ஜெனிசிஸ் பிராண்டின் கீழ் தயாராகும் ஜெனிசிஸ் ஜி90 காரை காட்சிபடுத்தும் ஹூண்டாய்

ஹூண்டாய் நிறுவனம், தங்கள் நிறுவனத்தின் லக்சுரி பிராண்டின் கீழ் தயாராகும் ஜெனிசிஸ் ஜி90 என்ற காரை, 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்த உள்ளது.

ஜெனிசிஸ் ஜி90 குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

hyundai-genesis-to-be-showcased-at-the-2016-delhi-auto-expo

ஈர்க்கும் ஜெனிசிஸ் ஜி90...

ஜெனிசிஸ் ஜி90 கார், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தபடுவது உறுதி செய்யபட்டுள்ளது.

ஜெனிசிஸ் ஜி90 பிரத்யேகமான டிசைன் மொழி கொண்டுள்ளதால், இது ஏராளமான மக்களின் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

இஞ்ஜின்;

ஜெனிசிஸ் ஜி90, 3.8 லிட்டர், வி6 பெட்ரோல் மோட்டார் கொண்டுள்ளது. இது 231 பிஹெச்பி-யையும், 396 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

மற்றொரு இஞ்ஜின்;

ஜெனிசிஸ் ஜி90-யின் உயர் ரக வேரியண்ட், 5.0 லிட்டர், வி8 இஞ்ஜின் கொண்டுள்ளது. இது 311 பிஹெச்பி-யையும், 519 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் உடையதாக உள்ளது.

இண்டீரியர்;

ஜெனிசிஸ் ஜி90-ன் இண்டீரியர், சிறந்த தையல் வேலைப்பாடுகள் கொண்ட லெதர் சீட்கள், 12.3 இஞ்ச் இன்ஃபோடெய்ன்மெண்ட் சிஸ்டம் மற்றும் 3-ஸோன் கிளைமேட் கண்ட்ரோல் கொண்டுள்ளது.

மேலும், இதன் தாழ்ந்த என்விஹெச் லெவல்களுக்கு, இரட்டை கிளாஸ் இன்சுலேஷன் வழங்கபட்டுள்ளது.

ரியர் சீட் அமைப்பு;

ஜெனிசிஸ் ஜி90-ன் ரியர் சீட்கள், மத்தியில் உள்ள கன்சோல் மூலம் பிரிக்கப்பட்டுள்ளது.

மத்தியில் உள்ள இந்த கன்சோல், பயணியர்களை மின்சாரம் மூலம் இயக்கபடும் அனைத்து வகையிலான வசதிகளையும் சுலபமாக இயக்க உதவுகிறது.

இந்தியாவில் அறிமுகம்?

ஜெனிசிஸ் பிராண்டில் தயாரிக்கபடும் எந்த விதமான கார்களையும், இந்தியாவில் அறிமுகம் செய்யும் திட்டம் இல்லை என ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதர அறிமுகங்கள்;

ஹூண்டாய் நிறுவனம், டுஸ்ஸான் எஸ்யூவி, இந்தியாவிற்கான புதிய எம்பிவி, அடுத்த தலைமுறை எலன்ட்ரா ஆகிய மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது.

இந்த மாடல்கள் அனைத்தும் 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தபட உள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய சொகுசு கார் பிராண்டு அறிமுகம்

டெட்ராய்ட் ஷோவில் ஹூண்டாய் ஜெனிசிஸ் எச்சிடி 14 கான்செப்ட் கார்

பென்ஸ் இ கிளாஸுக்கு போட்டியான புதிய ஹூண்டாய் கார்!!

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

Most Read Articles
English summary
Hyundai has planned to showcase their Luxury Brand Genesis at the 2016 Delhi Auto Expo. Hyundai India would showcase its Genesis G90 at this Auto Expo. Hyundai does not have plans of launching the Genesis in India. Due to its elegant design language, Genesis would attract lots of people.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X