ரன்பீர் கபூரை ஒதுக்கிவிட்டு விராட் கோஹ்லியை கரம் பிடித்த ஹீரோ.. ஐயயோ செக்ஷன் 377 எல்லாம் இல்லீங்க

ஹீரோ நிறுவனத்தின் புதிய பிராண்ட் அம்பாஸிடராக விராட் கோஹ்லி நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸிடராக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். வாடிக்கையாளர்களை எளிதில் கவர்வதற்காக, விராட் கோஹ்லியை வளைத்து போட்டுள்ளது ஹீரோ மோட்டோகார்ப்.

சச்சின் டெண்டுல்கருக்கு இணையாக கருதப்படும் விராட் கோஹ்லிக்கு இந்தியாவில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். சமூக வலைதளங்களிலும் விராட் கோஹ்லி மிகவும் ஆக்டிவ் ஆக இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விராட் கோஹ்லிக்கு பேஸ்புக்கில் 3.70 கோடி ரசிகர்கள் உள்ளனர். அதே நேரத்தில் டிவிட்டரில் 2.64 கோடி பேரும், இன்ஸ்டாகிராமில் 2.39 கோடி பேரும், விராட் கோஹ்லியை பின் தொடர்கின்றனர். விராட் கோஹ்லி எவ்வளவு பிரபலம் என்பதற்கு இது ஒரு சிறிய சாட்சிதான்.

MOST READ: சண்டிகரை தொடர்ந்து பெங்களூருவில் வாகன ஓட்டிகளை மிரட்டும் ஆர்எஸ்எஸ்.. அடுத்த குறி சென்னை?

உலகில் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களில் ஒருவராகவும் விராட் கோஹ்லி திகழ்கிறார். ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தியின்படி பார்த்தால், 2017ம் ஆண்டில் மட்டும் விராட் கோஹ்லி 175 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளார்.

ஹீரோ நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸிடராக நியமிக்கப்பட்டிருப்பது குறித்து விராட் கோஹ்லி கூறுகையில், ''எனது தலைமுறையை சேர்ந்த பல லட்சக்கணக்கான இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள், ஹீரோ நிறுவன மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களை ஓட்டிதான் வளர்ந்தனர்.

எனவே ஹீரோ நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸிடராக இருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. உற்சாகமானதொரு பயணத்தை எதிர்நோக்கியுள்ளேன்'' என்றார். ஹீரோ நிறுவனத்தின் புதிய எக்ஸ்ட்ரீம் 200 ஆர் பைக்கை, விராட் கோஹ்லி ப்ரமோட் செய்யும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

MOST READ: பெட்ரோல், டீசல் நிரப்பினால் பைக், லேப்டாப், ஏசி, மொபைல் இலவசம்.. இந்தியாவில் இப்படியும் ஒரு அதிசயம்

இதன்பின் எக்ஸ்ட்ரீம் 200 ஆர் பைக்கை, விராட் கோஹ்லி ப்ரமோட் செய்யும் வீடியோவையும் ஹீரோ நிறுவனம் வெளியிடவுள்ளது. ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 ஆர் பைக்கில், 200 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக, 18.4 பிஎஸ் பவர் மற்றும் 17.1 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய சக்தி வாய்ந்தது. எக்ஸ்ட்ரீம் 200 ஆர் பைக் தவிர, விரைவில் லான்ச் ஆகவுள்ள ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 அட்வென்ஜர் பைக் ப்ரமோஷன் உள்பட இதர பைக் ப்ரமோஷன்களிலும் விராட் கோஹ்லி பங்கெடுப்பார்.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 அட்வென்ஜர், ஆப் ரோடு பைக் ஆகும். எக்ஸ்ட்ரீம் 200 ஆர் பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் அதே 200 சிசி இன்ஜின்தான், இந்த பைக்கிலும் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் ஆப் ரோடுக்கு ஏற்ற வகையில் இந்த மோட்டார் சைக்கிள் கட்டமைக்கப்பட்டுள்ளது.

MOST READ: மத்திய அரசின் திட்டம் சாத்தியமானால் பெட்ரோல் ரூ.55, டீசல் ரூ.50 மட்டுமே! நிதின் கட்கரி பேச்சு

முன்னதாக ஹீரோ பைக்குகளை, பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர்தான் ப்ரமோட் செய்து வந்தார். தற்போது அவரது இடத்தைதான் விராட் கோஹ்லி ஆக்ரமித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாருதி செலிரியோ எக்ஸ் காருடன் நேரடியாக மோதும் வகையில் புதிய டாடா டியாகோ என்ஆர்ஜி கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் ஆல்பத்தை நீங்கள் கீழே காணலாம்.

Popular In the Community
Load more...