சென்னை ரெனால்ட் ஆலையில் புதிய கார்களை நூதன முறையில் திருடி பாதி விலைக்கு விற்ற ஊழியர்கள்

சென்னைக்கு அருகே உள்ள ரெனால்ட் கார் தொழிற்சாலையில் இருந்து புத்தம் புதிய கார்களை திருடி, வெளிமார்க்கெட்டில் பாதி விலைக்கு விற்பனை செய்த 2 ஊழியர்களை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சென்னைக்கு அருகே உள்ள ஒரகடம் பகுதியில், ரெனால்ட்-நிஸான் கார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு, பல்வேறு மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

இங்கு கடந்த ஜனவரி 22ம் தேதி, 2 புத்தம் புதிய ரெனால்ட் டஸ்ட்டர் கார்கள் திருடுபோனது. இந்தியாவில் விற்பனையாகும் பிரபலமான எஸ்யூவி வகை கார்களில் ஒன்றுதான் ரெனால்ட் டஸ்ட்டர். இந்த 2 கார்களின் மதிப்பு சுமார் 25 லட்ச ரூபாய். ஆனால் கார்களை திருடியது யார்? என்பது தெரியவில்லை.

எனவே ரெனால்ட்-நிஸான் கார் தொழிற்சாலை உயரதிகாரிகள் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார், எட்டு மாதங்களுக்கு பிறகு தற்போது குற்றவாளிகளை கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர்.

அதே தொழிற்சாலையில் பணியாற்றி வரும் மாரிமுத்து (28 வயது), அருண் குமார் (27 வயது) ஆகிய 2 ஊழியர்கள்தான், 2 டஸ்ட்டர் கார்களை திருடி சென்றவர்கள். இதில், மாரிமுத்து குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர். அருண் குமார், தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்தவர்.

MOST READ: புதிய கார் எனக்கூறி பழைய காரை வாடிக்கையாளரின் தலையில் கட்டிய டீலர்.. வசமாக சிக்கி கொண்டது டாடா

மாரிமுத்து, அருண் குமார் ஆகிய இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக, சென்னை ரெனால்ட்-நிஸான் தொழிற்சாலையில் பணியாற்றி வருகின்றனர். 2 ரெனால்ட் டஸ்ட்டர் கார்களையும் திருடி செல்ல, மிக நூதனமான வழிமுறையை அவர்கள் கையாண்டுள்ளனர்.

தொழிற்சாலையில் இருந்து புத்தம் புதிய கார்களை திருடி வெளியே எடுத்து செல்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஆனால் அதே தொழிற்சாலையில் பணியாற்றுவதால், குறுக்கு வழியில் எப்படி கார்களை திருடி வெளியே கொண்டு செல்வது என்பதை அவர்கள் இருவரும் அறிந்து வைத்திருந்தனர்.

அதாவது தொழிற்சாலையில் இருந்து வெளியே வரும் கார்களின் நம்பர் பிளேட்களை பாதுகாவலர்கள் பரிசோதிப்பது வழக்கம். ஆனால் காரை முழுமையாக சோதனையிட மாட்டார்கள். இந்த விஷயத்தை மாரிமுத்துவும், அருண் குமாரும் நன்கு அறிந்திருந்தனர்.

எனவே பழைய கார்களின் நம்பர் பிளேட்களை புதிய 2 ரெனால்ட் டஸ்ட்டர் கார்களில், அவர்கள் பொருத்தி விட்டனர். இதன்மூலமாக காரை திருடி, மிக எளிதாக வெளியே கொண்டு சென்று விட்டனர். அவை புதிய கார்கள் என்பதை பாதுகாவலர்கள் கண்டறிய தவறி விட்டனர்.

MOST READ: எதிர்கால ஆட்டோ உலகை ஆளபோகும் பிரேக்கிங் தொழிற்நுட்பங்கள் இவைதான்...

ரெனால்ட் டஸ்ட்டர் காரானது, ரூ.7.95 லட்சம் முதல் 12.84 லட்சம் வரையிலான எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் மாரிமுத்துவும், அருண் குமாரும் தாங்கள் திருடிய இரண்டு கார்களில் ஒன்றை வெறும் 6 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர்.

மற்றொரு காரை விற்பனை செய்யாமல், தங்கள் வசமே வைத்திருந்தனர். அந்த காரையும் யார் தலையிலாவது கட்டி பணத்தை கறந்து விட முடிவு செய்திருந்த நேரத்தில்தான், போலீசாரிடம் சிக்கி கொண்டனர். தற்போது அவர்கள் இருவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்துவிட்டனர்.

அத்துடன் அவர்கள் திருடிய 2 ரெனால்ட் டஸ்ட்டர் கார்களும், போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு விட்டது. இந்த 2 கார்களில் ஒன்று பிரவுன். மற்றொன்று சில்வர் நிறம் கொண்டது. போலீசார் பறிமுதல் செய்த நேரத்தில், இந்த 2 கார்களிலும் போலி நம்பர் பிளேட்தான் பொருத்தப்பட்டிருந்தது.

எனவே இது போன்ற நபர்களிடம் இருந்து கார் வாங்கும்போது மிக மிக கவனமாக இருப்பது நல்லது. எந்த ஒரு முடிவையும் எடுக்கும் முன்பாக, ஒரு முறைக்கு இரு முறை க்ராஸ் செக் செய்து கொள்வதும் சிறந்ததாக இருக்கும். அத்துடன் காரையும் முழுமையாக சோதனை செய்து பார்த்து விடலாம்.

MOST READ: கேரள வெள்ளத்தில் உயிர்களை காப்பாற்றிய மீனவருக்கு புதிய மஹிந்திரா மராஸ்ஸோ கார் பரிசு...

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு போட்டியாக, மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில், மராஸ்ஸோ காரை லான்ச் செய்தது. அந்த காரின் ஆல்பம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Read More About: ஆஃப் பீட்

Popular In the Community
Load more...