பெட்ரோல், டீசல் நிரப்பினால் பைக், லேப்டாப், ஏசி, மொபைல் இலவசம்.. இந்தியாவில் இப்படியும் ஒரு அதிசயம்

பெட்ரோல், டீசல் நிரப்பும் வாடிக்கையாளர்களுக்கு பைக், லேப்டாப், வாஷிங் மெஷின், ஏசி, மொபைல், சோபா செட் என கவர்ச்சிகரமான இலவசங்களை பங்க் உரிமையாளர்கள் வழங்கி வருகின்றனர்.

பெட்ரோல், டீசல் நிரப்பும் வாடிக்கையாளர்களுக்கு பைக், லேப்டாப், வாஷிங் மெஷின், ஏசி, மொபைல், சோபா செட் என கவர்ச்சிகரமான இலவசங்களை பங்க் உரிமையாளர்கள் வழங்கி வருகின்றனர். இந்தியாவில் இப்படி ஒரு அதிசயம் நடப்பது உண்மைதான். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

Advertisement

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்து வருவதால், பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. சாமானிய மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது.

Advertisement

பெட்ரோல், டீசல் விலை உயர்வானது அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்விற்கும் வழிவகுத்து விடும். எனவே சாமானிய மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ஆனால் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசிடம் எவ்வித திட்டமும் இருப்பதாக தெரியவில்லை.

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. ஆனால் மத்திய அரசு அதற்கு இன்னும் செவிசாய்க்கவில்லை. எனவே பெட்ரோல் மற்றும் டீசலுக்கு, மத்திய அரசின் கலால் வரி, மாநில அரசின் வாட் வரி உள்பட பல்வேறு வரிகள் விதிக்கப்படுகின்றன.

இதில், வாட் வரியானது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. இதனால் இந்தியா முழுவதும் ஒரே விலையில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவது இல்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விலையில் பெட்ரோல், டீசல் விற்பனையாகி வருகிறது.

முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மத்திய பிரதேச மாநிலத்தில், பெட்ரோலுக்கு 27 சதவீதமும், டீசலுக்கு 22 சதவீதமும் வாட் வரி விதிக்கப்பட்டு வருகிறது. பிற மாநிலங்களை காட்டிலும் மத்திய பிரதேசத்தில் பெட்ரோல், டீசலுக்கான வாட் வரி அதிகம்.

இதனால் இந்தியாவிலேயே மிக அதிக விலைக்கு பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படும் இடங்களில் ஒன்றாக மத்திய பிரதேசம் உள்ளது. எனவே மத்திய பிரதேச மாநிலம் வழியாக பயணிக்கும் லாரி, கார் உள்ளிட்ட வாகனங்களின் டிரைவர்கள் அங்கு பெட்ரோல், டீசல் நிரப்புவது இல்லை.

அதற்கு மாறாக மத்திய பிரதேச மாநில எல்லையை கடந்து, வேறு மாநிலத்தில்தான் பெட்ரோல், டீசல் நிரப்புகின்றனர். இதுதவிர மத்திய பிரதேச மாநில எல்லையை ஒட்டி வசிக்கும் பொதுமக்களும் கூட தங்கள் வாகனங்களுக்கு அங்கு பெட்ரோல், டீசல் நிரப்புவதை தவிர்த்து வருகின்றனர்.

எல்லையில் வசிப்பதால், அண்டை மாநிலங்களுக்கு செல்வது என்பது அவர்களுக்கு எளிதான ஒன்று. தங்கள் மாநிலத்தை விட குறைந்த விலையில் பெட்ரோல், டீசல் கிடைப்பதால், வேறு மாநிலத்திற்கு சென்றுதான் அவர்களும் பெட்ரோல், டீசல் வாங்குகின்றனர்.

எனவே மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கவலையடைந்துள்ளனர். பெட்ரோல், டீசல் விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக தற்போது அம்மாநிலத்தை சேர்ந்த பங்க் உரிமையாளர்கள், இலவசங்களை வாரி வழங்க தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து மத்தியபிரதேசத்தை சேர்ந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர் ஒருவர் கூறுகையில், ''100 லிட்டர் டீசல் நிரப்பும் டிரக் டிரைவருக்கு உணவும், தேனீரும் இலவசமாக வழங்குகிறோம். அதேநேரத்தில் 5 ஆயிரம் லிட்டர் நிரப்புபவர்களுக்கு மொபைல், கைக்கடிகாரம் அல்லது சைக்கிள் வழங்கப்படுகிறது.

15 ஆயிரம் லிட்டர் நிரப்புபவர்களுக்கு சோபா செட் அல்லது 100 கிராம் வெள்ளி நாணயம் வழங்கி வருகிறோம். 25 ஆயிரம் லிட்டர் டீசல் நிரப்பும் வாடிக்கையாளர்களுக்கு ஆட்டோமெட்டிக் வாஷிங் மெஷினும், 50 ஆயிரம் லிட்டர் நிரப்புபவர்களுக்கு ஏசி அல்லது லேப்டாப் வழங்கப்படுகிறது.

உச்சபட்சமாக ஒரு லட்சம் லிட்டர் நிரப்பும் வாடிக்கையாளர்களுக்கு ஸ்கூட்டர் அல்லது மோட்டார் சைக்கிள் வழங்குகிறோம். இலவசங்களை வழங்க தொடங்கியது முதல், பெட்ரோல், டீசல் விற்பனை அதிகரித்துள்ளது. ஆனால் வாட் வரியை குறைக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

குஜராத், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், சட்டீஸ்கர், மகாராஷ்டிரா ஆகியவை மத்திய பிரதேசத்தின் அண்டை மாநிலங்கள். இதில், குஜராத் மாநிலத்தில் (அகமதாபாத்) இன்றைய (செப்.12) நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.80.01க்கும், உத்தரபிரதேசத்தில் (லக்னோ) ரூ.80.73க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால் மத்திய பிரதேச மாநிலத்தில் (போபால்) இன்றைய நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் 86.44 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. குஜராத், உத்தரபிரதேச மாநிலங்களை காட்டிலும், மத்திய பிரதேசத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை சுமார் 6 ரூபாய் அதிகம்.

அதே நேரத்தில் உத்தரபிரதேச மாநிலத்தில் இன்றைய நிலவரப்படி ஒரு லிட்டர் டீசல் 73.13 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் மத்திய பிரதேசத்தில் ஒரு லிட்டர் டீசலின் விலை 76.71 ரூபாய். எனவேதான் அண்டை மாநிலங்களுக்கு மக்கள் படையெடுக்கின்றனர். இதை தவிர்க்கவே மத்திய பிரதேசத்தில் வாட் வரியை குறைக்க வேண்டும் என பங்க் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய கார் எனக்கூறி பழைய காரை வாடிக்கையாளரின் தலையில் கட்டிய டீலர்.. வசமாக சிக்கி கொண்டது டாடா

{document1}

டாடா நிறுவனம் இன்று வெளியிட்ட டாடா டியாகோ என்ஆர்ஜி காரின் புகைப்பட ஆல்பம் உங்களுக்காக மேலே கொடுக்கப்பட்டுள்ளது. நமது தளத்தில் இன்று அதிகம் பேரால் பார்க்கப்படும் ஆல்பமாக இந்த ஆல்பம் உள்ளது.

TRENDING

English Summary

Buy Petrol or Diesel and get Bike, Laptop, Mobile or Washing Machine Free. Read in Tamil