ஹோண்டா சிபிஎஸ்ஐஎக்ஸ்50 கான்செப்ட் ஸ்க்ராம்ப்ளர், இஐசிஎம்ஏ மோட்டார் ஷோவில் அறிமுகம்

By Ravichandran

ஹோண்டா நிறுவனம், தங்களின் புதிய சிபிஎஸ்ஐஎக்ஸ்50 கான்செப்ட் ஸ்க்ராம்ப்ளர் மோட்டார்சைக்கிளை இஐசிஎம்ஏ மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்தனர்.

பிஎம்டபுள்யூ மோட்டாராட் ஆர் நைன்டி, டுகாட்டியின் ஸ்க்ராம்ப்ளர், டிரயம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் மோட்டார்சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களிடம் இருந்து எழும் போட்டியை சமாளிக்கவே, ஹோண்டா சிபிஎஸ்ஐஎக்ஸ்50 கான்செப்ட் ஸ்கிராம்ப்ளர் அறிமுகம் செய்யபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஹோண்டா நிறுவனம், ரெட்ரோ மற்றும் மாடர்ன் (நவீன) மோட்டார்சைக்கிள்களுக்கான சந்தை தேவைகளின் போட்டியில் இருந்து விளாகாமல் இருக்க நோக்கம் உத்தேசித்துள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

ஹோண்டா சிபிஎஸ்ஐஎக்ஸ்50 கான்செப்ட் ஸ்க்ராம்ப்ளர், 649 சிசி, இன்லைன் 4-சிலிண்டர்கள் கொண்ட, லிக்விட் கூல்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இந்த மோட்டார்சைக்கிளின் செயல்திறன் குறித்த விவரங்கள் வெளியிடப்ப்டவில்லை. எனினும், இதன் இஞ்ஜின் வியத்தகு லோ-எண்ட் டார்க் மற்றும் பவரை (ஆற்றலை) வெளிபடுத்தும் விதத்தில் ட்யூன் செய்யபட்டுள்ளதாக தெரிகிறது.

வடிவமைப்பு;

வடிவமைப்பு;

புதிய சிபிஎஸ்ஐஎக்ஸ்50 கான்செப்ட் ஸ்க்ராம்ப்ளர், ஹோண்டாவின் சிபி650எஃப் மற்றும் சிபிஆர்650எஃப் மோட்டார்சைக்கிள்களை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கபட்டுள்ளது.

புதிய சிபிஎஸ்ஐஎக்ஸ்50 கான்செப்ட் ஸ்க்ராம்ப்ளர், ஹோண்டா சிபி650எஃப் மற்றும் ஹோண்டா சிபிஆர்650எஃப் உள்ளிட்ட மூன்று மோட்டார்சைக்கிள்களுக்கும், ஒரே விதமான இஞ்ஜின், சேஸி மற்றும் பல்வேறு பாகங்கள் உபயோகம் செய்ய ஹோண்டா இஞ்ஜினியர்கள் திட்டமிட்டுள்ளனர்.

பிற அம்சங்கள்;

பிற அம்சங்கள்;

புதிய சிபிஎஸ்ஐஎக்ஸ்50 கான்செப்ட் ஸ்க்ராம்ப்ளர், ஸ்போக்குகள் கொண்ட சக்கரங்கள், பட்டன் டையர்கள், ரெட்ரோ சீட்கள் கொண்டுள்ளது.

இது ஆக்ரோஷமான எக்ஸ்டீரியர் டிசைன் கொண்டுள்ளது.

தயாரிப்பு விவரம்;

தயாரிப்பு விவரம்;

இந்த சிபிஎஸ்ஐஎக்ஸ்50 கான்செப்ட் ஸ்க்ராம்ப்ளர் மோட்டார்சைக்கிள் தற்போது, கான்செப்ட் நிலையில் தான் உள்ளது.

ஹோண்டா நிறுவனம், இதனை அடுத்தகட்டமான தயாரிப்பு நிலைக்கு கொண்டு செல்வார்களா என்று உறுதியான தகவல்கள் எதுவும் இல்லை.

இதற மோட்டார்சைக்கிள்கள்;

இதற மோட்டார்சைக்கிள்கள்;

2015 இஐசிஎம்ஏ மோட்டார் ஷோவில், இந்த கான்செப்ட் மாடல் மோட்டார்சைக்கிள்களுடன், வேறு சில மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்தனர்.

ஹோண்டா சிபி500எஃப், சிபி500எக்ஸ், சிபிஆர்500ஆர்எம் என்சி750எக்ஸ், என்சி750, சிஆர்எஃப்1000எல் உள்ளிட்ட வேறு பல கான்செப்ட் மோட்டார்சைக்கிள்களும் இந்த 2015 இஐசிஎம்ஏ மோட்டார் ஷோவில் காட்சிபடுத்தப்பட்டது.

இஐசிஎம்ஏ மோட்டார் ஷோ;

இஐசிஎம்ஏ மோட்டார் ஷோ;

இஐசிஎம்ஏ மோட்டார் ஷோ என்பது, உலக அளவில் இரு சக்கர வாகனங்களுக்காக பிரத்யேகமாக நடத்தப்படும் மோட்டார் ஷோ ஆகும். 2015-ஆம் ஆண்டின் இஐசிஎம்ஏ மோட்டார் ஷோ, இத்தாலியில் உள்ள மிலன் நகரத்தில் நடைபெற்றது.

Most Read Articles
English summary
Honda Unveiled their CBSix50 Concept Scrambler Motorcycle at the 2015 EICMA Motor Show in Milan. Other models like the all-new CB500F, CB500X, CBR500Rm NC750X, NC750, CRF1000L, and several other concept motorcycles from Honda were also on Display in 2015 EICMA Motor Show.
Story first published: Monday, November 23, 2015, 15:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X