டெல்லி ஆட்டோ கண்காட்சியில் பியூஜியட் 508 செடான் கார்

டெல்லி ஆட்டோ கண்காட்சியில் பியூஜியட் பார்வைக்கு வைத்திருந்த 508 செடான் கார் பார்வையாளர்களை வெகுவாகவே கவர்ந்து வருகிறது.

Peugeot 508

இந்திய கார் மார்க்கெட்டில் இரண்டாவது இன்னிங்சை துவங்க ஆயத்தமாகி வரும் பிரான்சை சேர்ந்த பியூஜியட் நிறுவனம் வோக்ஸ்வேகன் மார்க்கெட் யுக்தியை பின்பற்றி களமிறங்க முடிவு செய்துள்ளது.

அடுத்த ஆண்டு இந்தியாவி்ல் கார் விற்பனையை துவங்கவுள்ள பியூஜியட் முதலில் தனது பிரிமியம் கார்களை அறிமுகப்படுத்திய பின்னர் ஹேட்ச்பேக் கார்களை அறிமுகப்படுத்தி திட்டமிட்டுள்ளது.

இதற்கு முன்னோட்டமாக டெல்லி ஆட்டோ கண்காட்சியில் 508 பிரிமியம் செடான் கார், ஆர்சிஇசட் ஸ்போர்ட்ஸ் கூபே,3008 கிராஸ்ஓவர் மற்றும் 3008 ஹைபிரிட்4 கார்களை காட்சிக்கு வைத்திருந்தது.

இதில், 508 செடான் கார் பிரிமியம் லுக்குடன் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் அழகு பதுமையாக நிற்கிறது. உட்புறம் அதிக இடவசதி கொண்ட இந்த காரின் அனைத்து அம்சங்களுடம் அதிக தரத்துடனும், பிரிமியம் லுக்குடனும் இருக்கிறது.

இதில், 204 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.2 லிட்டர் பொருத்தப்பட்டிருக்கிறது. குஜராத்தில் கட்டப்பட உள்ள பியூஜியட் புதிய ஆலையில் வரும் 2014ம் ஆண்டு இந்த செடான் காரை உற்பத்தி செய்ய பியூஜியட் திட்டமிட்டுள்ளது.

இருப்பினும், அடுத்த ஆண்டு முதல் இறக்குமதி செய்து 508 செடான் கார்களை விற்பனை செய்ய பியூஜியட் முடிவு செய்துள்ளது.

Most Read Articles
English summary
Peugeot has showcased of its much awaited premium cars in Delhi auto expo. The 508 sedan is attracting visitors in the expo.
Story first published: Monday, January 9, 2012, 15:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X