முகப்பு »
குடும்ப பயன்பாட்டிற்கான இந்தியாவின் சிறந்த கார்கள்
குடும்ப பயன்பாட்டிற்கான இந்தியாவின் சிறந்த கார்கள்
குடும்ப பயன்பாட்டிற்கான இந்தியாவின் சிறந்த கார்களின் பட்டியலை இந்த பக்கத்தில் காணலாம். சிறந்த மதிப்பீட்டை பெற்ற குடும்ப பயன்பாட்டு அம்சங்களுடன் இந்தியாவில் விற்பனையில் உள்ள கார்களின் விலை, தொழில்நுட்ப விபரம், சிறப்பம்சங்கள் உள்ளிட்ட பல தகவல்களை இங்கே பார்க்கலாம்.
குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக பயணிப்பதற்கான வாய்ப்பை மஹிந்திரா மராஸ்ஸோ வழங்குகிறது. இந்த கார் 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் மாடல்களில் கிடைக்கிறது. இதன் ரகத்தில் மிக அதிக வசதிகளுடன் மிகச் சிறப்பான பயண அனுபவத்தை வழங்கும் விதத்தில் இந்த கார் விற்பனையில் உள்ளது. 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வில் கிடைக்கும் இந்த கார் இடவசதி, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் விலை என அனைத்திலும் நிறைவை தரும் மாடலாக கூறலாம்.
இந்தியாவின் குறைவான விலை பட்ஜெட் எம்பிவி ரக கார் மாடல் டட்சன் கோ ப்ளஸ். அண்மையில் வந்த புதிய மாடலில் ஏராளமான கூடுதல் சிறப்பம்சங்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டு வந்துள்ளது. இதன் டேஷ்போர்டிலேயே கியர் லிவர் மற்றும் ஹேண்ட்பிரேக் கொடுக்கப்பட்டு இருப்பதும், அதிக இடவசதியை அளிக்கும். ஆனால், மூன்றாவது வரிசை இருக்கையில் சிறியவர்கள் மட்டுமே அமர இயலும். இதன் மூன்றாவது வரிசை இருக்கையை நீக்கினால், பெரிய 5 சீட்டர் ஹேட்ச்பேக் கார் போல பயன்படுத்த இயலும். அதிக எரிபொருள் சிக்கனம், குறைவான விலையில் குடும்பத்தினர் ஒன்றாக செல்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
இந்தியாவின் தலைசிறந்த எம்பிவி ரக கார் மாடலாக டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா விளங்குகிறது. டிசைன், சொகுசு வசதிகள், சக்திவாய்ந்த எஞ்சின் தேர்வுகள் என முழுமையான எம்பிவி ரக கார் மாடலாக இதனை கூறலாம். நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற மிகச் சிறந்த இடவசதி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்ப அம்சங்களை பெற்றிருக்கிறது. சொகுசு கார்களுக்கு இணையான அம்சங்களுடன் வாடிக்கையாளர்களின் முதன்மையான தேர்வாக விளங்குகிறது. 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் மாடல்களில் கிடைக்கிறது.
சரியான பட்ஜெட்டில் கிடைக்கும் சிறந்த 7 சீட்டர் எம்பிவி கார் மாடல் மாருதி எர்டிகா. கடந்த ஆண்டு வந்த புதிய தலைமுறை மாடல் வடிவமைப்பு, இடவசதி மற்றும் தொழில்நுட்ப வசதிகளில் முற்றிலும் மேம்படுத்தப்பட்ட மாடலாக வந்தது. குடும்பத்தினர் ஒன்றாக பயணிப்பதற்கு போதுமான இடவசதி மற்றும் இதர அம்சங்களை இந்த கார் பெற்றிருக்கிறது. புதிய எஞ்சின் தேர்வுகளும் இந்த காருக்கு போதுமான திறனை வழங்குகிறது. அதிக எரிபொருள் சிக்கனம் தரும் எம்பிவி ரக கார் மாடலாகவும் பெயர் பெற்றிருப்பதுடன், மாருதியின் சர்வீஸ் நெட்வொர்க் இதற்கு பக்கபலமாக உள்ளது.
