி ட்வின் ஆயில் கூல்டு எஞ்சின் 27.6 பிஎச்பி ஆற்றலையும், 22.07 என்எம் டார்க்கையும் அளிக்கும்.

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

மணிக்கு 140 கிமீ வேகத்தில் செல்லத்தக்கதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ட்வின் டிஸ்க் பிரேக்

ட்வின் டிஸ்க் பிரேக்

முன்பக்கத்தில் டபுள் டிஸ்க் பிரேக் அமைப்பு கொண்டது.

முன்புற ஃபோர்க்

முன்புற ஃபோர்க்

முன்புறத்தில் அப்சைடு டவுன்ஃபோர்குககள் பொருத்தப்பட்டுள்ளன.

இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்

இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்

அனலாக் ஆர்பிஎம் மீட்டரும், டிஜிட்டல் ஸ்பீடோமீட்டரும் கொடுக்கப்பட்டுள்ளது.

ரியர் டிஸ்க் பிரேக்

ரியர் டிஸ்க் பிரேக்

பின்புறத்திலும் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது.

Most Read Articles
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X