குறைந்த விலை ஹார்லி பைக்குகள் அறிமுகம் - படங்களுடன், விபரங்கள்

By Saravana

அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கும் குறைந்த விலை ஹார்லி டேவிட்சன் பைக்குகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய பைக்குகள் இத்தாலியின் மிலன் நகரில் நடந்து வரும் மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் மிகக் குறைந்த சிசி திறன் கொண்ட இந்த 2 புதிய பைக்குகள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட உள்ளன. ஸ்ட்ரீட் 500 மற்றும் ஸ்ட்ரீட் 750 என்ற பெயரிலான இந்த புதிய பைக்குகள் குறித்த தொழில்நுட்ப தகவல்களை ஹார்லி இதுவரை வெளியிடவில்லை. இருப்பினும், இதுவரை வெளியான கூடுதல் விபரங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ படங்களை ஸ்லைடரில் காணலாம்.

குரூஸர் பைக்குகள்

குரூஸர் பைக்குகள்

இந்த 2 புதிய பைக்குகளும் குரூஸர் ரகத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. பிகினி ஃபேரிங் ஹெட்லைட், வி ட்வின் எஞ்சின், பிரத்யேக டிசைன் கொண்ட இருக்கை ஆகியவை கவரும் அம்சங்கள்.

யூத் டிசைன்

யூத் டிசைன்

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இருக்கும் இளைஞர்களிடம் கருத்து கேட்பு நடத்தி இந்த புதிய பைக்குகளை வடிவமைத்துள்ளதாக ஹார்லி டேவிட்சன் தெரிவித்துள்ளது.

புத்தம் புதிய மாடல்கள்

புத்தம் புதிய மாடல்கள்

கடந்த 13 ஆண்டுகளில் ஹார்லி டேவிட்சன் வெளியிடும் புத்தம் புதிய மாடல்கள் இவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு புதிய பைக்குகளும் முற்றிலும் புதிய பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்டவை.

டார்க் கஸ்டம்

டார்க் கஸ்டம்

இந்த 2 பைக்குகளின் எஞ்சின், ஹேண்டில்பார், ஃபோர்க் உள்ளிட்ட பெரும்பான்மையான பாகங்கள் கருப்பு நிறம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

 எக்சாஸ்ட்

எக்சாஸ்ட்

இந்த பைக்குகளின் புகைப்போக்கி குழாய் வரை கருப்பு நிறம்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. 70களில் ஹார்லியின் கஃபே ரேஸர் மாடலின் சைலென்சரை ஒத்ததாக இதிலும் கருப்பு நிறம் கொடுக்கப்பட்டுள்ளது.

எஞ்சின் சிறப்பு

எஞ்சின் சிறப்பு

ஹார்லியின் எஞ்சின்கள் பெரும்பாலும் ஏர்கூல்டு அல்லது ஆயில் கூல்டு நுட்பம் கொண்டதாக இருக்கும். வி ராட் மோட்டார்சைக்கிள் மட்டும் விதிவிலக்காக லிக்யூடு கூல்டு எஞ்சின் கொண்டது. அதற்கடுத்து, இந்த இரண்டு பைக்குகளும் லிக்யூடு கூல்டு வி ட்வின் எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

எஞ்சின் விபரம்

எஞ்சின் விபரம்

எஞ்சின் குறித்த முழுமையான தொழில்நுட்ப விபரங்களை ஹார்லி டேவிடன் வெளியிடவில்லை. நீண்டதூரம் செல்வதற்கான அம்சங்களை இந்த எஞ்சின் கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெல்ட் டிரைவ்

பெல்ட் டிரைவ்

6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மூலம் எஞ்சின் சக்தி பின்புற சக்கரத்திற்கு பெல்ட் மூலம் கடத்தப்படும் வகையிலான அமைப்பை கொண்டிருக்கும்.

முதல் மாடல்

முதல் மாடல்

இந்தியாவில் முதலாவதாக ஸ்ட்ரீட் 750 பைக்கை ஹார்லி டேவிட்சன் விற்பனைக்கு கொண்டு வரும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து, ஸ்ட்ரீட் 500 பைக் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 உற்பத்தி

உற்பத்தி

ஹரியானாவில் உள்ள ஹார்லி டேவிட்சன் ஆலையிலிருந்து இந்த இரண்டு பைக்குகளும் உற்பத்தி செய்யப்பட உள்ளன. இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளன.

 எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

விலை விபரங்கள் அறிவிக்கப்படவில்லை. ஸ்ட்ரீட் 500 பைக் ரூ.4 லட்சத்திலும், இதைவிட ரூ.50,000 கூடுதலான விலையில் ஸ்ட்ரீட் 750 பைக் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Harley Davidson has taken a huge step forward with the launch of two of its smallest bikes ever. Street 750 and Street 500. The bikes were revealed at the ongoing EICMA show in Milan, Italy and they will head to India early next year.
Story first published: Tuesday, November 5, 2013, 15:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X