மேம்படுத்தப்பட்ட அசத்தலான புதிய ஹார்லி பைக் அறிமுகம்!

இந்திய வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும் விதத்திலான கூடுதல் அம்சங்களுடன் புதிய ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் கிளைடு பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Project Rushmore என்ற புதிய திட்டத்தின் கீழ் கூடுதல் அம்சங்களுடன் புதிய மோட்டார்சைக்கிள்களை ஹார்லி டேவிட்சன் அறிமுகப்படுத்தி வருகிறது.

Project Rusmore திட்டத்தின்படி சிறந்த பொழுதுபோக்கு அம்சங்கள், ஸ்டைல், பாதுகாப்பு, சொகுசு ஆகிய 4 விதமான தாத்பரியங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த மேம்படுத்தப்பட்ட மோட்டார்சைக்கிள்கள் வர இருக்கின்றன. அதில், முதலாவதாக ஸ்ட்ரீட் கிளைடு வந்துள்ளது.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

மேம்படுத்தப்பட்ட டியூவல் ஹாலஜன் லைட், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் கூடிய லிங்டு பிரேக் சிஸ்டம், மேம்படுத்தப்பட்ட முன்பக்க சஸ்பென்ஷன், அதிக சக்திவாய்ந்த ட்வின் காம் 103 எஞ்சின் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

சொகுசு

சொகுசு

புதிய பாட்விங் பேரிங் பேனல்கள் ஏரோடைனமிக்கை மேம்படுத்துவதோடு, டேஷ்போர்ட்டில் மழை நீர் செல்லாதவாறு தடுக்கும். இருக்கையும் மேம்படுத்தப்பட்டு, சிறந்த ரைடிங் பொசிஷனை வழங்கும். இவை அனைத்தும் சொகுசு அம்சங்களை மனதில் கொண்டதாக இருக்கிறது.

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

புதிய 4.3 இஞ்ச் வண்ண திரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம், 5.25 இஞ்ச் ஸ்பீக்கர்கள், புளூடூத், யுஎஸ்பி கனெக்டிவிட்டி, ஜிபிஎஸ் நேவிகேஷன் ஆகியவற்றை கொண்டுள்ளது.

ஸ்டைல்

ஸ்டைல்

பக்கவாட்டு பெட்டிகள், இலகு எடை கொண்ட காஸ்ட் வீல்கள், பாட்விங் பேரிங் பேனல்கள் உள்ளிட்டவை ஸ்ட்ரீட் கிளைடு பைக்கின் தோற்றத்தை கவர்ச்சியாக மாற்றியுள்ளது.

விலை

விலை

ரூ.29 லட்சம் விலையில் இந்த புதிய ஹார்லி டேவிட்சன் பைக் விற்பனை செய்யப்பட உள்ளது. இது இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் விற்கப்பட உள்ளது.

Most Read Articles
English summary
Harley Davidson has launched 2014 Project Rushmore Street Glide, one of its most advanced cruiser bike in India. The cruiser, part of the Rushmore Project comes powered by a ‘High Output Twin Cam 103' engine. The bike will com to India via the import route and hence will be priced at INR 29 lakhs (ex-showroom).
Story first published: Friday, October 11, 2013, 14:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X