இந்தியாவின் முதல் மலிவு விலை ரோல்ஸ் ராய்ஸ் டாக்ஸி... வாடகை எவ்வளவு தெரிஞ்சா அசந்துபோய்டுவீங்க..!

வெறும் 80 கிமீ சுற்றி வர பல லட்சங்கள் வாடகையாக வாங்கும் நிறுவனங்களுக்கு மத்தியில் இளைஞர் ஒருவர் சில ஆயிரங்களுக்கு மூன்று நாட்கள் வாடகைக்கு ரோல்ஸ் ராய்ஸ் காரை வழங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை விரிவாக இந்த செய்தியில் காணலாம்.

இந்தியாவின் முதல் மலிவு விலை ரோல்ஸ் ராய்ஸ் டாக்ஸி... வாடகை எவ்வளவு தெரிஞ்சா அசந்துபோய்டுவீங்க..!

'கனவு காணுங்கள் இளைஞர்களே' என்று மறைந்த முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் கூறினார். இதனை, இந்திய இளைஞர்கள் தங்களின் வளர்ச்சிக்காக காண்கிறார்களோ, இல்லையோ நிச்சயம் ஆடம்பர சொகுசு வாழ்க்கைக்காக காண்கின்றனர்.

அதிலும், பலரின் கனவுகளில் கை நிறைய பணம் மற்றும் சொகுசு கார்கள் முக்கிய இடத்தில் இருக்கின்றது. இதிலும், முக்கிய இடத்தில் இருப்பது ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கார்கள்.

இந்தியாவின் முதல் மலிவு விலை ரோல்ஸ் ராய்ஸ் டாக்ஸி... வாடகை எவ்வளவு தெரிஞ்சா அசந்துபோய்டுவீங்க..!

இந்நிறுவனத்தின் ஆரம்ப நிலை கார்களே பல கோடி ரூபாய் மதிப்புடையதாக உள்ளது. இருப்பினும் அதை பலர் ஒரு நாளாவது பயன்படுத்துவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கின்றனர்.

இன்றைய காலகட்டத்தில் சொற்ப தொகையை செலவிட்டாலே போதும் விமானத்தில் பறந்துவிடலாம். ஆனால், இது பலருக்கு சில வருடங்களுக்கு முன்பு கனவாகவே இருந்து வந்தது. ஆனால், மேலை நாடு நிறுவனங்களின் வருகையால் பலர் பேருந்தைப் போன்று விமானத்தில் பயணிக்க ஆரம்பித்துள்ளனர்.

இந்தியாவின் முதல் மலிவு விலை ரோல்ஸ் ராய்ஸ் டாக்ஸி... வாடகை எவ்வளவு தெரிஞ்சா அசந்துபோய்டுவீங்க..!

ஆனால், ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கார்களில் அப்படி எளிதில் பயணித்துவிட முடியாது. இந்க நிலை பல ஆண்டுகளாக நீடித்து வருகின்றது. அதேசமயம், இந்த நிலை (தடை) நீண்ட நாட்களுக்கு இருக்காது என்பதும் தெரியவந்துள்ளது.

ஏனென்றால், ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் காரொன்று தற்போது வாடைக காராக மாறியுள்ளது.

இந்தியாவின் முதல் மலிவு விலை ரோல்ஸ் ராய்ஸ் டாக்ஸி... வாடகை எவ்வளவு தெரிஞ்சா அசந்துபோய்டுவீங்க..!

இந்நிறுவனத்தின் கார்கள் ஏற்கனவே ஒரு நாள் வாடகை என்ற திட்டத்தில் கிடைத்து வருகின்றது. ஆனால், அதற்கு குறைந்தது ரூ.40 ஆயிரம் முதல் 50 ரூபாய் வரை வாடகையாக வழங்க வேண்டியிருக்கும். மிக குறைந்தளவு வாடகையே, இதைவிட அதிகமாக வசூலிக்கும் நிறுவனங்களே இங்கு காணப்படுகின்றது.

இந்தியாவின் முதல் மலிவு விலை ரோல்ஸ் ராய்ஸ் டாக்ஸி... வாடகை எவ்வளவு தெரிஞ்சா அசந்துபோய்டுவீங்க..!

மேற்கூறிய தொகையானது, இந்தியர்கள் பலரின் அரை வருட சம்பளமாகும். இந்த சூழ்நிலையில் அவர்களால் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் காரில் பயணிப்பது என்பது சாத்தியமற்ற ஓர் செயலாகும்.

இந்தியாவின் முதல் மலிவு விலை ரோல்ஸ் ராய்ஸ் டாக்ஸி... வாடகை எவ்வளவு தெரிஞ்சா அசந்துபோய்டுவீங்க..!

