கொரோனா பரவல் எதிரொலி!! தள்ளிப்போகும் 2022 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சி

2022 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சி கொரோனா பரவல் காரணமாக திட்டமிட்ட நாளில் இருந்து தள்ளிப்போவதற்கு வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

கொரோனா பரவல் எதிரொலி!! தள்ளிப்போகும் 2022 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சி

இந்தியாவில் நடைபெறும் மிக பெரிய மற்றும் முக்கியமான ஆட்டோமொபைல் கண்காட்சியாக ஆட்டோ எக்ஸ்போ விளங்குகிறது. இந்தியா மட்டுமின்றி ஆசியாவிலேயே பெரிய ஆட்டோமொபைல் வாகன நிகழ்ச்சியான இதன் புதிய எடிசனாக 2022 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போ அடுத்த வருடத்தில் நடைபெறவுள்ளது.

கொரோனா பரவல் எதிரொலி!! தள்ளிப்போகும் 2022 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சி

அடுத்த சில வருடங்களில் இந்திய சந்தையில் கால்பதிக்கவுள்ள வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்களிடம் உள்ள திட்டத்தை வெளிப்படுத்தும் வகையில் சில மாதிரிகளை இந்த நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தும். அதேபோல் ஏற்கனவே உள்ள நிறுவனங்கள் அடுத்த 2,3 வருடங்களில் தங்களது பிராண்டில் இருந்து வெளிவரவுள்ள மாடல்களை நிறுத்தி வைக்கும்.

கொரோனா பரவல் எதிரொலி!! தள்ளிப்போகும் 2022 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சி

மிக முக்கியமான கண்காட்சி நிகழ்ச்சி என்பதால், நாட்டின் பலத்தரப்பட்ட வாடிக்கையாளர்களும், ஊடகவியலாளர்களும் வருகை தருவர். நிறுத்தி வைக்கப்படும் மாதிரிக்கு அவர்களிடம் இருந்து வரும் கருத்துகள் புதிய முயற்சிகளை மேற்கொள்ளவிருக்கும் நிறுவனங்களுக்கு பெரிதும் உதவிகரமானவைகளாக இருந்து வருகின்றன.

கொரோனா பரவல் எதிரொலி!! தள்ளிப்போகும் 2022 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சி

இத்தகைய நிகழ்ச்சி தான் கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியால் தள்ளி வைக்கப்பட உள்ளதாக, இதனை இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.

கொரோனா பரவல் எதிரொலி!! தள்ளிப்போகும் 2022 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சி

ஆட்டோ எக்ஸ்போவில் புதிய 2022 எடிசன் துவங்கவுள்ள தேதி, உலகளாவிய ஆட்டோ நிகழ்ச்சிகளையும், கொரோனா பரவலையும் கண்காணித்த பிறகு அடுத்த வருட இறுதியில் நிர்ணயிக்கப்படலாம் என தெரிகிறது. ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சி பொதுவாகவே வருட துவக்கத்தில் நடைபெறும்.

கொரோனா பரவல் எதிரொலி!! தள்ளிப்போகும் 2022 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சி

முன்னதாக 2022 ஆட்டோ எக்ஸ்போவும் வருகிற பிப்ரவரி மாத 2ஆம் தேதியில் இருந்து 9ஆம் தேதி வரையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. 2020 ஆட்டோ எக்ஸ்போ பிப்ரவரி மாத துவக்கத்தில் நடைபெற்றது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

கொரோனா பரவல் எதிரொலி!! தள்ளிப்போகும் 2022 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சி

கொரோனா வைரஸ் பரவல் அந்த சமயத்தில் சீனாவில் மட்டுமே பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருந்ததால், சிறிய தயக்கத்துடன் இந்த நிகழ்ச்சி வெற்றிக்கரமாக நடத்தி முடிக்கப்பட்டது. ஆனால் தற்போது நிலைமையே வேறு. கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக உள்ள நாடுகளில் முதன்மையான இடத்தில் இந்தியா உள்ளது.

கொரோனா பரவல் எதிரொலி!! தள்ளிப்போகும் 2022 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சி

இதனால் ஆட்டோ எக்ஸ்போவில் பங்கேற்கும் பார்வையாளர்கள், அனைத்து பங்குதாரர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு தான் எங்களுக்கு முக்கியம் என 2022 ஆட்டோ எக்ஸ்போ குறித்து இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் எதிரொலி!! தள்ளிப்போகும் 2022 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சி

அதுமட்டுமின்றி ஆட்டோ நிகழ்ச்சியை நடத்த அதன் நிர்வாகிகளுக்கு தற்போதைய சூழலில் போதிய நேரம் வழங்க வேண்டும். அதற்கு எப்படியிருந்தாலும் ஒரு வருடம் அவர்களுக்கு தேவைப்படும் எனவும் கூறியுள்ளது.

கொரோனா பரவல் எதிரொலி!! தள்ளிப்போகும் 2022 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சி

கடந்த 2020 ஆட்டோ எக்ஸ்போவை போல் 2022 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சியும் தலைநகர் டெல்லிக்கு அருகே உள்ள கிரேட்டர் நொய்டாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது திட்டமிட்டுள்ளபடி அடுத்த வருடத்திற்குள்ளாக 2022 ஆட்டோ எக்ஸ்போ நடத்தி முடிக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Most Read Articles

English summary
2022 Auto Expo Postponed; New Dates By Year-End. Read All Details In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X