புதிய ஆக்டிவா-ஐ ஸ்கூட்டரை அறிமுகப்படுத்திய ஹோண்டா

ரூ.44,200 விலையில் ஆக்டிவா-ஐ என்ற பெயரில் புதிய ஸ்கூட்டரை ஹோண்டா நிறுவனம் இன்று விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

இந்த புதிய ஸ்கூட்டர் 125சிசி எஞ்சின் கொண்டதாக இருக்கலாம் என்ற யூகங்கள் எழுந்த நிலையில், இதில், 110சிசி எஞ்சின்தான் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 8 பிஎச்பி ஆற்றலையும், 8.74 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும்.

Honda Activa-i

புதிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், டெயில் லைட்டுகள் ஆகியவற்றுடன் வந்துள்ளது. 165 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதாக இருக்கிறது. 103 கிலோ எடை கொண்ட இந்த புதிய ஸ்கூட்டர்தான் இந்தியாவின் மிக குறைந்த எடை ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர் என ஹோண்டா தெரிவித்துள்ளது.

கோம்பி பிரேக்கிங் சிஸ்டம், ட்யூப்லெஸ் டயர்கள், பராமரிப்பு தேவையற்ற பேட்டரி, விஸ்காஸ் ஏர் பில்டர் மற்றும் இருக்கைக்கு கீழே 18 லிட்டர் பொருட்கள் வைப்பதற்கான இடவசதி ஆகியவை முக்கிய அம்சங்கள். 4 வண்ணங்களில் கிடைக்கும். ரூ.44,200 என்ற டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

Most Read Articles
English summary
Japanese two wheeler maker Honda has launched Activa-i scooter priced at Rs 44,200 ex-showroom, Delhi.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X