ரூ.45,000 விலையில் விற்பனைக்கு வந்த மஹிந்திரா செஞ்சூரோ!

புதுமையான வசதிகள் கொண்ட மஹிந்திரா செஞ்சூரோ ஜெய்ப்பூரில் நடந்த விழாவில் சற்றுமுன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன் பேண்டீரோ பைக்குடன் சேர்த்து இந்த பைக்கும் பார்வைக்கு விடப்பட்டது. பல புதிய வசதிகளுடன் பார்வைக்கு வந்ததால் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

இந்தநிலையில், ரூ.45,000 என்ற மிகச் சவாலான விலையில் இந்த புதிய பைக் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பஜாஜ் டிஸ்கவர்டி, ஹீரோ பேஸன் எக்ஸ் ப்ரோ மற்றும் ஹோண்டா ட்ரீம் யுகா உள்ளிட்ட பைக்குகளுடன் போட்டி போடும் அம்சங்கள் மற்றும் விலையில் வந்துள்ளது. இந்த பைக்கை வாங்கும் முதல் 10,000 வாடிக்கையாளர்களுக்கு ரூ.44,000 என்ற ஆரம்ப விலையில் வாங்கிக் கொள்ளும் சிறப்பு தள்ளுபடி சலுகையையும் மஹிந்திரா அறிவித்துள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

8.5 எச்பி சக்தியையும், 8.5 என்எம் டார்க்கையும் வழங்கும் 106.7சிசி கொண்ட எம்சிஐ-5 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது.

பைன்ட் மீ லேம்ப்

பைன்ட் மீ லேம்ப்

செஞ்சூரோவின் டாப் வேரியண்ட்டில் இருளான அல்லது பார்க்கிங் பகுதியில் நிறுத்தியிருக்கும்போது, வண்டி எங்கு நிற்கிறது என்பதை எளிதாக கண்டுபிடிக்கும் வசதி கொண்ட Find me Lamps வசதி இருக்கிறது.

கெய்டு மீ ஹோம் லேம்ப்

கெய்டு மீ ஹோம் லேம்ப்

இரவில் வண்டியை நிறுத்தியவுடன் சிறிது நேரம் ஒளி தரும் Guide me Home lamps இருக்கிறது.

 டிஜிட்டல் மயம்

டிஜிட்டல் மயம்

அனலாக் டாக்கோமீட்டருடன் கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் பொருத்தப்பட்டு இருக்கிறது.

ரிமோட் சாவி

ரிமோட் சாவி

கார்களில் இருப்து போன்று ரிமோட் சாவி வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், சிறிய டார்ச் லைட்டும் உள்ளது.

எச்சரிக்கை அலார்ம்

எச்சரிக்கை அலார்ம்

திருட்டு போவதை தடுக்கும் வகையிலான எச்சரிக்கை அலார்ம் மற்றும் எஞ்சின் இம்மொபைலைசர் வசதியும் இருக்கிறது.

மைலேஜ்

மைலேஜ்

இந்த பைக் லிட்டருக்கு 85.4 கிமீ மைலேஜ் செல்லும் என அராய் சான்றளித்துள்ளது.

பெட்ரோல் டேங்க்

பெட்ரோல் டேங்க்

இந்த பைக்கில் 12.7 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டு இருக்கிறது.

கிரவுண்ட் கிளியரன்ஸ்

கிரவுண்ட் கிளியரன்ஸ்

நம்மூர் சாலை நிலைகளுக்கு ஏற்ற விதத்தில் 173 மிமீ கிரவுண்ட் கிளிரயன்ஸ் கொண்டது.

 எல்இடி டெயில் லைட்

எல்இடி டெயில் லைட்

எல்இடி டெயில் லைட் பைலட் லைட் பொருத்தப்பட்டு இருக்கிறது.

எலக்ட்ரிக் ஸ்டார்ட்

எலக்ட்ரிக் ஸ்டார்ட்

எலக்ட்ரிக் ஸ்டார்ட் மற்றும் கிக் ஸ்டார்ட் மாடல்களில் கிடைக்கும்.

நோ டிஸ்க் பிரேக்

நோ டிஸ்க் பிரேக்

டிஸ்க் பிரேக் இல்லை. இரு சக்கரங்களிலும் டிரம் பிரேக் பொருத்தப்பட்டு இருக்கிறது.

பேட்டரி

பேட்டரி

பராமரிப்பு அவசியமற்ற பேட்டரி இருப்பதால் கவலையில்லை.

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

மணிக்கு அதிகபட்சம் 92 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டதாக குறிக்கப்பட்டுள்ளது.

வண்ணங்கள்

வண்ணங்கள்

சிவப்பு மற்றும் கருப்பு நிறங்களில் கிடைக்கும்.

வேரியண்ட்கள்

வேரியண்ட்கள்

மொத்தம் 4 வேரியண்ட்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. தற்போது டாப் வேரியண்ட்டில் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது.

வாரண்டி

வாரண்டி

இந்த பைக்குக்கு 5 வாரண்டியும் வழங்கப்படுகிறது.

விலை

விலை

ரூ.45,000 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும்.

Most Read Articles
English summary
Mahindra's 2 wheelers has launched much anticipated Centuto 110cc bike at INR 45,000(Exshowroom, Delhi.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X