புதிய 125சிசி ஸ்கூட்டரை களமிறக்கும் யமஹா

By Saravana
Yamaha New Scooter
இந்தியாவில் புதிய ஸ்கூட்டரை விரைவில் யமஹா அறிமுகப்படுத்துகிறது. இந்த புதிய ஸ்கூட்டர் 125சிசி திறன் கொண்ட எஞ்சினுடன் வருகிறது.

கடந்த ஆண்டு ரே என்ற புதிய ஸ்கூட்டரை யமஹா அறிமுகப்படுத்தியது. 113சிசி திறன் கொண்ட எஞ்சினுடன் ரே வந்தது.

மேலும், இளம் பெண்களை கவரும் வகையில், டிசைன் மற்றும் வசதிகளுடன் ரே ஸ்கூட்டர் வந்தது. விற்பனையிலும் ஓரளவு நல்ல வளர்ச்சியை பெற்று வருகிறது.

இந்த நிலையில், ஆக்டிவா, சுஸுகி ஆக்செஸ் உள்ளிட்ட ஸ்கூட்டர் மாடல்களுக்கு போட்டியை கொடுக்கும் வகையிலும், ஆண்கள் விரும்பும் டிசைனுடன் புதிய ஸ்கூட்டரை இந்த ஆண்டு மத்தியில் அறிமுகப்படுத்த இருக்கிறது யமஹா.

இந்த புதிய ஸ்கூட்டரில் 125சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த புதிய ஸ்கூட்டர் மூலம் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் தனது பங்களிப்பை மேலும் கணிசமாக அதிகரிக்க முடியும் என யமஹா நம்புகிறது.

ரே ஸ்கூட்டர் ரூ.46,000 எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், புதிய யமஹா ஸ்கூட்டர் ரூ.50,000 எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Yamaha India is looking at various angles to build up its scooter segment in India. Currently Yamaha India offers the Ray scooter. The Ray is priced at Rs. 46,000/- (ex-showroom Delhi) In the coming days, Yamaha is looking to roll an automatic scooter. However the company is looking to roll-out their next scooter in a 125cc avatar.
Story first published: Friday, January 25, 2013, 10:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X