இந்தியாவில் 1.0 லிட்டர் எஞ்சினுடன் சுஸுகியின் புதிய அட்வென்ச்சர் பைக்!

By Saravana

இந்தியாவில் சாகச பைக்குகள் மீதான ஆர்வம் மெல்ல அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இதை மனதில் வைத்து சுஸுகி இருசக்கர வாகன நிறுவனம் புதிய சக்திவாய்ந்த அட்வென்ச்சர் ரக பைக்கை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

சுஸுகி வி- ஸ்ட்ரோம் 1000 ஏபிஎஸ் என்ற பெயரிலான இந்த புதிய மாடல் சொகுசான பயணத்தையும், ஆஃப் ரோடுகளிலும் சிறப்பான செயல்திறனும் கொண்டதாக இருக்கும். இந்த புதிய பைக்கின் படங்கள், கூடுதல் விபரங்களை தொடர்ந்து காணலாம்.


இரண்டாம் தலைமுறை

இரண்டாம் தலைமுறை

கடந்த 2002ம் ஆண்டில் சுஸுகி வி- ஸ்ட்ரோம் 1000 பைக் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருக்கும் மாடல் இரண்டாம் தலைமுறை சுஸுகி வி- ஸ்ட்ரோம் மாடல்.

எஞ்சின்

எஞ்சின்

இந்த புதிய பைக்கில் 101 பிஎச்பி ஆற்றலையும், 103 என்எம் டார்க்கையும் அளிக்கும் 1,037சிசி வி ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இது மிகச்சிறப்பான செயல்திறனையும், குறைவான எஞ்சின் சுழல் வேகத்திலேயே அதிக டார்க்கையும் வழங்கும்.

வளத்தியான பைக்

வளத்தியான பைக்

பிற பைக் மாடல்களைவிட இதன் இருக்கைக்கும், தரைக்குமான இடைவெளி சற்று அதிகம். எனவே, ஆரம்பத்தில் ஓட்டும்போது வளைவுகளில் சற்று கவனமாக இருப்பது அவசியம். சில நாட்கள் பழகிவிட்டால் இந்த பைக்கை ஓட்டுவதில் ஓர் அலாதி சுகம் கிடைக்கும்.

இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பர், முன்புறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க்குகள் கொண்டுள்ளது. பிஎம்டபிள்யூ, டிரையம்ஃப் பிராண்டுகளின் சாகச ரக பைக்குகளைவிடவும் சிறப்பான ஓட்டுதல் தரத்தை வழங்கும் என ஆட்டோமொபைல் துறையினர் தெரிவிக்கின்றனர். ஆஃப் ரோடு டயர்கள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், 3 விதமான அட்ஜெஸ்ட் வசதிகொண்ட டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவை முக்கிய அம்சங்களாக கூறலாம்.

மைலேஜ்

மைலேஜ்

நகர்ப்புறங்களில் லிட்டருக்கு 23 கிமீ முதல் 25 கிமீ வரையிலும், நெடுஞ்சாலையில் லிட்டருக்கு 17 கிமீ முதல் 20 கிமீ வரையிலும் மைலேஜ் தரும். இது லிக்யூடு கூல்டு எஞ்சின் என்பதால் எஞ்சின் அதிக சூடாகாது.

 தினசரி பயன்பாடு

தினசரி பயன்பாடு

சாகச பயணங்களுக்கு மட்டுமின்றி தினசரி பயன்பாட்டுக்கும் ஏற்றதாக இதனை கூறலாம். த்ரில்லையும், சொகுசையும் வழங்கும் பைக்கை வாங்க விரும்புபவர்களுக்கு சிறப்பான சாய்ஸ்.

விலை

விலை

புனேயில் ரூ.14.95 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய அட்வென்ச்சர் ரக பைக் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
In the adventure biking segment which is mainly dominated by Triumphs and KTMs, here comes a new face - the Suzuki V-Strom 1000 ABS. This new bike is the second generation of the adventure motorcycle which debuted in 2002. The V-Strom offers good on-road performance as well as decent off-road agility as well. The bike is now on sale for INR 14.95 lakh (ex-showroom Pune).
Story first published: Thursday, June 26, 2014, 13:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X