கேடிஎம் ஆர்சி390 மற்றும் ஆர்சி200 பைக்குகள் விற்பனைக்கு வந்தது- விபரம்

By Saravana

கேடிஎம் நிறுவனத்தின் புதிய ஆர்சி390 மற்றும் ஆர்சி200 பைக் மாடல்கள் இன்று விற்பனைக்கு வந்தன. ட்யூக் வரிசையில் நேக்டு ஸ்டைல் பைக் மாடல்களை விற்பனை செய்து வந்த கேடிஎம் நிறுவனம் தற்போது ஃபேரிங் வெர்ஷன்களையும் களமிறக்கி உள்ளது.

ட்யூக் வரிசை பைக்குகளிலிருந்து மாறுபடும் வகையில் பின்புற டிசைன், ரைடிங் பொசிஷன் போன்றவற்றில் மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. ட்யூக் பைக் மாடல்களை விட சற்று கூடுதலான விலையல் இரு பைக் மாடல்களும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இருப்பினும், மிகச்சரியான விலையில் எளிதாக சொந்தமாக்கிக் கொள்ளும் விலையிலான சிறந்த ஸ்போர்ட்ஸ் பைக் மாடல்களாக இவை இருக்கின்றன.

எஞ்சின்

எஞ்சின்

நம் நாட்டு மார்க்கெட்டில் கேடிஎம் விற்பனை செய்யும் ட்யூக் 200 மற்றும் ட்யூக்390 பைக்குகளில் இருக்கும் அதே எஞ்சின்கள்தான் புதிய மாடலிலும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

பவர்

பவர்

கேடிஎம் ஆர்சி200 பைக்கில் 25 பிஎச்பி பவரையும், 19.2 என்எம் டார்க்கையும் அளிக்கும் 199.5சிசி எஞ்சினும், ஆர்சி390 பைக்கில் 43 பிஎச்பி பவரையும், 35 என்எம் டார்க்கையும் அளிக்கும் 373.3சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிரு்ககிறது. இரண்டு பைக்குகளிலும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டதாக வந்துள்ளது.

எடை

எடை

ஆர்சி200 பைக் 147.5 கிலோ எடை கொண்டதாகவும், ஆர்சி390 பைக் 159.5 கிலோ எடை கொண்டதாகவும் வந்துள்ளது.

ஆர்சி200 பைக் 147.5 கிலோ எடை கொண்டதாகவும், ஆர்சி390 பைக் 159.5 கிலோ எடை கொண்டதாகவும் வந்துள்ளது.

ஆர்சி200 பைக் 147.5 கிலோ எடை கொண்டதாகவும், ஆர்சி390 பைக் 159.5 கிலோ எடை கொண்டதாகவும் வந்துள்ளது.

ஆர்சி390 பைக்கில் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் நிரந்தர அம்சமாக கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இதனை தேவையில்லையெனில் ஆஃப் செய்து கொள்ளவும் முடியும். ஆர்சி390 பைக்கில் முழுவதுமான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் உள்ளது.

 புரொஜெக்டர் ஹெட்லைட்

புரொஜெக்டர் ஹெட்லைட்

இரண்டு பைக் மாடல்களிலும் இரட்டை புரொஜெக்டர் ஹெட்லைட் கொடுக்கப்பட்டுள்ளது.

 டிசைன்

டிசைன்

இரண்டு பைக்குகளும் சிறப்பான ஃபெர்ஃபார்மென்ஸையும், ரைடிங் பொசிஷன் கொண்டதாகவும் இருக்கின்றன. ட்யூக் வரிசை மாடல்களைவிடவும் இது சிறப்பான கையாளுமை கொண்டவை.

 விலை

விலை

கேடிஎம் ஆர்சி200 பைக் ரூ.1.60 லட்சம் விலையிலும், கேடிஎம் ஆர்சி390 பைக் ரூ.2.05 லட்சம் விலையிலும் கிடைக்கும்.

Most Read Articles
English summary
KTM RC 200 and 390cc launched in India. The two newly launched models will be priced at INR 1,60,000 for the RC 200 and INR 2,05,00 for the RC 390. The pricing is a little higher than the Duke, but is still one of the very affordable performance motorcycles available for the Indian market.
Story first published: Tuesday, September 9, 2014, 16:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X