2013 செமா ஆட்டோ ஷோவிலிருந்து 'செம' படங்களுடன் கவரேஜ்

அமெரிக்காவில், ஆட்டோமொபைல் உதிரிபாக தயாரிப்பாளர்கள் இணைந்து துவங்கிய Speciality Equipment Market Association(Sema) என்ற அமைப்பு சுருக்கமாக செமா என்று அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பு ஆண்டுதோறும் நடத்தும் ஆட்டோமொபைல் கண்காட்சி பிற கண்காட்சிகளிலிருந்து சிறிது மாறுபட்டது.

ஆட்டோமொபைல் சப்ளையர்கள், கஸ்டமைசேஷன் நிறுவனங்கள், கார் டீலர்கள் என பல்வேறு ஆட்டோமொபைல் பிரிவுகளை சார்ந்தவர்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்று தங்களது தயாரிப்புகளை காட்சிப்படுத்துகின்றனர். உலக அளவில் முன்னிலை வகிக்கும் ஆயிரக்கணக்கான நிறுவனங்களும், வர்த்தகர்களும் சங்கமிக்கும் இந்த திருவிழா சமீபத்தில் அரங்கேறியது. அந்த வண்ணமிகு கண்காட்சியின் தொகுப்பை ஸ்லைடரில் காணலாம்.

செமா அமைப்பு

செமா அமைப்பு

1963ம் ஆண்டு துவங்கப்பட்ட செமா அமைப்பில் தற்போது உலக அளவில் 6,383 நிறுவனங்கள் அங்கம் வகிக்கின்றன. இதில், விற்பனைக்கு பிந்தைய மார்க்கெட்டில் ஈடுபட்டிருக்கும் உதிரிபாக தயாரிப்பு நிறுவனங்கள், கார் டீலர்கள், கஸ்டமைஸ் நிறுவனங்களும் அடக்கம்.

முதல் கண்காட்சி

முதல் கண்காட்சி

1967ம் ஆண்டு முதல் செமா கண்காட்சி நடந்த ுவருகிறது. முதல் ஆண்டில் 5 கார்கள் மட்டுமே காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. 98 தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர். ஆனால், இன்றைய நிலையில், ஆயிரணக்கான நிறுவனங்கள் பங்கு கொள்ளும் கண்காட்சியாக மாறியுள்ளது.

 தயாரிப்புகள்

தயாரிப்புகள்

ஆண்டுக்கு 27.8 பில்லியன் டாலர் வர்த்தக மதிப்பு கொண்ட இந்த துறையில் பந்தய வாகனங்களுக்கான பாகங்கள், வீல்கள், டயர்கள், மொபைல் எலக்ட்ரானிக்ஸ், பாதுகாப்பு சாதனங்கள், டிரான்ஸ்மிஷன் என பரந்துபட்ட வர்த்தகத்தை உள்ளடக்கிய நிறுவனங்களின் முக்கிய அமைப்பாக செயல்படுகிறது செமா.

 கார்கள்

கார்கள்

மஸில் கார்கள், சொகுசு கார்கள், ஸ்போர்ட்ஸ் கார்கள், எஸ்யூவி மற்றும் ஆஃப் ரோடு வாகனங்களை உருவாக்கும் பொறுப்புடைய நிறுவனங்கள் இந்த அமைப்பின் கீழ் செயல்படுகின்றன.

சேவை

சேவை

தனது கீழ் அங்கம் வகிக்கும் நிறுவனங்களின் பணியாளர்களுக்கு பயிற்சி மற்றும் தொழில்நுட்ப திறன் குறித்த அறிவை வளர்க்கும் பயிற்சி முகாம்கள், சட்ட உதவி, மார்க்கெட் குறித்த ஆய்வுகள் என பல முக்கிய சேவைகளை இந்த செமா அமைப்பு செய்து வருகிறது.

கண்காட்சி

கண்காட்சி

ஆண்டுதோறும் நவம்பர் முதல் வாரத்தில் நெவடா, லாஸ் வேகாஸ் நகரில் உள்ள வர்த்தக மையத்தில் இந்த செமா அமைப்பின் சர்வதேச அளவிலான ஆட்டோமொபைல் கண்காட்சி நடக்கிறது.

பொதுமக்களுக்கு அனுமதி இல்லை

பொதுமக்களுக்கு அனுமதி இல்லை

இந்த ஆட்டோமொபைல் கண்காட்சியை பார்வையிட பொதுமக்கள் அனுமதிக்கப்படுவதில்லை. பதிவு செய்து வரும் பத்திரிக்கை, தயாரிப்பாளர்கள் மற்றும் பொருட்களை வாங்க பதிவு செய்வோருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.

பெயர் மாற்றம்

பெயர் மாற்றம்

முதன்முதலில் Speed Equipment Manufacturing Association என்ற பெயரில் செமா அழைக்கப்பட்டு வந்தது. 1970ல் அமெரிக்க அரசு கொண்டு வந்த புதிய சட்டத் திட்டங்களின்படி ஸ்பீடு என்ற வார்த்தைக்கு பதிலாக ஸ்பெஷாலிட்டி என்ற வார்த்தை இணைக்கப்பட்டது.