ஹோண்டா பிரியர்களின் எதிர்பார்ப்புகளை கச்சிதமாக பூர்த்தி செய்யும் 7 சீட்டர் எஸ்யூவி கார் ஹோண்டா பிஆர்வி. 7 பேர் பயணிப்பதற்கான சிறப்பான இடவசதியுடன் கிடைக்கிறது. இந்த கார் பெட்ரோல், டீசல் மாடல்களில் வருகிறது. டீசல் மாடல் சிறந்த செயல்திறனையும், அதிக எரிபொருள் சிக்கனத்தையும் வழங்குகிறது. போதிய தொழில்நுட்ப வசதிகளுடன் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.
இது எஸ்யூவி ரக மாடலாக நிலைநிறுத்தப்பட்டிருந்தாலும், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு சிறந்த மாற்று தேர்வாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. பிரம்மாண்டமான தோற்றம், சிறப்பான இடவசதி, பிரிமீயம் வசதிகளுடன் விலையிலும் சரியாக இருப்பதால் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. செயல்திறனிலும், மைலேஜிலும் வாடிக்கையாளர்களுக்கு நிறைவை தருகிறது. இந்த கார் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்திலும் கிடைக்கிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் மிகச் சிறந்த எஸ்யூவி மாடல் என்பதுடன், குடும்பத்தினர் ஒன்றாக பயணிப்பதற்கான 7 சீட்டர் மாடலாக இருப்பதும் இதன் முக்கிய அம்சம். இதன் விலையிலான பல எஸ்யூவி மாடல்கள் 5 சீட்டர் மாடலாக இருக்கும் நிலையில், இந்த கார் மிகச் சிறந்த 7 சீட்டர் மாடலாக முன்னிலை பெறுகிறது. சரியான விலை, அதிக தொழில்நுட்ப அம்சங்களுடன் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. மறுவிற்பனை மதிப்பிலும் சிறந்ததாக உள்ளது. கவர்ச்சிகரமான இன்டீரியர் அம்சங்கள், சிறந்த எஞ்சின் தேர்வுகளும் இதன் மதிப்பை கூட்டுகின்றன. இந்தியர்கள் அந்தஸ்தின் அடையாளமாக இந்த எஸ்யூவியை கருதுகின்றனர்.
பிரிமீயம் 7 சீட்டர் காரை தேடுவோருக்கு மிகச் சிறந்த தேர்வாக டொயோட்டா ஃபார்ச்சூனர் உள்ளது. பிரம்மாண்டமான தோற்றம், அதிக இடவசதி மற்றும் எந்த சாலை நிலைகளையும் எதிர்கொள்ளும் அம்சங்களுடன் பிரிமீயம் மாடலாகவும், அந்தஸ்தின் அடையாளச் சின்னமாகவும் பார்க்கப்படுகிறது. இந்த கார் நடைமுறை பயன்பாட்டிற்கும் சிறந்த தேர்வாக இருக்கிறது. பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகளில் புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் கிடைப்பதுடன், இதன் ரகத்தில் விற்பனையில் முன்னிலை வகிக்கிறது.
ரெனோ நிறுவனம் பெரும் எதிர்பார்ப்புடன் களமிறக்கிய மாடல் லாட்ஜி எம்பிவி கார் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. ஆனால், இடவசதி, தொழில்நுட்ப அம்சங்கள், சிறந்த எஞ்சின் என மதிப்பு மிக்க எம்பிவி கார் மாடலாக இருக்கிறது. இதன் தோற்றம் எல்லோரையும் கவரும் வகையில் இல்லை என்பதுதான் குறை. மற்றபடி, சிறந்த 7 சீட்டர் எம்பிவி கார் மாடலாக இருக்கிறது. இந்த காரில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் இரண்டு விதமான ட்யூனிங்கில் கிடைக்கிறது. எரிபொருள் சிக்கனத்திலும் சிறந்த மாடலாக உள்ளது. நீண்ட தூர பயணங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.
பிரிமீயம் எஸ்யூவி மார்க்கெட்டில் சிறப்பான தேர்வாக ஃபோர்டு எண்டெவர் விளங்குகிறது. முரட்டுத்தனமான தோற்றம், அதிக இடவசதி மற்றும் தொழில்நுட்ப வசதிகளுடன் சிறந்த 7 சீட்டர் எஸ்யூவி மாடலாக நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. ஆஃப்ரோடு பயன்பாட்டிற்கும், குடும்பத்தினருடன் நீண்ட தூரம் பயணிக்க விரும்பும் கார் பிரியர்களுக்கு இந்த கார் மிகச் சிறந்த தேர்வாக இருக்கும்.