இந்நிலையில்தான், ரோல்ஸ் ராய்ஸ் காரை டாக்ஸியாக மாற்றியுள்ளார் கேரளாவைச் சேர்ந்த ஓர் தொழில் ஆளுமை. அவர் செம்மனூரைச் சேர்ந்த பாபி ஆவார். இவர்தான் ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் VII எல்டபிள்யூ காரை முதல் முறையாக டாக்ஸி காராக மாற்றியிருக்கின்றார்.

இந்தியாவின் முதல் மலிவு விலை ரோல்ஸ் ராய்ஸ் டாக்ஸி... வாடகை எவ்வளவு தெரிஞ்சா அசந்துபோய்டுவீங்க..!

இத்துடன், கால் டாக்ஸியான மாற்றத்திற்காக ரோல்ஸ் ராய்ஸில் சில மாற்றங்களை அவர் மேற்கொண்டுள்ளார். அதில் கவனிக்க வேண்டிய வகையில் கார் முழுவதிற்கும் கோல்டன் விராப்பர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் முதல் மலிவு விலை ரோல்ஸ் ராய்ஸ் டாக்ஸி... வாடகை எவ்வளவு தெரிஞ்சா அசந்துபோய்டுவீங்க..!

மேலும், காரின் மேற்கூரையில் டேக்ஸி என்ற பிளேட்டுகள் நிறுவப்பட்டுள்ளது. தொடர்ந்து, காரின் கதவுகள் மற்றும் பின் பக்கத்திலும் டேக்ஸி என்ற வாசகம் ஒட்டப்பட்டிருக்கின்றது. கதவுகளில் சற்று வித்தியாசமாக பாபி டாக்ஸி என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது.

இந்த புத்தம் புதிய கோல்டன் பூச்சுகொண்ட ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் VII காரை பாபி கடந்த ஆண்டே வாங்கியதாக கூறுகின்றார்.

இந்தியாவின் முதல் மலிவு விலை ரோல்ஸ் ராய்ஸ் டாக்ஸி... வாடகை எவ்வளவு தெரிஞ்சா அசந்துபோய்டுவீங்க..!

இதனை ஆக்ஸிஜன் ரெசார்ட் பயன்படுத்துவதற்காக வாங்கப்பட்டதாகவும் கூறுகின்றார். இந்த காரை ரூ. 12 கோடி என்ற மிகக் குறைந்த விலையில் ஏலம் எடுத்ததாக கூறப்படுகின்றது. ஏலத்தினாலயே இந்தகார் இந்தளவிற்கு குறைந்த விலையில் தனக்கு கிடைத்ததாகவும் அவர் கூறினார்.

இந்தியாவின் முதல் மலிவு விலை ரோல்ஸ் ராய்ஸ் டாக்ஸி... வாடகை எவ்வளவு தெரிஞ்சா அசந்துபோய்டுவீங்க..!

இதன்பின்னரே குறிப்பிட்ட நிறுவனத்தின்மூலம் கோல்டு நிற பூச்சை அவர் வழங்கினார். பாபியின் இந்த நடவடிக்கையால் ஏற்கனவே லக்சூரி காராக காட்சியளிக்கும் ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் VII மேலும் கவர்ச்சியானதாகவும், அதிக விலைக் கொண்டதாகவும் மாறியிருக்கின்றது.

இந்தியாவின் முதல் மலிவு விலை ரோல்ஸ் ராய்ஸ் டாக்ஸி... வாடகை எவ்வளவு தெரிஞ்சா அசந்துபோய்டுவீங்க..!

இதுபோன்று, கோல்ட் விராப் செய்யப்பட்ட விலையுயர்ந்த கார்கள் இந்தியாவில் ஏராளமாக இருக்கின்றன. ஆனால், ரோல்ஸ் ராய்ஸ் காரை கோல்டு விராப் செய்வது இதுவே முதல் முறை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் முதல் மலிவு விலை ரோல்ஸ் ராய்ஸ் டாக்ஸி... வாடகை எவ்வளவு தெரிஞ்சா அசந்துபோய்டுவீங்க..!

இந்த காரை பாபி, அவரது ஆக்ஸிஜன் ரிசார்ட்டில் வசிக்கும் விருந்தினருக்கு குறிப்பிட்ட பேக்கேஜ்களின்கீழ் வாடகைக்கு வழங்கி வருகின்றார். இதற்கான விலையாக ரூ. 25,000 என்ற மிகக் குறைந்த தொகையை அவர் வசூலித்து வருகின்றார்.