 செமா ஆட்டோ ஷோ

செமா ஆட்டோ ஷோ

மொத்தம் 12 பிரிவுகளின் கீழ் செமா கண்காட்சியில் தயாரிப்புகள் இடம் பெறுகின்றன.

 சாதனை

சாதனை

ஆண்டுக்கு ஆண்டு செமா ஆட்டோ ஷோ நடைபெறும் வளாகத்தின் பரப்பளவு அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும், ஆண்டுக்கு ஆண்டு பங்கேற்கும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தற்போது 60,000க்கும் அதிகமான நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் பங்கு பெறுகின்றன.

விளக்க நிகழ்ச்சிகள்

விளக்க நிகழ்ச்சிகள்

செமா ஆட்டோ கண்காட்சியில் அறிமுகம் செய்யப்படும் புதிய தயாரிப்புகள், பாதுகாப்பு தொழில்நுட்பங்கள், கஸ்டமைஸ் பொருட்கள் குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வாங்குவோருக்கு விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சிகளும் இங்கு நடக்கின்றன.

 வித்தியாசமான கண்காட்சி

வித்தியாசமான கண்காட்சி

ஒட்டுமொத்தத்தில் பிற ஆட்டோமொபைல் கண்காட்சிகளிலிருந்து வித்தியாசமான கார்கள் மற்றும் படைப்புகளுடன் கூடிய மிக பிரம்மாண்டமான சர்வதேச கண்காட்சியாக அரங்கேறி வருகிறது செமா கண்காட்சி.

இந்த ஆண்டு கண்காட்சி

இந்த ஆண்டு கண்காட்சி

இந்த ஆண்டு கண்காட்சி படங்கள் தொகுப்பை தொடர்ந்து காணலாம்.

கண்காட்சி படங்கள்

கண்காட்சி படங்கள்

இந்த ஆண்டு செமா ஆட்டோ கண்காட்சி படங்கள்.

கண்காட்சி படங்கள்

கண்காட்சி படங்கள்

இந்த ஆண்டு செமா ஆட்டோ கண்காட்சி படங்கள்.

கண்காட்சி படங்கள்

கண்காட்சி படங்கள்

இந்த ஆண்டு செமா ஆட்டோ கண்காட்சி படங்கள்.

கண்காட்சி படங்கள்

கண்காட்சி படங்கள்

இந்த ஆண்டு செமா ஆட்டோ கண்காட்சி படங்கள்.

கண்காட்சி படங்கள்

கண்காட்சி படங்கள்

இந்த ஆண்டு செமா ஆட்டோ கண்காட்சி படங்கள்.

கண்காட்சி படங்கள்

கண்காட்சி படங்கள்

இந்த ஆண்டு செமா ஆட்டோ கண்காட்சி படங்கள்.

கண்காட்சி படங்கள்

கண்காட்சி படங்கள்

இந்த ஆண்டு செமா ஆட்டோ கண்காட்சி படங்கள்.

கண்காட்சி படங்கள்

கண்காட்சி படங்கள்

இந்த ஆண்டு செமா ஆட்டோ கண்காட்சி படங்கள்.

கண்காட்சி படங்கள்

கண்காட்சி படங்கள்

இந்த ஆண்டு செமா ஆட்டோ கண்காட்சி படங்கள்.

கண்காட்சி படங்கள்

கண்காட்சி படங்கள்

இந்த ஆண்டு செமா ஆட்டோ கண்காட்சி படங்கள்.

கண்காட்சி படங்கள்

கண்காட்சி படங்கள்

இந்த ஆண்டு செமா ஆட்டோ கண்காட்சி படங்கள்.

கண்காட்சி படங்கள்

கண்காட்சி படங்கள்

இந்த ஆண்டு செமா ஆட்டோ கண்காட்சி படங்கள்.

கண்காட்சி படங்கள்

கண்காட்சி படங்கள்

இந்த ஆண்டு செமா ஆட்டோ கண்காட்சி படங்கள்.

கண்காட்சி படங்கள்

கண்காட்சி படங்கள்

இந்த ஆண்டு செமா ஆட்டோ கண்காட்சி படங்கள்.

கண்காட்சி படங்கள்

கண்காட்சி படங்கள்

இந்த ஆண்டு செமா ஆட்டோ கண்காட்சி படங்கள்.

கண்காட்சி படங்கள்

கண்காட்சி படங்கள்

இந்த ஆண்டு செமா ஆட்டோ கண்காட்சி படங்கள்.

கண்காட்சி படங்கள்

கண்காட்சி படங்கள்

இந்த ஆண்டு செமா ஆட்டோ கண்காட்சி படங்கள்.

கண்காட்சி படங்கள்

கண்காட்சி படங்கள்

இந்த ஆண்டு செமா ஆட்டோ கண்காட்சி படங்கள்.

கண்காட்சி படங்கள்

கண்காட்சி படங்கள்

இந்த ஆண்டு செமா ஆட்டோ கண்காட்சி படங்கள்.

Most Read Articles

 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X