125சிசி ஆக்டிவா நெருக்கடி... கவர்ச்சியை கூட்டி வந்த சுஸுகி ஸ்விஷ்!

By Saravana

புதிய 125சிசி ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் கொடுத்துள்ள நெருக்கடியை சமாளிக்கும் விதத்தில், புதுப்பொலிவுடன் சுஸுகி ஸ்விஷ் ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்துள்ளது.

இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரின் டிசைனில் சில மாற்றங்களை செய்து புதுப்பொலிவு கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, டியூவல் டோன் வண்ணத்தில் புதிய சுஸுகி ஸ்விஷ் கிடைக்கும்.

Suzuki Swish 1

எஞ்சினில் மாற்றங்கள் இல்லை. 8.58 எச்பி பவரை அளிக்கும் 124சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. சிவிடி டிரான்ஸ்மிஷன் கொண்டது. 110 கிலோ எடை கொண்ட இந்த ஸ்கூட்டரில் 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஸ்டோரேஜ் இடவசதி முக்கிய அம்சம்.

இந்த ஸ்கூட்டரில் 120மிமீ டிரம் பிரேக்குகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. ஆனால், புதிய ஆக்டிவா 125 ஸ்கூட்டரில் 130மிமீ டிரம் பிரேக்குகளும், டீலக்ஸ் மாடலில் முன்புறம் டிஸ்க் பிரேக்குடனும் கிடைக்கிறது. மேலும், ஹோண்டாவின் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டமும் புதிய ஆக்டிவா 125 ஸ்கூட்டரில் உண்டு.

Suzuki Swish New

அதேசமயம், விலையின் அடிப்படையில் பார்க்கப்போனால், ஹோண்டா ஆக்டிவா 125சிசி ஸ்கூட்டரைவிட சுஸுகி ஸ்விஷ் ரூ.5,000 குறைவான விலையில் கிடைக்கிறது.

Most Read Articles
English summary
Suzuki Motorcycle India has silently updated its Swish 125cc automatic scooter to better enable it counter the inevitable surge of the recently launched Activa 125.
Story first published: Tuesday, May 13, 2014, 16:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X