இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் பிரிமியம் பைக் எது தெரியுமா?

KTM RC8
இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் பிரிமியம் பைக் மாடல் என்ற பெருமையை கேடிஎம் டியூக் பெற்றுள்ளது.

பஜாஜ் ஆட்டோவின் கீழ் செயல்படும் கேடிஎம் பிராண்டு கடந்த ஆண்டு இந்தியாவில் முதலாவதாக கேடிஎம் 200 பைக்கை விற்பனைக்கு கொண்டு வந்தது.

அறிமுகம் செய்யப்பட்டது முதல் கேடிஎம் டியூக் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற மாடலாக திகழ்கிறது. இதுவரை 8,500 பைக்குகளை பஜாஜ் கேடிஎம் விற்பனை செய்துள்ளது.

இந்த நிலையில், ரூ.1 லட்சத்திற்கும் கூடுதலாக விலை கொண்ட பிரிமியம் பைக் பிரிவில் இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் பைக் மாடல் என்ற பெருமையை கேடிஎம் டியூக் பெற்றுள்ளது.

ஸ்டைல், பெர்ஃபார்மென்ஸ் என அனைத்திலும் கேடிஎம் டியூக் 200 நிறைவான பைக்காக இருப்பதே வாடிக்கையாளர் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், டியூக் 200க்கு கிடைத்திருக்கும் அமோக வெற்றியை தொடர்ந்து டியூக் வரிசையில் புதிய பைக்குகளை அறிமுகம் செய்ய பஜாஜ்-கேடிஎம் திட்டமிட்டுள்ளது.

அடுத்து டியூக் 390 என்ற 375 சிசி எஞ்சின் பொருத்தப்பட்ட பைக் விற்பனைக்கு வருகிறது. இந்த பைக்கில் 45 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்.

Most Read Articles
English summary
KTM duke 200 Launched in January 2012, KTM clocked sales of 8500 units in calendar year 2012 making it by far the largest selling premium motorcycle* brand in the country.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X