பிப்ரவரியில் புதிய 150சிசி பைக்கை அறிமுகப்படுத்தும் ஹோண்டா

ஹோண்டாவின் சிபிஆர் வரிசை பைக்குகள் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் நம்பிக்கையையும், வரவேற்பையும் பெற்றிருக்கிறது. நம் நாட்டு மார்க்கெட்டில் சிபிஆர் வரிசையில் சிபிஆர் 250ஆர் மற்றும் சிபிஆர் 150ஆர் ஆகிய பைக்குகளை ஹோண்டா விற்பனை செய்து வருகிறது.

இந்த நிலையில், சிபிஆர் 150ஆர் பைக்கின் ஸ்ட்ரீட் வெர்ஷனை கடந்த ஆண்டு நவம்பரில் இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தா மோட்டார் ஷோவில் ஹோண்டா அறிமுகம் செய்தது. இந்த புதிய பைக்கை பிப்ரவரியில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது ஹோண்டா. இந்த புதிய பைக் பற்றிய விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

ஸ்ட்ரீட் பைக்

ஸ்ட்ரீட் பைக்

சிபிஆர் வரிசையில் வந்தாலும் குறைந்த விலையை நிர்ணயிக்க வேண்டி பல மாறுதல்களை செய்துள்ளது ஹோண்டா. சிபிஆர் 150ஆருக்கும் இந்த புதிய பைக்குக்கும் ஏராளமான வித்தியாசங்கள். சிபி டேஸ்லர் சாயலை இந்த பைக் ஒத்திருக்கிறது. ஆனால், எஞ்சின் சிபிஆர் 150ஆர் பைக்கின் எஞ்சின்தான் இதில் பொருத்தப்பட்டிருப்பதால் இந்த பிரிவில் பவர்ஃபுல் பைக்காகவே இருக்கும்.

 எஞ்சின்

எஞ்சின்

இந்த பைக்கில் 17.6 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 150சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 6 ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டிருக்கிறது.

 சஸ்பென்ஷன்

சஸ்பென்ஷன்

முன்புறம் டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷனும், பின்புறம் லிங்டு சஸ்பென்ஷனும் பொருத்தப்பட்டுள்ளது.

வண்ணங்கள்

வண்ணங்கள்

வெள்ளை, கறுப்பு, மூவர்ணம் மற்றும் ஆரஞ்ச் ஆகிய 4 வண்ணங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

அறிமுகம்

அறிமுகம்

இன்னும் சில நாட்களில் இந்த புதிய பைக் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

விலை

விலை

ரூ.85,000 முதல் ரூ.90,000 விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Japanese two wheeler maker Honda is preparing to launch new 150cc motorcycle in India soon. 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X