ரெனோ க்விட் அடிப்படையிலான குட்டி எம்பிவி காரின் ஸ்பை படங்கள்!!

ரெனோ க்விட் காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய எம்பிவி காரின் ஸ்பை படங்கள் வெளியாகி இருக்கின்றன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

இந்திய மார்க்கெட்டில் பெரும் வெற்றியை பதிவு செய்திருக்கும் ரெனோ க்விட் கார் வாடிக்கையாளர்களின் தேர்வில் முக்கிய இடம் வகிக்கிறது. இந்த நிலையில், தனது சந்தையை வலுப்படுத்திக் கொள்ளும் விதத்தில், ரெனோ கார் நிறுவனம் க்விட் கார் அடிப்படையிலான புதிய எம்பிவி காரை உருவாக்கி இருக்கிறது. இதன் விசேஷமே, இந்த 7 சீட்டர் எம்பிவி கார் 4 மீட்டருக்குள் வடிவமைக்கப்பட்டு இருப்பதுதான்.

இந்த கார் தற்போது தீவிரமான சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. அங்க அடையாளங்கள் மறைக்கப்பட்ட நிலையில், தற்போது சோதனை செய்யப்பட்டு வரும் இந்த காரின் ஸ்பை படங்கள் மீண்டும் வெளியாகி இருக்கின்றன.

இந்த எம்பிவி கார் 4 மீட்டர் நீளத்திற்குள் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. உட்புறத்தில் மூன்று வரிசை இருக்கை வேண்டி, முன்புறத்தில் பானட் அமைப்பின் நீளம் மிகவும் குறைக்கப்பட்டு இருக்கிறது. க்விட் காரின் சில டிசைன் தாத்பரியங்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பதை முன்புற பானட் மற்றும் பின்புற தோற்றத்தை வைத்து கணிக்க முடிகிறது. ஸ்டீல் வீல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

MOST READ: பெட்ரோல், டீசல் நிரப்பினால் பைக், லேப்டாப், ஏசி, மொபைல் இலவசம்.. இந்தியாவில் இப்படியும் ஒரு அதிசயம்

டட்சன் கோ ப்ளஸ் கார் போலவே, இந்த காரும் மினி எம்பிவி மாடலாக நிலைநிறுத்தப்பட இருக்கிறது. ரெனோ - நிசான் கூட்டணியின் CMF- A+ பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த புதிய கார் ஆர்பிசி என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படுகிறது.

ரெனோ க்விட் காரில் பயன்படுத்தப்படும் 68 பிஎஸ் பவரை அளிக்கும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினை பயன்படுத்த ரெனோ நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. எனினும், 7 சீட்டர் மாடலுக்கு இந்த எஞ்சின் திறன் போதாது என்பதால், டர்போசார்ஜர் துணையுடன் இயங்கும் விதத்தில் இந்த எஞ்சின் மாறுதல் செய்யப்படும் வாய்ப்புள்ளது. ரெனோ நிறுவனத்திடம் சிறிய டீசல் எஞ்சின் இல்லை. எனவே, டீசல் மாடலுக்கு வாய்ப்பில்லை.

க்விட் காரில் இருப்பது போன்ற டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், தொடுதிரையு"ன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்ற அம்சங்கள் இடம்பெற்றிருக்கும். ஓட்டுனருக்கான ஏர்பேக், பார்க்கிங் சென்சார்கள், ஸ்பீடு அலர்ட் சிஸ்டம், சீட்பெல்ட் ரிமைன்டர் உள்ளிட்ட அம்சங்களும் கொடுக்கப்பட்டிருக்கும்.

இந்த கார் ரூ.5 லட்சம் பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, க்விட் கார் போலவே இதுவும் வாடிக்கையாளர் மத்தியில் பெரிய வரவேற்பை பெறும் வாய்ப்பு இருக்கிறது. மேலும், 4 மீட்டருக்கும் குறைவான எம்பிவி கார்களை பெரிய ஹேட்ச்பேக் கார்களாகவே கருத முடியும். மூன்றாவது வரிசை சிறியவர்கள் மட்டுமே அமரும் இடவசதியை பெற்றிருக்கும். எனவே, க்விட் காரைவிட அதிக இடவசதி கொண்ட மாடலாக இதனை நிலைநிறுத்த ரெனோ முயற்சிக்கலாம். டீம் பிஎச்பி தளத்தின் உறுப்பினர் இந்த ஸ்பை படங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

MOST READ: விஐபிகள் பாதுகாப்பிற்கு ரூ360 கோடிக்கு வாடகைக்கு கார் வாங்கிய டில்லி அரசு... ஆமா பெட்ரோல் யாரு போட்டது?

Popular In the Community
Load more...