ப்ராங்பர்ட் ஷோவில் அசத்திய பிஎம்டபிள்யூ இ-ஸ்கூட்டர்!

BMW E-Scooter
புதிய இ-ஸ்கூட்டர் கான்செப்ட்டை அறிமுகப்படுத்திய பிஎம்டபிள்யூ

பிஎம்டபிள்யூ என்றவுடனேயே அனைவருக்கும் அதன் சொகுசு கார்கள்தான் நினைவுக்கு வரும். ஆனால், அதிசக்தி வாய்ந்த மோட்டார்சைக்கிள் தயாரிப்பிலும் பிஎம்டபிள்யூ தொடர்ந்து முத்திரை பதித்து வருகிறது.

இந்த நிலையில், ப்ராங்க்பர்ட் ஆட்டோ ஷோவில் புதிய கான்செப்ட் மாடல் இ-ஸ்கூட்டரை காட்சிக்கு வைத்து அனைவரும் அசத்தியுள்ளது பிஎம்டபிள்யூ. இந்த இ-ஸ்கூட்டரை சுற்றிலும் ஏராளமான பார்வையாளர்கள் கூட்டம் மொய்த்தது.

முன்பக்கம் சூப்பர் பைக் போன்றும், பின்பக்கம் ஸ்கூட்டர் போன்ற தோற்றத்துடன் இந்த கான்செப்ட் இ-ஸ்கூட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மெட்டாலிக் கிரே வண்ணத்தில் கிளிபச்சை வண்ண பூச்சுடன் அனைவரையும் கவர்ந்த இந்த இ-ஸ்கூட்டரை, 600சிசி பெட்ரோல் எஞ்சினுக்கு ஒப்பான அளவுக்கு திறனை வெளிப்படுத்தும் பேட்டரி மோட்டாருடன் வடிவமைக்கும் பணிகளை பிஎம்டபிள்யூ மேற்கொண்டுள்ளது.

கைனடிக் எனர்ஜி ரிட்டென்ஷன் தொழில்நுட்பம் போன்று டிரைவிங்கை பொறுத்து பேட்டரியில் 20 சதவீத மின்சிக்கனத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த இ-ஸ்கூட்டர் வடிவமைக்கப்பட உள்ளது. மேலும், இலகு எடை கொண்ட பாகங்களுடன் இந்த இ-ஸ்கூட்டரை பிஎம்டபிள்யூ வடிவமைக்கிறது.

Most Read Articles
English summary
BMW is mostly known in India as a premium carmaker. But it also is a motorcycle manufacturer. BMW has several powerful superbikes and scooters in its line-up. The German Company has unveiled a beautiful new concept electric scooter at the Frankfurt Motor Show. This new scooter has been named as the eScooter signifying its electric powertrain.
Story first published: Wednesday, September 14, 2011, 17:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X