பிஎம்டபிள்யூவுடன் கூட்டணி அமைத்த டிவிஎஸ்: 500 சிசி.,க்கும் குறைவான பைக்குகளை அறிமுகப்படுத்த திட்டம்!

BMW Bike
ஜெர்மனியை சேர்ந்த உலகப் புகழ்பெற்ற பிஎம்டபிள்யூ மோட்டோராடு பைக் தயாரிப்பு நிறுவனத்துடன் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டிவிஎஸ் மோட்டார்ஸ் கூட்டணி அமைத்துள்ளது.

சென்னையில் இன்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பிஎம்டபிள்யூ மோட்டோராடு பிரிமியம் பைக் தயாரிப்பு நிறுவனத்துடன் நீண்ட கால அடிப்படையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் இன்று முறைப்படி அறிவித்தது.

டிவிஎஸ் - பிஎம்டபிள்யூ கூட்டணியில் 250சிசிக்கும் 500சிசி.,க்கும் இடைப்பட்ட திறன் கொண்ட எஞ்சினுடன் ஸ்போர்ட்ஸ் ரக பைக்குகள் தயாரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கூட்டணியின் சார்பில் தயாரிக்கப்படும் மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தாலும், அயல்நாட்டு மார்க்கெட்டுகளில் பிஎம்டபிள்யூ மோட்டோராடு நிறுவனத்தாலும் விற்பனை செய்யப்பட உள்ளது.

இந்த புதிய ஒப்பந்தம் மூலம் புகழ்வாய்ந்த பிஎம்டபிள்யூ நிறுவனத்திடமிருந்து ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கான தொழில்நுட்பத்தை டிவிஎஸ் மோட்டார்ஸ் பெற இருக்கிறது. வரும் 2015ம் ஆண்டில் இந்த புதிய மோட்டார்சைக்கிள்கள் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்படும் என டிவிஎஸ் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

Most Read Articles
English summary
Chennai based two wheeler maker Tvs motors company and BMW motorrad have signed a long term cooperation agreement. The aim of the cooperation is to join forces to develop and produce a new series of motorcycles that will cater to the segment below 500 cc. This was announced at a press conference today in Chennai. 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X