சிறந்த 125சிசி பைக் மாடல்கள்

இந்தியாவின் சிறந்த 125 பைக்குகளின் பட்டியலை இங்கே காணலாம். சிறந்த 125சிசி பைக்குகளின் விலை, தொழில்நுட்ப விபரங்கள், வசதிகள் மற்றும் இதர முக்கிய விபரங்களை இங்கே பெறலாம்.

  • 1 . ஹோண்டா சிபி ஷைன்

    New ஹோண்டா  சிபி ஷைன்
    Street | 123.94 CC
    80,409 Onwards
    இந்தியாவின் 125சிசி பைக் மார்க்கெட்டில் நம்பர்-1 தேர்வாக தொடர்ந்து இருந்து வருகிறது ஹோண்டா ஷைன் 125 பைக். மென்மையான ஓட்டுதல் தரம், அதிக எரிபொருள் சிக்கனத்துடன், சிறந்த டிசைனில் கிடைக்கிறது. இந்த பைக்கில் 124சிசி எஞ்சின் உள்ளது. அதிகபட்சமாக 10.59 பிஎச்பி பவரையும், 11 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. ஹோண்டாவின் ஈக்கோ தொழில்நுட்பத்துடன் கிடைக்கிறது.
  • 2 . பஜாஜ் Pulsar NS125

    New பஜாஜ் Pulsar NS125
    | 124.45 CC
    1,05,035 Onwards
    இளம் தலைமுறையினரை வெகுவாக கவர்ந்த பஜாஜ் பல்சர் என்எஸ் பிராண்டில் விலை குறைவான தேர்வாக பல்சர் என்எஸ் 125 பைக் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. பல்சர் என்எஸ் 200 மாடலின் டிசைன் அம்சங்களை அப்படியே பிரதிபலிக்கிறது. ஆனால், இந்த பைக்கில் விலை குறைவாக நிர்ணயிப்பதற்காக 124.4சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 11.82 பிஎச்பி பவரையும், 11 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்ப்டடு இருக்கிறது. நேக்கட் எனப்படும் திறந்த உடல் அமைப்புடைய வகை பைக்குகளில் மிகச் சிறந்த தேர்வுகளில் ஒன்றாக கூறலாம்.
  • 3 . ஹீரோ கிளாமர் ஐ3எஸ

    New ஹீரோ கிளாமர் ஐ3எஸ
    Street | 124.7 CC
    82,854 Onwards
    நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமாக உள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் வெற்றிகரமான மாடலாக கிளாமர் 125 பைக் உள்ளது. கவர்ச்சிகரமான கிராஃபிக்ஸ் ஸ்டிக்கருடன் பல வண்ணத் தேர்வுகளில், சிறந்த டிசைன் மற்றும் எஞ்சினுடன் கிடைக்கிறது. இந்த பைக்கில் உள்ள 124.7சிசி எஞ்சின் அதிகபட்சமாக 10.72 பிஎச்பி பவரையும், 10.6 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. 5 ஸ்டெப் அட்ஜெஸ்ட்டபிள் ஷாக் அப்சார்பர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
  • 4 . பஜாஜ் Pulsar 125

    New பஜாஜ் Pulsar 125
    Street | 124.4 CC
    82,712 Onwards
    பல்சர் காதலர்களின் கனவை நிறைவேற்றும் வகையில் குறைவான பட்ஜெட் கொண்ட தேர்வாக நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது பல்சர் 125 மாடல். மிகவும் வெற்றிகரமாக வலம் வரும் பல்சர் 150 பைக்கின் டிசைன் அம்சங்களுடன் 125சிசி எஞ்சினுடன் விலை குறைவான தேர்வாக இருக்கிறது. இந்த பைக்கில் இருக்கும் 124.4சிசி எஞ்சின் அதிகபட்சமாக 11.8 பிஎச்பி பவரையும், 11 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 125சிசி செக்மென்ட்டில் சிறந்த செயல்திறனை வழங்கும் எஞ்சினுடன் சிறந்த தோற்றம் கொண்ட மாடலாக கூறலாம்.
  • 5 . ஹோண்டா SP 125

    New ஹோண்டா  SP 125
    Street | 124 CC
    86,747 Onwards
    இந்திய சந்தையில் மிகச் சிறந்த தேர்வாக ஹோண்டா எஸ்பி 125 பைக் இருந்து வருகிறது. டிசைன், மென்மையான ஓட்டுதல் தரம் கொண்ட எஞ்சினுடன் வாடிக்கையாளர்களின் தேர்வில் முதன்மையானதாக இருந்து வருகிறது. இந்த பைக்கில் ஸ்டார்ட்- ஸ்டாப் சிஸ்டம், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஏசிஜி ஜெனரேட்டர் உள்ளிட்ட பல முக்கிய தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. மேலும், ஹோண்டாவின் ஸ்மார்ட் பவர் தொழில்நுட்பத்துடன் கூடிய இதன் எஞ்சின் சிறந்த செயல்திறனையும், எரிபொருள் சிக்கனத்தையும் ஒருங்கே வழங்கும். இந்த பைக்கில் உள்ள 124சிசி எஞ்சின் அதிகபட்சமாக 10.7 பிஎச்பி பவரையும், 10.9 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.
  • 6 . டிவிஎஸ் Raider 125

    New டிவிஎஸ் Raider 125
    Street | 124.8 CC
    97,054 Onwards
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

Please select your city