புதுப்பொலிவுடன் வந்த புதிய சுஸுகி ஆக்செஸ் ஸ்கூட்டர்!

By Saravana

ஹோண்டா ஆக்டிவாவுக்கு அடுத்து இந்திய வாடிக்கையாளர்களின் அடுத்த விருப்பமாக சுஸுகி ஆக்செஸ் ஸ்கூட்டர் இருந்து வருகிறது. இந்த நிலையில், கடும் போட்டி காரணமாக தற்போது ஆக்செஸ் ஸ்கூட்டருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

எனவே, இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு 7 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது முதல்முறையாக ஆக்செஸ் ஸ்கூட்டருக்கு புதுப்பொலிவு கொடுத்து அறிமுகம் செய்துள்ளது சுஸுகி. பெரிய அளவிலான மாற்றங்கள் இல்லை. புதிய வண்ணங்களிலும், இரண்டு மெட்டாலிக் வண்ணங்களிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

New Suzuki Access

புதிய பேட்ஜ் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, முன்புறத்தில் புதிய ஸ்டீல் மட்கார்டு, சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம், அலுமினியம் கிராப் ரெயில், புதிய எக்ஸ்சாஸ்ட் கவர், ட்யூப்லெஸ் டயர், மெயின்டனன்ஸ் ஃப்ரீ பேட்டரி போன்றவை குறிப்பிடத்தக்க புதிய அம்சங்களாக இருக்கின்றன.

சுஸுகி ஆக்செஸ் ஸ்கூட்டரில் 8.58 எச்பி பவரையும், 9.8 என்எம் டார்க்கையும் அளிக்கும் 124சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. கிக் ஸ்டார்ட் மற்றும் செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. இந்த ஸ்கூட்டரில் இருக்கைக்கு கீழே 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட பொருட்கள் வைப்பதற்கான இடவசதி உள்ளது.

ரூ.53,223 டெல்லி ஆன்ரோடு விலையில் இந்த புதிய சுஸுகி ஆக்செஸ் 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்துள்ளது. புதிய ஹோண்டா ஆக்டிவா 125, மஹிந்திரா டியூரோ மற்றும் வெஸ்பா மாடல்களுக்கு இதன் விலை கடும் நெருக்கடியை அளிக்கும்.

Most Read Articles
English summary
Suzuki Motorcycles has been in India for a while now. In 2014, they revealed several of their new offerings. They also launched their new scooter christened as the Let's. They will soon launch their motorcycle dubbed as the Gixxer, however, they have launched their quarter-litre bike the Inazuma.
Story first published: Tuesday, August 26, 2014, 12:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X