நிஸான் எக்ஸ் ட்ரெயில் ஹைப்ரிட் எஸ்யூவி, மீண்டும் இந்தியா வருகிறது

By Ravichandran

நிஸான் எக்ஸ் ட்ரெயில் ஹைப்ரிட் எஸ்யூவி, 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவின் மூலமாக மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு வருவது உறுதியாகியுள்ளது.

நிஸான் எக்ஸ் ட்ரெயில் ஹைப்ரிட் எஸ்யூவி குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் காணலாம்.

நிஸான் எக்ஸ் ட்ரெயில் எஸ்யூவி பற்றி...

நிஸான் எக்ஸ் ட்ரெயில் எஸ்யூவி பற்றி...

நிஸான் எக்ஸ் ட்ரெயில் ஹைப்ரிட் எஸ்யூவி, சில மாதங்களுக்கு முன்பு தான் இந்திய வாகன சந்தைகளில் இருந்து விலக்கி கொள்ளபட்டது.

அதற்குள்ளாக, நிஸான் எக்ஸ் ட்ரெயில் எஸ்யூவி, 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சி மூலம், ஹைப்ரிட் எஸ்யூவி ரூபத்தில் இந்தியாவிற்குள் மீண்டும் கொண்டு வரப்படுகிறது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

புதிய நிஸான் எக்ஸ் ட்ரெயில் ஹைப்ரிட் எஸ்யூவி, 2.0 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் 32 கிலோவாட் எலக்ட்ரிக் மோட்டார் கொண்டுள்ளது.

இதன் ஹைப்ரிட் இஞ்ஜின், 142 பிஹெச்பியையும், 200 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

புதிய நிஸான் எக்ஸ் ட்ரெயில் ஹைப்ரிட் எஸ்யூவியின் இஞ்ஜின், சிவிடி கியர்பாக்ஸ் மூலம் இதன் வீல்களுக்கு பவரை கடத்துகிறது.

டிசைன்;

டிசைன்;

டிசைன் பொருத்த வரை, பழைய நிஸான் எக்ஸ் ட்ரெயில் எஸ்யூவி-க்கும் மற்றும் புதிய நிஸான் எக்ஸ் ட்ரெயில் ஹைப்ரிட் எஸ்யூவிக்கும் இடையில் பெரிய அளவிலான வித்தியாசங்கள் எதுவும் இல்லை.

புதிய டிஆர்எல் கிளஸ்டர் மற்றும் புதிய ஹெட்லைட்களும் தான், இந்த புதிய நிஸான் எக்ஸ் ட்ரெயில் ஹைப்ரிட் எஸ்யூவியில் வேறுபடுத்தும் அம்சங்களாக உள்ளன.

ஹைப்ரிட் பேட்ஜ்;

ஹைப்ரிட் பேட்ஜ்;

இதில் உள்ள புதிய ஹைப்ரிட் பேட்ஜ், இந்த வாகனம் இயற்கை தீங்கு விளைவிக்காத வாகனம் என்பதை குறிக்கும் வகையில் உள்ளது.

விற்பனைக்கு அறிமுகம்?

விற்பனைக்கு அறிமுகம்?

புதிய நிஸான் எக்ஸ் ட்ரெயில் ஹைப்ரிட் எஸ்யூவி, இந்த ஆண்டிலேயே வரும் மாதங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யபடும் என எதிர்பார்க்கபடுகிறது.

விற்கபட உள்ள விதம்;

விற்கபட உள்ள விதம்;

புதிய நிஸான் எக்ஸ் ட்ரெயில் ஹைப்ரிட் எஸ்யூவி, இந்தியாவில் சிபியூ அல்லது கம்ப்ளீட்லி பிள்ட் யூனிட் (முழுவதுமாக கட்டிமுடிக்கபட்ட வாகனம்) ரூபத்தில் விற்கபட உள்ளது.

போட்டி?

போட்டி?

புதிய நிஸான் எக்ஸ் ட்ரெயில் ஹைப்ரிட் எஸ்யூவி, ஹோண்டா சிஆர்-வி மற்றும் ஹூண்டாய் சான்ட்டா பீ ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

விலை?

விலை?

புதிய நிஸான் எக்ஸ் ட்ரெயில் ஹைப்ரிட் எஸ்யூவி, சுமார் 30 லட்சம் ரூபாய் என்ற விலையில் விற்கபட உள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

நிசான் எக்ஸ் ட்ரெயில் எஸ்யூவியின் புதிய தலைமுறை மாடல் இந்தியா வருகிறது!

இந்தியாவில் புதிய எக்ஸ்ட்ரெயிலை அறிமுகப்படுத்த நிசான் திட்டம்!

நிஸான் தொடர்புடைய செய்திகள்

/topic/Nissan

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Nissan has brought back their X-trail SUV to India during the 2016 Delhi Auto Expo. Earlier, this X-trail was withdrawn from Indian Market. Now, Nissan X-trail is brought back as Hybrid SUV. When launched, Nissan X-trail Hybrid SUV is expected to be brought for sale in India, in the coming months. It might be priced at around Rs. 30 Lakhs.
Story first published: Monday, February 15, 2016, 16:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X