நீண்ட தூர பயன்பாட்டிற்கான சிறந்த பைக்குகள்

நீண்ட தூர பயன்பாடுகளுக்கான இந்தியாவின் சிறந்த பைக்குகளின் பட்டியலை இங்கே காணலாம். நீண்ட தூர பயன்பாட்டிற்கான சிறந்த பைக்குகளின் விலை, தொழில்நுட்ப விபரங்கள், வசதிகள் மற்றும் இதர முக்கிய விபரங்களை இங்கே பெறலாம்.

 • 1 . பஜாஜ் Dominar 400 [2019]

  New பஜாஜ் Dominar 400 [2019]
  Street | 373.27 CC
  2,16,140 Onwards
  நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற அத்துனை அம்சங்களுடன் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது பஜாஜ் டோமினார் 400 பைக். இந்த பைக்கில் எல்இடி ஹெட்லைட்டுகள், டெயில் லைட்டுகள் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. இந்த பைக்கில் இருக்கும் 373.3சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 39.5 பிஎச்பி பவரையும், 35 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளது.
 • 2 . ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்

  New ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்
  Street | 411 CC
  2,14,869 Onwards
  நீண்ட தூர பயணங்கள் மற்றும் சாகசப் பயணங்களுக்கு ஏற்ற சிறந்த அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன். எந்த ஒரு நிலப்பரப்பையும் எதிர்கொள்ளும் வகையில் அதிக தரை இடைவெளி, முன்புறத்தில் லாங் டிராவல் ஃபோர்க்குகள், அதற்கு தக்கவாறு மட்கார்டு அமைப்பு மற்றும் சரியாக அமர்ந்து ஓட்டுவதற்கு சிறப்பான இருக்கை அமைப்பு ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. இந்த மோட்டார்சைக்கிளில் 411சிசி எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 24.5 பிஎச்பி பவரையும், 32 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது.
 • 3 . ஜாவா Perak

  New ஜாவா Perak
  Cruisers | 334 CC
  2,08,297 Onwards
  ஜாவா நிறுவனத்தின் பாபர் வகை மோட்டார்சைக்கிள் மாடலாக நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் ஒரு இருக்கை அமைப்புடன், வால் பகுதி இல்லாத அமைப்பாக இருப்பதே பாபர் வகையாக குறிப்பிடலாம். சொகுசான தனி இருக்கையுடன் செயல்திறன் மிக்க எஞ்சினுடன் நீண்ட தூர பயணங்களுக்கு சிறப்பானதாக இருக்கிறது. இந்த பைக்கில் இருக்கும் 343சிசி எஞ்சின் அதிகபட்சமாக 30 பிஎச்பி பவரையும், 31 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. தனித்துவமான ஸ்டைலை விரும்புவோருக்கு இது நிச்சயமாக சிறந்த தேர்வாக இருக்கும்.
 • 4 . ராயல் என்ஃபீல்டு Interceptor 650

  New ராயல் என்ஃபீல்டு Interceptor 650
  Cruisers | 648 CC
  2,85,159 Onwards
  நீண்ட தூர பயன்பாட்டு வகையில் ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிள் சிறந்த தேர்வாக இருக்கிறது. சிறந்த டிசைன் மற்றும் அதிசெயல்திறன் மிக்க எஞ்சினுடன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பட்ஜெட்டில் மதிப்பை அளிக்கிறது. இந்த பைக்கில் இருக்கை மற்றும் ஹேண்டில்பார் ஓட்டுவதற்கும், கையாள்வதற்கும் சிறப்பானதாக அமைந்துள்ளது. ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிளில் 649சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 47 பிஎச்பி பவரையும், 52 என்எம் டார்க் திறனையும் வழங்குகிறது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் சிறந்த பாதுகாப்பு அம்சமாக உள்ளது.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

Please select your city