சிறந்த 200சிசி பைக் மாடல்கள்

இந்தியாவின் சிறந்த 200 பைக்குகளின் பட்டியலை இங்கே காணலாம். சிறந்த 200சிசி பைக்குகளின் விலை, தொழில்நுட்ப விபரங்கள், வசதிகள் மற்றும் இதர முக்கிய விபரங்களை இங்கே பெறலாம்.

 • 1 . பஜாஜ் பல்சர் என்எஸ்200

  New பஜாஜ் பல்சர் என்எஸ்200
  Street | 199.5 CC
  1,42,052 Onwards
  பஜாஜ் பல்சர் என்எஸ்200 பைக் நேக்கட் ரக ஸ்ட்ரீட் பைக்குகளில் அதிக வரவேற்பை பெற்ற மாடல்களில் ஒன்றாக இருந்து வருகிறது. செயல்திறனிலும், தோற்றத்திலும் சிறப்பானதாக கஇருக்கும் பைக்கில் லிக்யூடு கூல்டு சிஸ்டம் கொண்ட எஞ்சின் இருப்பது முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்த பைக்கில் இருக்கும் 199சிசி எஞ்சின் அதிகபட்சமாக 23 பிஎச்பி பவரையும், 18 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. கேடிஎம் 200 ட்யூக் பைக்கில் இருக்கும் அதே எஞ்சின்தான் என்றாலும், பஜாஜ் நிறுவனத்தின் ட்ரிப்பிள் ஸ்பார்க் தொழில்நுட்பம் மூலமாக செயல்திறன் இதன் எரிபொருள் சிக்கனத் திறன் கூடுதலாக இருப்பது முக்கிய அம்சமாக கூறலாம். இந்த பைக் 0 - 60 கிமீ வேகத்தை 3.8 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 136 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்தது.
 • 2 . டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி

  New டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி
  Street | 197.75 CC
  1,28,275 Onwards
  டிவிஎஸ் அப்பாச்சி வரிசை பைக்குகள் வாடிக்கையாளர்களின் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. அதில், டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக் மாடலும் இளைஞர்களின் சிறந்த தேர்வாக உள்ளது. இந்த பைக் மிக சிறந்த டிசைன் அம்சங்களுடன் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கவர்ந்து வருகிறது. இந்த பைக்கில் இருக்கும் 197.7சிசி எஞ்சின் அதிகபட்சமாக 20.7 பிஎச்பி பவரையும், 18 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 0 - 60 கிமீ வேகத்தை 3.6 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 127 கிமீ வேகம் வரை செல்லும் திறனை பெற்றிருக்கிறது.
 • 3 . பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200

  New பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200
  Sports | 199.5 CC
  1,71,179 Onwards
  பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பைக் சிறந்த ஸ்போர்ட்ஸ் பைக் மாடலாகவும், சரியான விலையிலும் கிடைக்கிறது. இந்த பைக்கின் தனித்துவமான டிசைன் அம்சங்கள், சிறந்த எஞ்சின் ஆகியவை வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றன. இந்த பைக்கில் முழுமையான பாடி ஃபேரிங் பேனல்கள், க்ளிப் ஆன் ஹேண்டில்பார், தனித்துவமான சைலென்சர், டியூவல் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதில் இருக்கும் 199சிசி ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட எஞ்சின் அதிகபட்சமாக 24.5 பிஎச்பி பவரையும், 18.6 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பைக் லிட்டருக்கு 35 கிமீ மைலேஜை வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த பைக் 0- 60 கிமீ வேகத்தை 3.9 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 141 கிமீ வேகத்தை எட்டிவிடும்.
 • 4 . ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200

