இந்தியாவின் சிறந்த டீசல் கார்களின் பட்டியலை இந்த பக்கத்தில் காணலாம். சிறந்த மதிப்பீட்டை பெற்ற இந்தியாவில் விற்பனையில் உள்ள டீசல் கார்களின் விலை, தொழில்நுட்ப விபரம், சிறப்பம்சங்கள் உள்ளிட்ட பல தகவல்களை இங்கே பார்க்கலாம்.
ஃபோர்டு ஃபிகோ காருக்கு இந்தியர்கள் மத்தியில் தனி வரவேற்பு உண்டு. அழகிய டிசைன், அருமையான கட்டமைப்புத் தரத்தில் சிறந்த பாதுகாப்பு வசதிகளுடன் கிடைக்கிறது. இந்த கார் பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது. இந்த காரில் வழங்கப்படும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிக செயல்திறன் மிக்கதாகவும், சிறப்பான மைலேஜையும் வழங்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 99 பிஎச்பி பவரையும், 215 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது. இந்த கார் 24.4 கிமீ மைலேஜை வழங்கும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. நகர்ப்புற மற்றும் நெடுஞ்சாலை பயன்பாட்டிற்கு சிறந்த தேர்வாக இருக்கிறது.
பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் டாடா அ்ல்ட்ராஸ் கார் மிகச் சிறந்த தேர்வாக இருக்கிறது. இந்த கார் இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது. இதில், 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வு வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மதிப்பை கொடுத்து வருகிறது. இதன் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டும் டீசல் மாடல் கிடைக்கிறது. இந்த டீசல் எஞ்சின் லிட்டருக்கு 25.11 கிமீ மைலேஜை வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
காம்பேக்ட் ரக செடான் கார் மார்க்கெட்டில் ஹோண்டா அமேஸ் கார் மிகச் சிறந்த தேர்வாக இருக்கிறது. இந்த கார் பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது. இதன் டீசல் மாடலில் வழங்கப்படும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் வாடிக்கையாளர்களின் பேராதரவை பெற்றுள்ளது. இந்த எஞ்சின் 99 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது. மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 24.7 கிமீ மைலேஜையும், சிவிடி மாடல் லிட்டருக்கு 21 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஹோண்டா டபிள்யூஆர்வி எஸ்யூவி தனி வாடிக்கையாளர் வட்டத்துடன் காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் முக்கிய போட்டியாளராக இருந்து வருகிறது. நேர்த்தியான டிசைனுடன் பிரிமீயம் மாடலாக இருக்கிறது. இந்த காரில் வழங்கப்படும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 99 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது. இந்த கார் லிட்டருக்கு 23.7 கிமீ மைலேஜ் வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் விற்பனையில் கலக்கி வரும் ஹூண்டாய் வெனியூ கார் பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது. இதன் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 99 பிஎச்பி பவரையும், 240 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது. இந்த கார் லிட்டருக்கு 23.4 கிமீ மைலேஜை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. டிசைன், வசதிகள், விலை என அனைத்திலும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த டீசல் மாடலாக இந்த கார் இருக்கும் என்று கூறலாம்.
காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் வாடிக்கையாளர்களின் சிறந்த தேர்வாக டாடா நெக்ஸான் எஸ்யூவி இருந்து வருகிறது. பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகளில் இந்த கார் கிடைக்கிறது. இதன் டீசல் மாடலில் 1.5 லிட்டர் எஞ்சின் கொடுக்கப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 108 பிஎச்பி பவரையும், 260 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.. மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது. இதன் டீசல் மாடல் லிட்டருக்கு 22.4 கிமீ மைலேஜை வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவின் காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற மாடலாக கியா சொனெட் கார் உள்ளது. இந்த கார் பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது. இதன் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு அதிகபட்சமாக 97 பிஎச்பி பவரையும், 240 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறனை பெற்றிருக்கிறது. டீசல் ஆட்டோமேட்டிக் மாடல் 112 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. டிசைன், இடவசதி, தொழில்நுட்ப வசதிகள், விலை என அனைத்திலும் அதிக நிறைவை தரும் மாடலாக உள்ளது.