ஹார்லி டேவிட்சனுக்கு போட்டியாக வரும் அடுத்த அமெரிக்கன் பிராண்டு!

இந்தியாவில் தனது விக்டரி பிராண்டு குரூஸர் மோட்டார்சைக்கிள்களை அறிமுகப்படுத்த இருப்பதாக போலரிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த போலரிஸ் நிறுவனம் தற்போது இந்தியாவில் ஆஃப்ரோடு வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்திய மார்க்கெட்டுக்குள் நுழைந்து ஓர் ஆண்டுக்குள்ளாகவே இங்குள்ள அபரிதமான வர்த்தக வாய்ப்புகளை அந்த நிறுவனம் தெரிந்துகொண்டுவிட்டது.

மேலும், இந்தியாவில் பிரமியம் மோட்டார்சைக்கிள்களுக்கான வரவேற்பையும் பார்த்து எடை போட்டுவிட்ட அந்த நிறுவனம் தனது விக்டரி பிராண்டில் மோட்டார்சைக்கிள்களை விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து கோயம்புத்தூரில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் போலரிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பங்கஜ் துபே கூறுகையில்,"பிரிமியம் மோட்டார்சைக்கிள்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. எனவே, போலரிஸ் நிறுவனத்தின் அங்கமான விக்டரி பிராண்டின் பிரிமியம் மோட்டார்சைக்கிள்களை இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்ய உள்ளோம்," என்றார்.

அமெரிக்கா மற்றும் இதர பிற நாட்டு மார்க்கெட்டுகளில் ரூ.6 லட்சம் முதல் விக்டரி மோட்டார்சைக்கிள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும்போது வரி உட்பட கணக்கிடும்போது இன்னும் கூடுதலான விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் விக்டரி மோட்டார்சைக்கிள்கள் அறிமுகம் செய்யப்பட்டால் ஹார்லி டேவிட்சன், ஹோண்டா, ஹயோசங் மற்றும் சுஸூகி நிறுவனங்களின் பிரிமியம் பைக்குகளுக்கு நேரடி போட்டியை கொடுக்கும்.

Most Read Articles
English summary
U.S based Polaris Industries, the makers of off-road bikes and trikes, and snowmobiles, has announced that it will bring its two wheeler brand, Victory Motorcycles to India by the end of 2013
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X