சிறந்த 125சிசி பைக் மாடல்கள்

இந்தியாவின் சிறந்த 110 பைக்குகளின் பட்டியலை இங்கே காணலாம். சிறந்த 110சிசி பைக்குகளின் விலை, தொழில்நுட்ப விபரங்கள், வசதிகள் மற்றும் இதர முக்கிய விபரங்களை இங்கே பெறலாம்.

  • 1 . ஹோண்டா லிவோ

    New ஹோண்டா  லிவோ
    Street | 109.51 CC
    78,826 Onwards
    ஹோண்டா நிறுவனத்தின் லிவோ 110 பைக் வாடிக்கையாளர்களுக்கு அதிக மதிப்பை வழங்கும் மாடலாக இருந்து வருகிறது. டிசைன், மென்மையான ஓட்டுதல் தரத்தை வழங்கும் எஞ்சின், சிறப்பம்சங்களுடன் சரியான விலையில் கிடைக்கிறது. இந்த பைக்கில் இருக்கும் 109.19சிசி எஞ்சின் அதிகபட்சமாக 8.31 பிஎச்பி பவரையும், 9.09 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. அதிக எரிபொருள் சிக்கனத்தை வழங்குவதால் சிறந்த தேர்வாக உள்ளது.
  • 2 . டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ்

    New டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ்
    Street | 109.7 CC
    74,659 Onwards
    டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் அதிக வரவேற்பை பெற்ற மாடல்களில் ஒன்றாக முத்திரை பதித்து வருகிறது ஸ்டார் சிட்டி ப்ளஸ் 110 பைக். இந்த பைக் டிசைனில் மிகச் சிறப்பாக இருப்பதுடன், செயல்திறன் மிக்க எஞ்சினுடன் கவர்ந்து வருகிறது. இந்த பைக்கில் 109.7சிசி எஞ்சின் அதிகபட்சமாக 8.3 பிஎச்பி பவரையும், 8.7 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. லிட்டருக்கு 70 கிமீ மைலேஜை வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
  • 3 . பஜாஜ் Platina 110

    New பஜாஜ் Platina 110
    Street | 115.45 CC
    68,366 Onwards
    பஜாஜ் பிளாட்டினா 110 எச்-கியர் பைக் எளிமையான டிசைன் அம்சங்களுடன் மிகச் சிறந்த எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் பைக் மாடலாக பெயர் பெற்றுள்ளது. இந்த பைக்கில் கம்ஃபோர்டெக் சஸ்பென்ஷன் இருப்பதும் பயணத்தை சுகமாக்கும் அம்சமாக இருக்கிறது. புதிய டிஜிட்டல் - அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் ஓடிய தூரம், சர்வீஸ் ரிமைன்டர், கியர் ஷிஃப்ட் இண்டிகேட்டர், கடிகாரம் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளது இதன் மதிப்பை கூட்டும் அம்சங்களாக உள்ளன. இந்த பைக்கில் 115சிசி எஞ்சின் அதிகபட்சமாக 8.4 பிஎச்பி பவரையும், 9.81 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.
  • 4 . ஹோண்டா சிடி 100 ட்ரீம்

    New ஹோண்டா  சிடி 100 ட்ரீம்
    Street | 109.51 CC
    73,420 Onwards
    ஹோண்டா நிறுவனத்தின் அதிக வரவேற்பை பெற்ற மாடல்களில் ஒன்றாக சிடி 110 ட்ரீம் பைக் இருந்து வருகிறது. இந்த பைக்கில் 109.19 சிசி எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 8.25 பிஎச்பி பவரையும், 8.63 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. லிட்டருக்கு 74 கிமீ மைலேஜ் வழங்கும் என்பது இதன் மிக முக்கிய விஷயமாக இருக்கிறது. தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற மிகச் சிறந்த 110சிசி பைக் மாடலாக பெயர் பெற்றுள்ளது.
  • 5 . டிவிஎஸ் Radeon

    New டிவிஎஸ் Radeon
    Street | 109.7 CC
    72,859 Onwards
    டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் சிறந்த 110சிசி மாடலாக ரேடியான் விற்பனையில் உள்ளது. இந்த பைக்கில் 109.7சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 8.2 பிஎச்பி பவரையும், 8.7 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. டிவிஎஸ் ரேடியான் பைக்கில் எல்இடி பகல்நேர விளக்குகள், யுஎஸ்பி சார்ஜர், எலெக்ட்ரிக் ஸ்டார்ட், அலயா் வீல்கள், ஒருங்கிணைந்து செயல்படும் வகையிலான பிரேக் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. மிக சரியான பட்ஜெட்டில் அதிக எரிபொருள் சிக்கனத்துடன் கூடிய 110சிசி பைக் மாடலாக உள்ளது.
  • 6 . பஜாஜ் CT 110

    New பஜாஜ் CT 110
    Street | 115.45 CC
    67,718 Onwards
    பஜாஜ் சிடி 110 பைக் அதிக எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் 110சிசி மாடலாக வாடிக்கையாளர்களிடத்தில் பெயர் பெற்றுள்ளது. இந்த பைக்கில் 115சிசி ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 8.4 பிஎச்பி பவரையும், 9.81 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. டியூவல் பர்போஸ் டயர்கள், சொகுசான இருக்கை போன்றவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

Please select your city