இந்தியாவில் புதிய கிவாமி எலக்ட்ரிக் சூப்பர் பைக் விற்பனைக்கு வந்தது - முழு விபரம்

By Saravana

ஜப்பானை சேர்ந்த டெர்ரா மோட்டார்ஸ் நிறுவனம் அதிவேக எலக்ட்ரிக் சூப்பர் பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

கிவாமி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய சூப்பர் பைக் 1000சிசி செக்மென்ட்டில் இருக்கும் பைக்குகளுடன் போட்டி போடும். இந்த பைக்கின் படங்கள் மற்றும் கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

மின் மோட்டார்

மின் மோட்டார்

கிவாமி சூப்பர் பைக்கில் 13.41 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் மின் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கிறது.

ரேஞ்ச்

ரேஞ்ச்

ஒருமுறை சார்ஜ் செய்வதற்கு 6 மணி நேரம் பிடிக்குமாம். ஆனால், ஒரு முறை சார்ஜ் செய்தால் 200 கிமீ வரை செல்ல முடியும் என்கிறது டெர்ரா மோட்டார்ஸ். இதன்மூலம், இந்தியாவின் அதிக சார்ஜ் ரேஞ்ச் கொண்ட இருசக்கர வாகனம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

 டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

மணிக்கு 160 கிமீ வேகத்தில் இந்த பைக் செல்லும் வல்லமை கொண்டதாக டெர்ரா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

 சஸ்பென்ஷன்

சஸ்பென்ஷன்

இந்த பைக் முழுக்க முழுக்க கைகளாலேயே கட்டமைக்கப்படுகிறது. மேலும், இந்திய சாலை நிலைகளுக்கு ஏற்ற அம்சங்கள் கொண்ட சஸ்பென்ஷன் அமைப்பையும் பெற்றிருக்கிறது.

இறக்குமதி

இறக்குமதி

ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்து இந்த புதிய பைக்கை விற்பனை செய்ய இருப்பதாக டெர்ரா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. அடுத்த ஓரிரு மாதங்களில் இந்த புதிய சூப்பர் பைக்கின் விற்பனை துவங்க உள்ளதாக டெர்ரா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

விலை

விலை

ரூ.18 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிவாமி எலக்ட்ரிக் சூப்பர் பைக் விற்பனைக்கு வந்துள்ளது.

இதர மாடல்கள்

இதர மாடல்கள்

இந்த புதிய கிவாமி எலக்ட்ரிக் சூப்பர் பைக்கை தவிர்த்து, புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரையும், புதிய எலக்ட்ரிக் மூன்று சக்கர வாகனத்தையும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு வைக்க இருப்பதாக டெர்ரா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

Most Read Articles
English summary
Terra Motors, a leading Japanese manufacturer of electric motorcycles, scooters and three wheelers has launched the Kiwami electric superbike in India. The Kiwami is a 1000cc class motorcycle and is priced at INR 18 lakhs. Click through the gallery below for more details and images.
Story first published: Wednesday, January 29, 2014, 13:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X