  New ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200
  Street | 199.6 CC
  1,27,090 Onwards
  இந்தியாவின் 200சிசி பைக் செக்மென்ட்டில் மிகச் சிறந்த அட்வென்ச்சர் பைக் மாடலாக ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 மாறி இருக்கிறது. இந்த பைக்கில் எல்இடி ஹெட்லைட்டுகள், முன்புறத்தில் உயர்த்தப்பட்ட மட்கார்டு அமைப்பு, லாங் டிராவல் அமைப்புடைய ஃபோர்க்குகள், டியூவல் பர்ப்போஸ் டயர்கள், ஸ்போக்குகளுடன் கூடிய சக்கரங்கள் போன்றவற்றுடன் ஆஃப்ரோடு பயன்பாட்டிற்கும் ஏற்ற மாடலாக இருக்கிறது. தவிரவும், புளூடூத் வசதியுடன் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், டர்ன் பை டரன் நேவிகேஷன் வசதியும் உள்ளன. இந்த பைக்கில் இருக்கும் 199.6சிசி எஞ்சின் அதிகபட்சமாக 18.1 பிஎச்பி பவரையும், 17.1 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் தொழில்நுட்பும் உள்ளது.
 • 5 . பஜாஜ் அவென்ஜர் க்ரூஸ் 220

  New பஜாஜ் அவென்ஜர் க்ரூஸ் 220
  Cruisers | 220 CC
  1,39,002 Onwards
  பஜாஜ் அவென்ஜர் க்ரூஸ் 220 பைக் சிறந்த க்ரூஸர் மோட்டார்சைக்கிளாகவும், மிகச் சரியான விலையில் கிடைக்கும் மாடலாகவும் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. நீண்ட தூர பயணங்களுக்கு தேவைப்படும் அம்சங்களுடன், பாரம்பரிய க்ரூஸர் பைக்குகலுக்கான தனித்துவமான தோற்றத்துடன் க்ரூஸர் பைக் பிரியர்கள் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களுடன் திருப்தி படுத்தி வருகிறது. இந்த பைக்கில் அகலமான இருக்கைகள், ஆசுவாசமாக அமர்ந்து ஓட்டுவதற்கான ஹேண்டில்பார், ஃபுட்பெக்குகளுடன் செயல்திறன் மிக்க எஞ்சினுடன் கிடைக்கிறது. இந்த பைக்கில் 220சிசி எஞ்சின் அதிகபட்சமாக 19 பிஎச்பி பவரையும், 17.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. 35 கிமீ மைலேஜையும் இந்த பைக் வழங்க வல்லதாக இருக்கிறது.
 • 6 . ஹீரோ Xtreme 200S

  New ஹீரோ Xtreme 200S
  Sports | 199.6 CC
  1,35,224 Onwards
  நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் சிறந்த ஆரம்ப ரக ஸ்போ்ர்ட்ஸ் பைக் மாடலாக ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் இருந்து வருகிறது. ஃபேரிங் பேனல்களுடன் மிகச் சிறப்பான தோற்றத்தில் இந்த பைக் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. இந்த பைக்கில் புளூடூத் மூலமாக ஸ்மார்ட்ஃபோனையும், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரையும் இணைக்கும் வசதி உள்ளது. அத்துடன், டர்ன் பை டர்ன் நேவிகேஷன் வசதியும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. போன் அழைப்புகள் குறித்த அலர்ட் வசதியும் உள்ளது. இந்த பைக்கில் இருக்கும் 199சிசி எஞ்சின் அதிகபட்சமாக 18.08 பிஎச்பி பவரையும், 16.45 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த பைக்கில் பின்புறத்தில் ஸ்டெப் அட்ஜெஸ்ட் வசதியுடன் மோனோஷாக் அப்சார்பர் பொருத்தப்பட்டு இருக்கிறது. விலை, டிசைன் ஆகியவற்றுடன் ஹீரோமோட்டோகார்ப் நிறுவனத்தின் பரந்து விரிந்த சர்வீஸ் நெட்வொர்க்கும் இந்த பைக்கிற்கு வலு சேர்க்கும் அம்சங்களாக உள்ளன.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

Please select your city