இந்தியாவின் முதல் மலிவு விலை ரோல்ஸ் ராய்ஸ் டாக்ஸி... வாடகை எவ்வளவு தெரிஞ்சா அசந்துபோய்டுவீங்க..!

குறிப்பாக, இந்த திட்டத்தின்மூலம் அதிக லாபத்தை ஈட்ட வேண்டும் என்ற எண்ணம் தனக்கு இல்லை, இதனாலயே இந்த மலிவு விலையில் ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் காரை வாடகைக்கு விடுவதாக அவர் கூறுகின்றார். மேலும், விருந்தினர்களின் கவனத்தையும், ஆதரவையும் பெறும் நோக்கத்திலேயே இந்த சேவையை தான் செய்வதாகவும் பாபி தெரிவித்தார்.

இந்தியாவின் முதல் மலிவு விலை ரோல்ஸ் ராய்ஸ் டாக்ஸி... வாடகை எவ்வளவு தெரிஞ்சா அசந்துபோய்டுவீங்க..!

அதேசமயம், பாபி வழங்கும் இந்த சேவையை மற்ற நிறுவனங்கள் (வெளி நபர்கள்) ரூ. 4.5 லட்சம் என்ற தொகையில் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. அதுவும், வெறும் 80 கிமீட்டர்களுக்கு இத்தகைய அதிக தொகை வசூலிக்கப்படுகின்றது.

இந்த அளவிற்கு அதிக மதிப்புடைய காராக பார்க்கப்படும் ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் VII கார் 2003ம் ஆண்டே முதல் முறையாக இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இந்தியாவின் முதல் மலிவு விலை ரோல்ஸ் ராய்ஸ் டாக்ஸி... வாடகை எவ்வளவு தெரிஞ்சா அசந்துபோய்டுவீங்க..!

இந்த பழைய தலைமுறை காரை 2017ம் ஆண்டு புதிய மாடலைக் கொண்டு ரோல்ஸ் ராய்ஸ் ரீபிளேஸ் செய்தது. இந்த கார் தற்போது இந்தியாவில் விற்பனையாகும் மிக மிக அதிக விலையுடைய கார்களிலேயே முக்கியமான மாடலாகும்.

இந்தியாவின் முதல் மலிவு விலை ரோல்ஸ் ராய்ஸ் டாக்ஸி... வாடகை எவ்வளவு தெரிஞ்சா அசந்துபோய்டுவீங்க..!

இதில், ஏராளமான சொகுசு வசதிகள் மற்றும் லக்சூரி வசதிகள் இடம்பெற்றிருக்கின்றன. குறிப்பாக, இந்த காணப்படும் சொகுசு வசதிகளை சில நட்சத்திர விடுதிகளில்கூட நம்மால் காண முடியாது. அந்தளவிற்கு தொழிற்நுட்பம் மற்றும் சொகுசு வசதிகளின் உச்சமாக ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் அனைத்து கார்களும் திகழ்கின்றன.

இந்தியாவின் முதல் மலிவு விலை ரோல்ஸ் ராய்ஸ் டாக்ஸி... வாடகை எவ்வளவு தெரிஞ்சா அசந்துபோய்டுவீங்க..!

இந்த பேந்தம் VII கார் 6.75 லிட்டர் நேட்சுரல்லி அஸ்பயர்ட் வி12 எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, அதிகபட்சமாக 460பிஎஸ் பவரையும், 720 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டிருக்கின்றது. இது, 0த்தில் இருந்து 100 கிமீ என்ற வேகத்தை வெறும் 6.1 நொடிகளிலேயே தொடுவதற்கு உதவும். அதுமட்டுமின்றி, உச்சபட்சமாக மணிக்கு 240 கிமீ வேகத்தில் செல்லும் திறனைக் கொண்டிருக்கின்றது.

இந்தியாவின் முதல் மலிவு விலை ரோல்ஸ் ராய்ஸ் டாக்ஸி... வாடகை எவ்வளவு தெரிஞ்சா அசந்துபோய்டுவீங்க..!

இந்த அதீத சக்தி மட்டும் சொகுசு வசதியைக் கொண்ட ரோல்ஸ் ராய்ஸ் கார்தான் தற்போது மிக மிக மலிவு விலையில் வாடகைக்கு கிடைக்கின்றது. இந்தளவில் மலிவு விலைக்கு இந்தியாவின் வெறெந்த மூலையிலும் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் வாடகைக்கு கிடைப்பதில்லை இணையவாசிகள் சிலர் கருத்து தெரிவித்துள்ளார்.

Source: Wrapstyle/Instagram

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
This Gold Wrapped Rolls Royce Phantom VII Is For Taxi. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X