இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்மார்ட் ஸ்கூட்டர் ஏத்தர் டெலிவரி துவங்கியது

இந்தியாவின் முதல் ஸ்மார்ட் எலெக்டரிக் ஸ்கூட்டரான ஏத்தர் ஸ்கூட்டரின் டெலிவரி நேற்று துவங்கியது. கடந்த ஜூன் மாதமே இந்த ஸ்கூட்டருக்கான முன்பதிவு துவங்கிய நிலையில் நேற்று முதல் மக்கள் இந்த ஸ்கூட்டரை பயன்ப

இந்தியாவின் முதல் ஸ்மார்ட் எலெக்டரிக் ஸ்கூட்டரான ஏத்தர் ஸ்கூட்டரின் டெலிவரி நேற்று துவங்கியது. கடந்த ஜூன் மாதமே இந்த ஸ்கூட்டருக்கான முன்பதிவு துவங்கிய நிலையில் நேற்று முதல் மக்கள் இந்த ஸ்கூட்டரை பயன்படுத்த துவங்கிவிட்டனர். இது குறித்த முழு செய்தியை கீழே காணலாம் வாருங்கள்.

Advertisement

எதிர்கால இந்தியாவை ஆக்கிரமிக்க போவது பெரும்பாலும் எலெக்ட்ரிக் வாகனங்கள் தான், அதிலும் நடந்து வரும் தொழிற்நுட்ப வளர்ச்சியை பார்க்கையில் இன்று நாம் கற்பனைகூட செய்து பார்க்க முடியாத விஷயங்கள் எல்லாம் சாத்தியமாகிவிடும். அதற்கு முதற்படியை எடுத்து வைத்துள்ளது பெங்களூருவை சார்ந்த ஏத்தர் எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரிக்கும் நிறுவனம்.

Advertisement

இந்நிறுவனம் தயாரித்த ஏத்தர் 450 மற்றும் ஏத்தர் 340 என்ற ஸ்கூட்டர்கள் கடந்த ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த பைக் நேற்று முதல் விற்பனையை துவங்கியுள்ளது. இதற்கான விழா நேற்று பெங்களூரு ஓயிட் பீஃல்டு பகுதியில் உள்ள அந்நிறுவனத்தின் தொழிற்சாலையில் நடந்தது. சில கம்பெனி சில வாடிக்கையாளர்களை மட்டும் அழைத்து அவர்களுக்கு ஏத்தர் ஸ்கூட்டரை வழங்கியது.

அதற்கு முன்னதாக இந்த ஸ்கூட்டரை சார்ஜ் போடும் பகுதியை வாடிக்கையாளரின் இடத்தில் அமைத்து கொடுத்திருந்தது. மேலும் இந்நிறுவனம் பெங்களூரு நகரில் ஆங்காங்கே சார்ஜிங் ஸ்டேஷன்களை திறந்துள்ளது.

தற்போது அந்நிறுவனம் ஷோரூம் எதையும் திறக்கவில்லை அந்நிறுவனத்தின் இணையதளத்திலேயே முன்பதிவு செய்யவேண்டும், மேலும் டெஸ்ட் டிரைவிங்கையும் இணையதளத்திலேயே புக் செய்யலாம்.

இது மட்டும் அல்லாமல் அந்நிறுவனம் ஏத்தர் ஒன் என்ற திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இது டேட்டா செலவு, பொது மற்றும் தனிப்பட்ட இடங்களில் செய்யப்படும் சார்ஜிங் செலவு, குறிப்பட்ட கால இடைவெளியில் சர்வீஸ், பொதுவான ஸ்பேர்கள் என அனைத்தையும் இத்திட்டத்தில் உள்ளவர்கள் இலவசமாக பெறலாம். இதில் டேட்டா செலவு இந்த ஸ்கூட்டரில் உள்ள மேப்பை பயன்படுத்த உதவுகிறது.

ஏத்தர் 450 ஸ்கூட்டரில் பிரஷ்லெஸ் டிசி மோட்டர் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் ஏத்தர் நிறுவனம் தயாரித்த பேட்டரி மேனேஜ்மென்ட் சிஸ்டமும் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் மோட்டர் 20.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். மேலும் இதில் உள்ள பேட்டரிக்கு 3 வருடம் மற்றும் எண்ணற்ற கி.மீ. வராண்டி வழங்கப்படுகிறது.

இந்த ஏத்தர் ஸ்கூட்டர் சிட்டி ரைடிங்கிற்காகவே டிசைன் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு பேட்டரியின் முழு சார்ஜில் 75 கி.மீ வரை பயணிக்கிறது. மேலும் இந்த ஸ்கூட்டர் அதிகபட்சமாக 80 கி.மீ வரை வேகத்தில் பயணிக்கும். குறிப்பாக 0-40 கி.மீ. வேகத்தை 3.9 நொடியில் பிக்கம் செய்து விடும்.

மேலும் இந்த ஸ்கூட்டரில் நெருங்கலான இடங்களில் நிறுத்த வசதியாக பார்க்கிங் அசிஸ்டண்ட் வசதி இதில் இருக்கிறது. மேலும் இதில் 7 இன்ச் டச்ஸ்கிரின் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர்கள் பெஆரத்தப்பட்டுள்ளது. இதில் சிறப்பான நேவிகேஷன் வசதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஏத்தர் ஸ்கூட்டரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஏத்தர் ஆப் ஒன்று வழங்கப்படுகிறது. அதன் மூலம் அவர்கள் இந்த ஸ்கூட்டரின் சார்ஜ் கண்டிஷன், ஸ்கூட்டர் இருக்கும் இடம் என அனைத்தையும் கண்காணிக்க முடியும்.

மேலும் ஏத்தர் ஓடிஏ என்ற வசதியை பெறுகிறது, இந்த ஏத்தர் சாஃப்ட் வேரில் அடுத்த வெர்ஷன்கள் வரும் போது தானாக அப்டேட் ஆகிவிடும். ஏத்தர் ஒன் திட்டத்தில் சேர்பவர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை அதை புதுப்பிக்க வேண்டும்.

பாலாவின் பார்வையில்:

எதிர்கால இந்திய மார்கெட்டை உணர்ந்து இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்மார்ட் ஸ்கூட்டராக அறிமுகப்படுத்தியது மிகப்பெரிய முயற்சி, இந்த ஸ்கூட்டர் குறித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பும் கிடைத்துள்ளது. எனினும் ஏத்தர் நிறுவனம் இதை தற்போது பெங்களூருவில் மட்டும் விற்பனை செய்து வருகிறது, விரைவில் இதை இந்தியா முழுவதும் கொண்டு வர அந்நிறுவனம் முயற்சிக்க வேண்டும்.

டாடா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது டாடா டியாகோ என்ஆர்ஜி காரின் புகைப்பட ஆல்பம் மேலே வழங்கப்பட்டுள்ளது. இன்று தான் இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் வாசகர்கள் அதிக அளவில் இந்த ஆல்பத்தை பார்த்து வருகின்றனர்.

TRENDING

English Summary

India's First Electric Smart Scooter now comes on road. Read in Tamil