இந்தியாவில் குறைந்த விலை பைக்கை களமிறக்கும் ஹார்லி டேவிட்சன்!

Harley Davidson Bike
நின்ஜா 250ஆர் உள்ளிட்ட பைக் மாடல்களுக்கு சவாலான விலையில் புதிய குறைந்த விலை பைக்கை ஹார்லி டேவிட்சன் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது.

ஹார்லி டேவிட்சன் பைக்குகளுக்கான எஞ்சின், ஃபிரேம் மற்றும் இதர முக்கிய பாகங்கள் தற்போது அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு ஹரியானாவில் உள்ள ஆலையில் அசெம்பிள் செய்யப்படுகின்றன.

ஆனால், இந்த புதிய பைக்குக்கான பாகங்களை இந்தியாவிலேயே பெற்று அசெம்பிள் செய்ய ஹார்லி திட்டமிட்டுள்ளது.

எனவே, இது முழுக்க முழுக்க ஹார்லியின் இந்திய தயாரிப்பு மாடலாக இருக்கும். மேலும், இந்த புதிய பைக்கில் 400சிசி வி டிவின் எஞ்சின் பொருத்தப்பட உள்ளது. இந்த காரணங்களால் புதிய பைக்கின் விலை மிக சவாலாக இருக்கும்.

கவாஸாகி நின்ஜா 250ஆர், ஹயோசங் ஜிடி 250ஆர் ஆகிய பைக்குகளுக்கு போட்டியை கொடுக்கும் விலையில் இந்த புதிய ஹார்லி வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய ஹார்லி பைக் ரூ.4 லட்சம் விலை கொண்டதாக வரும் என தெரிகிறது.

Most Read Articles
English summary
American premium motorcycle maker Harley davidson is planning to launch new entry level bike model in India. The new bike model will be priced competitively, says reports.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X