சென்னையில் புதிய யமஹா பைக் விற்பனைக்கு அறிமுகம்- விபரம்!

By Saravana

ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் எஞ்சினுடன் புதிய யமஹா எஃப்இசட்- எஸ் பைக் மாடல் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய பைக் மாடலின் செயல்திறனை காட்டும் வகையில், 'மிஷன் 10,000' என்ற பெயரில் 10,000 கிமீ.,க்கு எஃப்இசட்- எஸ் பைக்குகளை ஓட்டி பார்க்கும் வகையில், ஓர் பயணத்திற்கு யமஹா நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.

இந்த பயணம் சென்னையில் நிறைவு பெற்றது. சென்னை ஒய்.எம.சி.ஏ., மைதானத்தில் இதற்காக சிறப்பு நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த மிஷன் 10,000 நிகழ்ச்சியின்போது ஓர் புதிய பைக் மாடலையும் யமஹா நிறுவனம் அறிமுகம் செய்தது. அதிக எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் யமஹாவின் புதிய புளுகோர் தொழில்நுட்பத்துடன் கொண்ட எஸ்இசட்-ஆர்ஆர் பைக்கின் புதிய மாடலை யமஹா விற்பனைக்கு அறிமுகம் செய்தது.


வெர்ஷன் 2.0

வெர்ஷன் 2.0

கடந்த ஆண்டு யமஹா எஸ்இசட்- ஆர்ஆர் பைக்கின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விர்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பைக்கில் புளுகோர் தொழில்நுட்பம் கொண்ட எஞ்சினுடன் தற்போது யமஹா எஸ்இசட்- ஆர்ஆர் வெர்ஷன் 2.0 என்ற மாடலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

எஞ்சின்

எஞ்சின்

புதிய எஸ்இசட்-ஆர்ஆர் பைக் மாடலில் மாறுதல்கள் செய்யப்பட்ட புதிய 149சிசி சிங்கிள் சிலிண்டர் கார்ப்புரேட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக 12.1 பிஎஸ் பவரையும், 12.8 என்எம் டார்க்கையும் இந்த பைக் வழங்கும். முந்தைய மாடலைவிட இந்த எஞ்சின் 11 சதவீதம் கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை தரும் வகையில் மேம்படுத்தப்பட்டிருக்கிறது.

விலை விபரம்

விலை விபரம்

முந்தைய மாடலைவிட புளுகோர் தொழில்நுட்பம் கொண்ட யமஹா எஸ்இசட்- ஆர்ஆர் பைக் மாடல் ரூ.4,000 கூடுதல் விலை கொண்டதாக விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னையில் இந்த புதிய மாடல் சென்னையில் ரூ.66,461 எக்ஸ்ஷோரூம் விலையிலும், டெல்லியில் ரூ.65,300 எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு கிடைக்கும்.

 இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

ரெட் டேஷ், ஐவரி ஒயிட் மற்றும் க்ரீன் ஏரோ என்ற மூன்று புதிய வண்ணங்களில் கிடைக்கும். புதிதய ட்யூப்லெஸ் டயர்கள், புதிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் ஆகியவையும் இந்த மாடலுக்கு சிறப்பு சேர்க்கின்றன. 24 முதல் 35 வயதுடைய வாடிக்கையாளர் வட்டத்தை குறிவைத்து நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக யமஹா தெரிவிக்கிறது.

Most Read Articles
English summary
Yamaha Motor India Sales Pvt. Ltd., launched its Version 2.0 SZ-RR model. The second generation of this motorcycle sports ‘Blue Core' technology. The Japanese engineers have improved fuel efficiency, performance and riding pleasure with their 2014 SZ-RR. The first model was launched back in 2013 and has been upgraded relatively soon.
Story first published: Monday, October 20, 2014, 13:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X